Back Index Next

விடயம் 487 : ஆதத்து வக்திய்யா உள்ள பெண் கட்டாயம் தன் உறவினர்களுக்கு இரத்தப்போக்கு இருக்கும் நாட்களை தனக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னும் அவளுக்கு உறவினர்கள் இல்லை என்றிருந்தாலோ அல்லது எண்ணிக்கையில் அவர்களுக்கு மாற்றமாக இருந்தாலோ , கட்டாயம் இவள் ஒவ்வொரு மாதமும் இரத்தப்போக்கு ஈரம்பிக்கும் முதலாவது நாளிலிருந்து இஹ்தியாத்து வாஜிபின் படி ஏழு நாளை ஹைழுடைய நாளாகவும் மற்றதை இஸ்திஹாழாவுடைய நாட்களாவும் கருத வேண்டும்.

3.சாஹிபு ஆததில் அததிய்யா

விடயம் 488 : ஆதத்து அததிய்யா உள்ள பெண்கள் அதாவது இரத்தப்போக்கு இருக்கும் நாட்களின் சரியான எண்ணிக்கை அறிந்த பெண்கள் மூன்று வகைப்படும்.

முதலாவது: தொடராக இரண்டு மாதங்கள் ஒரு பெண்ணுக்கு இரத்தப்போக்கு இருந்த நாட்கள் ஒரே அளவாக இருந்து அனால் அது வெளியாக ஆரம்பித்த நாட்கள் ஒன்றாக இருக்கவில்லை என்றால் , இந்நிலையில் அவளுக்கு இரத்தப்போக்கிருந்த அத்தனை நாளும் ஹைழுடைய நாட்களாகும். உதாரணமாக முதலாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஐந்தாம் நாள் வரைக்கும் இரண்டாவது மாதத்தில் பதினோராம் நாளிலிருந்து பதினைந்தாம் நான் வரைக்கும் இரத்தப்போக்கு இருந்தால் ஐந்து நாட்கள் அவளது ஹைழுடைய நாட்களாகும்.

இரண்டாவது: இரத்தப்போக்கிலிருந்து சுத்தமாகாத பெண் , ஆனால் தொடராக இரண்டு மாதங்களிலும் இருந்த இரத்தப்போக்கில் சில நாட்களில் ஹைழுடைய அடையாளங்கள் இருந்தன மற்றதில் இஸ்திஹாழாவுடைய அடையாளங்கள் இருந்தால் , இரண்டு மாதத்திலும் வெளியான இரத்தத்தில் ஹைழுடைய அடையாளங்கள் இருந்தவை ஒரே அளவாக இருந்து அதன் திகதி சமமாக இருக்கவில்லை என்றால் இந்நிலையில் இரத்தப்போக்கில் ஹைழுடைய அடையாளங்கள் காணப்பட்ட நாட்கள் அவளது ஹைழுடைய நாட்களாகும். உதாரணமாக முதலாவது மாதத்தில் முதலாம் நாளிலிருந்து ஐந்தாம் நாள் வரைக்கும் இரண்டாம் நாளிலிருந்து பதினோராம் நாளிலிருந்து பதினைந்தாம் நாள் வரைக்கும் வெளியானவை ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருக்கின்றது மற்றவை இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருக்கின்றது இந்நிலையில் அவளது ஹைழுடைய அளவு ஐந்து நாட்களாகும்.

மூன்றாவது: ஒரு பெண்ணுக்கு தொடராக இரண்டு மாதங்கள் மூன்று நாட்கள் அல்லது அதை விட அதிகமாக இரத்தப்போக்கு இருக்கின்றது. இன்னும் அவள் ஒரு நாள் அல்லது அதை விட அதிகமான நாள் சுத்தமாக இருக்கின்றால். பின் இரண்டாவது தடவையும் இரத்தப்போக்கு ஆரம்பிக்கின்றது. முதலாவது மாதத்தில் இரத்தப்போக்கு ஆரம்பித்த நேரம் இரண்டாவது மாதத்துடன் வித்தியாசப் பட்டால் இந்நிலையில் இரத்தப்போக்கு இருந்த அத்தனை நாட்களும் இடையில் சுத்தமாக இருந்த நாட்களுடன் சேர்ந்து பத்து நாட்களுக்கு அதிகமாகாது இருந்தால் அதன் நாட்களும் ஒரே அளவாக இருந்தால் , இரத்தப்போக்கு இருந்த நாட்கள் இடையில் சுத்தமாக இருந்த நாட்கள் அனைத்தும் ஹைழுடைய நாட்களாகும். இரண்டு மாதத்திலும் இடையில் சுத்தமாக இருந்த நாட்கள் சமமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக முதலாவது மாதத்தில் முதலாம் நாளிலிருந்து மூன்றாமத் நாள் வரை இரத்தப்போக்கு இருந்தது பின் இரண்டு நாட்கள் சுத்தமாக இருந்து மீண்டும் மூன்று நாட்கள் இரத்தம் வெளியாகின்றது. இரண்டாவது மாதத்தில் பதினோறாம் நாளிலிருந்து பதிமூன்றாம் நாள் வரை இரத்தப்போக்கு இருந்து பின் ஒரு நாள் அல்லது அதை விட அதிகமாக அல்லது குறைவாக சுத்தமாக இருந்து மீண்டும் இரத்தப்போக்கு ஆரம்பித்தால் அவை இரண்டும் எட்டு நாட்களுக்கு அதிகமாக வில்லை என்றால் அவளுடைய ஹைழுடைய அவளு எட்டு நாட்களாகும்.

