Back Index Next

விடயம் 309 : தொழுது கொண்டிருக்கும் போது ஒருவருக்கு வுழுச் செய்தாரா இல்லையாவென சந்தேகம் ஏற்ப்பட்டால் அவரது தொழுகை பாத்திலாகும். கட்டாயம் வுழுச் செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.

விடயம் 310 : தொழுது முடிந்ததன் பின் ஒருவர் , தொழுவதற்கு முன் அவரது வுழு பாத்திலாகியதா அல்லது அதற்குப் பின் பாத்திலாகியதா ? என்று சந்தேகம் கொண்டால் தொழப்பட்ட தொழுகை சஹீஹாகும்.

விடயம் 311 : ஒருவருக்கு சொட்டுச் சொட்டாக சிறு நீர் வழிந்து கொண்டிருந்தால் , அல்லது மலம் வெளியாவதை தடுக்க முடியாதிருந்தால் , தொழுகையின் ஆரம்ப நேரத்திலிருந்து அது கழாவடைவதற்கு முன்  வுழுச் செய்து தொழும் அளவிற்கு நேரம் கிடைத்தால் ( அதாவது சுத்தமாக இருந்தால்) கட்டாயமாக அந்த நேரத்தில் தான் தொழுகையை நிரை வேற்ற வேண்டும். மேலும் அந்நேரத்தில் தொழுகையின் வாஜிபுகளை மட்டும் தான் செய்ய முடியும்  என்றிருந்தால் கட்டாயம் அவைகளை மாத்திரம் தான் செய்ய வேண்டும். அதான் , இகாமத் , குனூத் போன்ற சுன்னத்துகளை விட வேண்டும்.

விடயம் 312 : வுழு செய்து தொழுவதற்கு போதுமான அளவு நேரம் இல்லாது போனால் , தொழுகையின் போது பலதடவைகள் அவரிலிருந்து சிறு நீர் வெளியானால் , அவருக்கு அதை தாங்குவது கஸ்டம் இல்லை என்றிருந்தால் தனக்கு அருகாமையில் தண்ணீர் பாத்திரத்தை வைத்துக் கொண்டு சிறு நீர் வெளியாகி முடியும் போது இஹ்தியாத்து வாஜிபின் படி வுழு செய்து கொண்டு எஞ்சிய தொழுகையை நிறை வேற்ற வேண்டும். அதேபோல் அவரில் ஒரு வகையான நோய் இருந்து தொழுகையின் போது பல தடவைகள் அவரிலிருந்து மலம் வெளியானால் , மேலே கூறியது போல் அவருக்கு கஸ்டம் இல்லை என்றிருந்தால் அருகில் தண்ணீர் பாத்திரத்தை வைத்துக் கொண்டு மலம் வெளியாகி முடிந்ததும் வுழு செய்து கொண்டு எஞ்சிய தொழுகையை நிறை வேற்ற வேண்டும்.

விடயம் 313 : தொடர்ச்சியாக மலம் வெளியாகும் ஒருவருவருக்கு தொழுகையின் ஒரு பகுதியேனும் வுழுவுடன் நிறைவேற்ற முடியுமாயின் அதை நிறைவேற்றுவார். பின் ஒவ்வொரு தடவைக்கும் பிறகு சிரமம் இல்லையென்றிருந்தால் வுழுவை புதுப்பித்துக் கொள்வார்.

விடயம் 314 : தொடர்ச்சியாக சலம் வெளியாகும் ஒருவருக்கு , இரண்டு தொழுகைக்கு இடையில் சிறு நீர் துளி அவரிலிருந்து வெளியாக இல்லை என்றிருந்தால் ஒரு வுழுவுடன் இரண்டு தொழுகையையும் நிறை வேற்ற முடியும். இன்னும் தொழுகைக்கு மத்தியில் வெளியாம் துளிகளில் பிரச்சினை இல்லை. பேணுதலை கவனிப்பது சிறந்தது என்றாலும் சரியே.

விடயம் 315 : தொடர்ச்சியாக மலம் சலம் வெளியாகும் ஒருவருக்கு தொழுகையில் எந்தவொரு பகுதியையும் வுழுவுடன் நிறைவேற்ற முடியாது போனால் பல தொழுகையை ஒரு வுழுவுடன் நிறைவேற்ற முடியும். ஆனால் உணர்வுடன் மலம் , சலம் கழித்தாலோ அல்லது வுழுவை பாத்திலாக்கும் ஒன்றும் அவருக்கு ஏற்பட்டாலோ தவிர இந்நிலையில் அப்படிச் செய்ய முடியாது.

விடயம் 316 : பின்துவாரத்தால் வெளியாகும் காற்றை தடுக்க முடியாதவாரு ஒருவருக்கு ஒரு வகையான நோய் இருந்தால் அவரும் மலம் சலம் செளியாவதை தடுக்க முடியாதவர்கள் செய்வதைப் போன்று செய்ய வேண்டும்.

விடயம் 317 : ஒருவருக்கு தொடர்ச்சியாக மலம் வெளியானால் கட்டாயமாக ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்து தொழுகையை தொடர வேண்டும். ஆனால் தொழுது முடிந்ததும் செய்ய வேண்டிய மறக்கப் பட்ட தஷஹ்ஹுத் , சுஜுத் இன்னும் இஹ்தியாத்துடைய தொழுகை போன்றவற்றை தொழுது மடிந்ததும் உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்கின்ற போது வுழுச் செய்வது அவசியமில்லை.

விடயம் 318 : துளிதுளியாக சிறு நீர் வெளியாகும் ஒருவர் தொழுகையின் போது வெளியாகும் சிறு நீர் மற்ற இடங்களில் பட்டு விடாதவாறு பேக் , பஞ்சி போன்ற சிறு நீர் மற்ற இடங்களில் படுவதை தடுப்பவைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்தியாத்தே வாஜிபின் படி ஒவ்வொரு தொழுகைக்கும் முன்பும் நஜிஸாகியுள்ள சிறு சீர் வெளியாகும் இடத்தையும் பேக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மலம் வெளியாவதை தடுக்க முடியாத ஒருவர் முடிந்தால் தொழுகையின் ஒரு பகுதி வரைக்கும் மலம் மற்ற இடங்களில் படுவதை தடுக்க வேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் அவருக்கு கஸ்டம் இல்லை என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்பும் மலம் வெளியாகும் இடத்தை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

விடயம் 319 : மலம் சலம் வெளியாவதை தடுக்க முடியாத ஒருவர் முடியுமாக இருந்தால் தொழுகையில் சிறு நேரம் வரை அவை வெளியாவதை தடுக்க வேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் பிரகாரம் அவரது நோயை குணமடையச் செய்யலாம் என்றிருந்தால் அதற்கு சிகிச்சை அழிக்க வேண்டும்.

விடயம் 320 : மலம் சலம் வெளியாவதை தடுக்க முடியாத ஒருவர் தனது வியாதி குணமடைந்த பின் நோயாளியாக இருந்த போது அதற்குறிய சட்டங்களின் பிரகாரம் செய்யப் பட்ட அமல்களை கழா செய்வது அவசியமில்லை. ஆனால் தொழுது கொண்டிருக்கும் போது அவரது நோய் குணமடைந்தால் அதற்கு முதல் தொழுதவற்றை கட்டாயமாக கழாச் செய்ய வேண்டும்.

கட்டாயமாக வுழுச் செய்ய வேண்டியவைகள்

விடயம் 321 : ஆறு விடயங்களைச் செய்வதற்கு கட்டாயமாக வுழு செய்ய வேண்டும்

முதலாவது வாஜிபான தொழுகையை நிறைவேற்றுவதற்காக வுழுச் செய்ய வேண்டும். மையித்துடைய தொழுகையைத் தவிர.

இரண்டாவது மறந்த ஸஜதா , தஷஹ்ஹுதை நிறைவேற்றுவதற்காக , அதற்கும் தொழுகைக்கு இடையிலும் வுழுவை கடமையாக்கும் ஒன்று ஏற்ப்பட்டிருந்தால் வுழுச் செய்தல்.

மூன்றாவது வாஜிபான தவாபை நிறைவேற்றுவதற்காக.

நான்காவது வுழுச் செய்வேன் என்று நேர்ச்சை அல்லது சத்தியம் செய்திருந்தால்.

ஐந்தாவது தன் உடம்பின் ஒரு பகுதி குர்ஆனில் சேர வேண்டும் என நேர்ச்சை செய்திருந்தால்.