விடயம் 489 : ஆதத்து அததிய்யா உள்ள பெண் , வழமையாக இரத்தப்போக்கு இருக்கும் நாளை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்து அது பத்து நாட்களுக்கும் அதிகமானால் , வெளியான அனைத்து இரத்தமும் ஒரேபோல் இருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி இரத்தப் போக்கு ஆரம்பித்த நாளிலிருந்து மாதாந்தப் போக்குடைய நாட்கள் வரைக்குமுள்ளவை ஹைழாகவும் மற்றதை இஸ்திஹாழாவாகவும் கருதவேண்டும். வெளியான அனைத்து இரத்தமும் ஒன்று போல் இல்லை என்றிருந்தால் , ஆனால் அதில் சிலநாட்கள் வெளியானவை ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்து தான் ஹைழுடைன் இருக்கும் நாட்களுடன் ஒரே அளவாக இருந்தால் , கட்டாயம் அதை ஹைழுடைய நாட்கள் என்றும் மற்றதை இஸ்திஹாழாவுடைய நாட்கள் என்றும் கருத வேண்டும். இரத்தப்போக்கில் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டுள்ள நாட்கள் தனது ஹைழுடைய நாட்களை விட அதிகமாக இருந்தால் , தனது ஹைழுடைய அளவை மட்டும் கருத்தில் கொண்டு அதை ஹைழாகவும் மற்றதை இஸ்திஹாழாகவும் கருதவேண்டும். இன்னும் இரத்தப்போக்கில் ஹைழுடைய  அடையாளங்களைக் கொண்டுள்ள நாட்கள் தனது ஹைழுடைய நாட்களை விட குறைவாக இருந்தால் அந்த நாட்களையும் அதன் பின் வரும் நாட்களிலிருந்து ஹைழுடைய நாட்களின் அளவு வரும் வரை சேர்த்து விட்டு அதை ஹைழாகவும் மற்றதை இஸ்திஹாழாவாகவும் கருத வேண்டும்.

4.முழ்தரிபா

விடயம் 490 : முழ்தரிபா என்பது ஒரு பெண்ணுக்கு பல மாதங்கள் மாதாமாதம் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது ஆனால் அதிலிருந்து சரியான ஒரு நாளை தேதியை அறியாத ஒரு பெண். இப்படியான பெண்ணுக்கு பத்து நாட்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்தால் அது அனைத்தும் ஒரே அமைப்பில் இருந்தால் , அவளுடைய உறவினர்களது மாதாந்ததப்போக்கு ஏழு நாட்களாக இருந்தால் அவளும் தனது ஹைழை ஏழு நாட்களாக கருத வேண்டும். மற்றதை இஸ்திஹாழாவுடையதாக கருதவேண்டும். ஆனால் குறைவாக இருந்தால் உதாரணமாக ஐந்து நாட்களாக இருந்தால் அவள் ஐந்தாகவே கருதவேண்டும். அவர்களுடைய இரதத்தப்போக்கிற்கும் இவளுடைய இரத்தப்போக்கிற்குமிடையில் இரண்டு நாட்கள் வித்தியாசப்படுகின்றன அவ்விரண்டு நாட்களிலும் இஹ்தியாத்து வாஜிபின் படி ஹைழுள்ளவள் மீது ஹராமான வில்லக்கப்பட்ட விடயங்களை தவிர்ந்து கொண்டு இஹ்திஹாழாவுள்ள பெண் செய்பவைகளை செய்ய வேண்டும். அதாவது முன்பு முஸ்தஹாழாவான பெண்ணுக்கு சொல்லப்பட்ட சட்டத்தின் பிரகாரம் தனது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ளவேண்டும். இன்னும் உறவினர்களது இரத்தப்போக்கு ஏழு நாட்களுக்கு அதிகமானால் உதாரணமாக ஒன்பது நாட்கள் போல் , இந்நிலையில் ஏழு நாளை ஹைழாக கருதி மீதி இரண்டு நாளில் முஸ்தஹரிதவான பெண் செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஹைழான பெண்ணின் மீது விலக்கப்பட்டுள்ளதை தவிர்ந்தும் கொள்ளவேண்டும்.