ஆறாவது குர்ஆனின் நஜிஸான பகுதியை சுத்தப்படுத்த அல்லது மலசல கூடம் மற்றும் அது போன்ற இடங்களில் இருந்து அதை வெளியாக்க , அதைச் செய்யும் போது உடம்பின் ஒரு பகுதி குர்ஆன் எழுத்துக்களில் பட்டு விடும் என்றிருந்தால். வுழுச் செய்வது தாமதமாகி குர்ஆனுக்கு கண்ணியம் கொடுக்காது போய் விடும் என்றிருந்தால் வுழு செய்யாது அதை மலசல கூடத்திலிருந்து எடுக்க வேண்டும். அல்லது நஜிஸான இடத்தை சுத்தம் செய்யும் போது முடிந்தளவு குர்ஆன் எழுத்தில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

விடயம் 322 : வுழு இல்லாது குர்ஆனுடைய எழுத்தை தொடுதல் ஹராமாகும். ஆனால் அதன் மொழி பெயர்ப்பை தொடுவதில் பிரச்சினையில்லை.

விடயம் 323 : சிறுபிள்ளை , பைத்தியகாரனை குர்ஆனைத் தொடுவதிலிருந்து தடுப்பது வாஜிப் இல்லை. ஆனால் அவர்கள் அதைத் தொடுவது குர்ஆனை கண்ணியக்குறைவாக கருதுவதற்காக வேண்டியிருந்தால் கட்டாயம் தடுக்க வேண்டும்.

விடயம் 324 : வுழு இல்லாத ஒருவர் இஹ்தியாத்து வாஜிபின் படி அல்லாஹ் என்ற பெயரை எந்த மொழியில் இருந்தாலும் தொடக் கூடாது.

விடயம் 325 : தொழுகையின் நேரத்துக்கு முன்னர் சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்ற நிய்யத்துடன் வுழுச் செய்தாலோ அல்லது குளித்தாளோ அது சஹீஹாகும். மேலும் அல்லாஹுக்காக இதைச் செய்கிறேன் என்ற நிய்யத்துடன் வுழுச் செய்தால் அது போதுமாகும்.

விடயம் 326 : மையித்து தொழுகையை நிறைவேற்ற , மரணித்தவர்களை ஷியாரத் செய்ய , பள்ளி வாயல்களுக்கும் இமாம்கள் அடக்கப் பட்டிருக்கும் ஹரம்களுக்குச் செல்வதற்கும் வுழுச் செய்து கொள்வது முஸ்தஹப்பாகும். அதேபோல் தன்னுடன் குர்ஆனை வைத்திருப்தற்கும் அதை எழுதுவதற்கும் , அதன் ஓரப் பகுதியை தொடுவதற்கும் , தூங்குவதற்கும் வுழுச் செய்வது முஸ்தஹப்பாகும். இவைகளில் ஒன்றுக்காக வுழுச் செய்து பின் வுழுவுடன் செய்ய வேண்டியவைகளையும் செய்ய முடியும். உதாரணமாக  அவ்வுழு மூலம் தொழுதல்.

வுழுவை முறிப்பவை

விடயம் 327 : வுழுவை முறிப்பவை ஏழு

  முதலாவது சலம்

  இரண்டாவது மலம்

   மூன்றாவது பின் துவாரத்தால் காற்று வெளியாகுதல்.

   நான்காவது உணர்வு இல்லாத தூக்கம் அதாவது கண் பார்க்காது , காது கேலாது. ஆனால் கண் பார்க்காது காதால் கேட்டால் அதன் மூலம் வுழு பாத்திலாகாது.

   ஐந்தாவது புத்தியபை போக்கும் ஒவ்வொன்றும் உதாரணம்  பைத்தியம் ¸ மயக்கம் போன்றவை.

   ஆறாவது இஸ்திஹாலா ( அதன் விரிவு பின்னர் கூறப்படும்)

   ஏழாவது குளிப்பை கடமையாக்குபவை உதாரணமாக ஜனாபத் போன்றவை. மையித்தை தொட்டவன் விடயத்தில் இச்சட்டம் அமுல் படுத்தப் படுவது இஹ்தியாத்தின் படியாகும்.

வுழு ஜபிரேயின் சட்டங்கள்

காயத்தின் மேல் வைக்கப் படும் மருந்தும் அதன் கட்டப் படும் பொருளும் ஜபீரே என்று அழைக்கப் படும்.

விடயம் 328: வுழுவுடைய உறுப்புக்களில் ஒரு இடத்தில் காயம் , பொக்கலம் அல்லது முறிவு ஏற்ப்பட்டால் , அதன் மேல் பகுதி திறந்து இருந்து தண்ணீர் படுவதும் அவருக்கு தீங்கை ஏற்ப்படத்தாது என்றிருந்தால் வழமை போன்று வுழு செய்ய வேண்டும்.

விடயம் 329: முகம் அல்லது கைகளில் காயம் , பொக்கலம் அல்லது முறிவு ஏற்பட்டிருந்தால் , அதன் மேற்ப்பகுதியும் திறந்து இருந்து தண்ணீரை அதில் ஊற்றுவது தீங்கை ஏற்ப்படுத்தும் என்றிருந்தால் கட்டாயமாக அதன் ஓரப் பகுதிகளை கழுவ வேண்டும். இன்னும் ஈரமான கையை அதன் மேல் தடவுவது தீங்கை விளைவிக்காது என்றிருந்தால் இஹ்தியாத்தின் படி அதன் மேல் தடவ வேண்டும். மாறாக தீங்கு ஏற்படும் என்றிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதன் மேல் சுத்தமான ஆடையை வைத்து அதன் மேல் ஈரக் கையை தடவ வேண்டும். இதுவும் தீங்கை ஏற்படுத்தும் என்றிருந்தாலோ அல்லது காயம் நஜிஸாக இருந்து அதன் மேல் தடவ முடியாது இருந்தாலோ அதன் ஓரப் பகுதிகளை வுழுச் செய்கின்றார் என்று சொல்லப் படுகின்ற அளவுக்கு மேலிருந்து கீழ் நோக்கி கழுவ வேண்டும். கடைசியாக கூறியதில் சந்தர்ப்பத்தில் தயம்மமும் செய்ய வேண்டும்.

விடயம் 330: காயம் அல்லது முறிவு தலை மீது அல்லது காலின் மீது இருந்து அதன் மேற்பகுதியும் திறந்திருந்தால் அவைகளின் மேல் மஸ்ஹு செய்ய முடியாது போனால் சுத்தமான துனி ஒன்றை அதன் மேல் வைத்து துணியின் மேல் கையில் இருக்கும் வுழுவுடைய நீரை தடவ வேண்டும். மேலும் துணியை வைப்பது முடியாது போனால் மஸ்ஹு செய்ய வேண்டிய அவசியமில்லை ஆனால் வுழு செய்து முடிந்ததும் கட்டாயமாக தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 331 : காயம் , முறிவு , பொக்குலத்தின் மேல் பகுதி திறக்காது ஒட்டியிருந்தால் அதை திறந்து கழுவுவது கஸ்டமில்லை என்றிருந்தால் , தண்ணீரும் அவருக்கு தீங்கை ஏற்ப்படுத்தாது என்றிருந்தால் அதன் மேல் பகுதியை திறந்து கவுவ வேண்டும். காயமும் அது போன்றவை தலையின் முன் பகுதியில் அல்லது முகம் , கால் , கைகளில் இருந்தாலும் சிரியே.

விடயம் 332: காயம் , முறிவு அல்லது பொக்ககுலம் முகம் அல்லது கைகலில் இருந்து அதை திறக்க முடியும் என்றிருந்தால் , தண்ணீரை அதன் மேல் ஊற்றுவது தீங்கு ஏற்ப்படுத்தும் என்றிருந்து ஈரக்கையை அதன் மேல் தடவ முடியும் என்றிருந்தால் ஈரக் கையை அதன் மேல் தடவுவது வாஜிபாகும்.

விடயம் 333:  காயத்தின் மேல் பகுதியை திறக்க முடியாது என்றிருந்தால் , ஆனால் காயமும் அதன் மேல் வைக்கப் பட்டிருக்கும் துணி சுத்தமாக இருந்து தண்ணீர் செலுத்த முடியும் அதன் மூலம் எவ்வித தீங்கும் ஏற்படாது என்றிருந்தால் அப்படியே செய்ய வேண்டும். ஆனால் அதன் மேல் வைக்கப் பட்டுள்ளவை நஜிஸாக இருந்து அதை சுத்தம் செய்வதும் காயத்தி p ன் மேல் தண்ணீரை பட வைப்பதும்  கஸ்டம் இல்லை என்றிருந்தால் அவ்வாறே செய்ய வேண்டும். வுழுச் செய்யும் போது காயத்தில் நீரைப் பட வைக்க வேண்டும். இதற்கு மாறாக இருந்தால் அதாவது நீர் படுவது தீங்கை ஏற்படுத்தும் என்றிரந்தாலோ அல்லது துணி நஜிஸாக இருந்து அதை சுத்தப் படுத்த முடியாது என்றிருந்தால் காயத்தை வுழுவுடைய விடயத்தில் சொல்லப் பட்டது போல் கழுவ வேண்டும். மேலும் பெண்டேச் சுத்தமாக இருந்தால் அதற்கு மேல் மஸ்ஹு செய்ய வேண்டும். மாறாக நஜிஸாக இருந்தால் அல்லது அதன் மேல் ஈரமான கையை தடவ முடியாது ( உதாரணமாக அதில் இருக்கும் மருந்து கையில் ஒட்டி விடும்) என்றிருந்தால் பெண்டேச்சுடைய பகுதிதான் என்று கருதும் அளவிற்கு சுத்தமான துணி ஒன்றை அதன் மேல் வைத்து அதற்கு மேல் தடவ வேண்டும். இப்படி செய்ய முடியாது என்றிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி வுழு செய்ய வேண்டும் பின் தயம்மமும் செய்ய வேண்டும்.

விடயம் 334: பெண்டேச் முகத்தின் அல்லது ஒரு கையின் எல்லா இடங்களிலும் போடப் பட்டிருந்தால் அங்கு பெண்டேச்சுடைய சட்டத்தையும் வுழுவே ஜபீரெவுடைய சட்டத்தையும் கவனிப்பது போதுமாகும். ஆனால் அது வுழுவின் கூடுதலான இடங்களில் போடப்பட்டிருந்தால் பெண்டேச்சுடைய சட்டம் அங்கு நடை முறைப் படுத்தப் பட மாட்டாது. கட்டாயம் தயம்மமும் செய்ய வேண்டும்.

விடயம் 335: கையிலும் விரலிலும் பெண்டேச் உள்ள ஒருவர் வுழுச் செய்யும் போது  ஈரக் கையை அதன் மேல் தடவி இருந்தால் தலையையும் காலையும் அதன் மூலம் மஸ்ஹுசெய்யவும் முடியும் அல்லது வேறு நீலமான மஸ்ஹுசெய்யவும் முடியும்.

விடயம் 336: காலின் மேல் எல்லாம் பெண்டேச் போடப் பட்டிருந்து அதன் விரல் பக்கமிருந்து சிறு பகுதி பெண்டேச் இல்லாமலும் அதேபோல் மேல் பகுதியியும் திறந்து இருந்தால் காலில் பெண்டேச் இல்லாத இடத்தில் காலுக்கு மேலும் பெண்டேச் இருக்கின்ற இடத்தில் அதற்கு மேலும் மஸ்ஹுசெய்ய வேண்டும்.

விடயம் 337: முகத்தில் அல்லது கைகளில் பல பெண்டேச் இருந்தால் கட்டாயமாக அவைகளுக்கிடையில் உள்ள இடத்தை கழுவ வேண்டும். தலையில் அல்லது காலில் பெண்டேச் இருந்து வாஜிபான அளவு மஸ்ஹு செய்யும் அளவிற்கு இடம் இருந்தால் கட்டாயமாக அந்த இடத்தைத் தான் மஸ்ஹு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்கு இடையில் மஸ்ஹு செய்ய வேண்டும். பெண்டேச் உள்ள இடங்களில் பெண்டேச்சுடைய சட்டத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

விடயம் 338: காயத்தின் மீது போடப் பட்டிருக்கும் பெண்டேச் அதை விட அதகிமான இடத்தைப் பிடித்திருந்தால் அதை அகற்றுவும் முடியாது இருந்தால் பெண்டேசுடைய சட்டத்தின் படி செயல் படவேண்டும். அத்தோடு இஹ்தியாத்து வாஜிபின் படி தயம்மமும் செய்ய வேண்டும். இன்னும் அதை அகற்றுவது முடியுமாக இருந்தால் கட்டாயமாக அதை அகற்ற வேண்டும். காயம் முகத்தில் அல்லது கையில் இருந்தால் அதன் ஒருப் பகுதிகளை கழுவ வேண்டும். காயம் தலையில்  அல்லது காலில் இருந்தால் அதன் ஓரப்பகுதிகளை மஸ்ஹுசெய்ய வேண்டும். காயமுடைய இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அதன் பகுதியில் சொல்லப் பட்டிருக்கின்றவாறு செய்து கொள்வான்.