விடயம் 491 : முழ்தரபாவான பெண்ணுக்கு பத்து நாட்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்து அதில் சில நாட்களில் வெளியானவை ஹைழுடைய அடையாளங்களையும் மற்றவை இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருப்பகைவள் ஹைழாகும். இன்னும் இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருப்பவை இஸ்திஹாழாவாகும். ஹைழுடைய அடையாளம் கொண்ட இரத்தம் மூன்று நாட்களுக்கு குறைவாக வெளியானால் இந்நிலையில் அவள் தன் உறவினர்களைப் பார்க்கவேண்டும். அவர்களது மாதாந்தப்போக்கு ஏழு நாட்களாக இருந்தால் இவளும் ஏழு நாட்களாக கருதி மற்றதை இஸ்திஹாழாவுடையதாக கருத வேண்டும். தன்குடும்பத்தினரது மாதாந்தப்போக்கு ஏழு நாட்களுக்கு குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் மேலே கூறிய விடயத்தில் கூறப்பட்டது போல் செய்து கொள்ளவேண்டும். அதாவது கட்டாயம் அதை ஹைழாக கருதி எழு நாள் வரைக்கும் மேலே சென்ற விடயத்தில் கூறப்பட்டுள்ளவாறு செய்து கொள்ளவேண்டும். இன்னும் ஹைழுடைய அடையாளங்கள் கொண்ட இரத்தப்போக்கின் பத்து நாட்கள் செல்வதற்கு முன் இரண்டாவது முறையும் இரத்தம் வெளியாகி அதுவும் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , உதாரணமாக ஐந்து நாட்கள் இரத்தம் கருப்பாகவும் ஒன்பது நாட்கள் மஞ்சளாகவும் மீண்டும் ஐந்து நாட்கள் கருப்பாக இரத்தம் வெளியானால் , கட்டாயம் முதவாலது இரத்தத்தை ஹைழாக கருத வேண்டும். அதன் மற்றவையை எழு நாட்கள் வரைக்கும் மேலே உள்ள விடயத்தில் கூறியது போல் செய்து கொள்ளவேண்டும்

5. முப்ததியா

விடயம் 492 : முப்ததியா என்பது வாழ்கையில் முதல் தடவையாக இரத்தப்போக்கு ஏற்படும் பெண்ணாகும். இப்பெண்ணுக்கு பத்து நாட்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்தால் , வெளியான அனைத்தும் ஒரேமாதியாகவும் இருந்தால் வக்திய்யாவுடைய பிரிவில் சொல்லப்பட்டது போன்று தன் உறவினர்களைக் கவனித்து ஹைழாகவும் மற்றதை இஸ்திஹாழாவாகவும் கருத வேண்டும்.

விடயம் 493 : முப்ததியாவான பெண்ணுக்கு பத்து நாட்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்து அதில் சில நாட்கள் வெளியானவையில் ஹைழுடைய அடையாளங்கள் இருந்து சில நாட்கள் வெளியானதில் இஸ்திஹாஸாவுடைய அடையாளங்கள் இருந்தால் , ஹைழுடைய அடையாளங்கள் இருந்தவை மூன்று நாட்களுக்கு குறைவாகவும் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் இல்லாது இருந்தால் , ஹைழுடய அடையாளங்கள் இருந்தவை ஹைழாகும் அதன் அடையாளம் இல்லாதவை இஸ்திஹாழாவுடையதாகும். ஹைழுடைய அடையாளங்கள் இருக்கும் வெளியாகி பத்து நாட்கள் செல்வதற்து முன் இரண்டாவது தடவையாகவும் இரத்தப்போக்கு ஆரம்பித்து அதுவும் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் உதாரணமாக ஐந்து நாட்கள் கருத்த இரத்தமும் ஒன்பது நாட்கள் மஞ்சள் இரத்தமும் மீண்டும் ஐந்து நாட்கள் கருத்த இரத்தம் வெளியானால் கட்டாயம் முதலாவது ஹைழுடைய அடையாளங்கள் கொண்ட இரத்தத்தை ஹைழாக கருதவேண்டும். நாள் கணக்கில் தன் உறவினர்களைக் கவனித்து மற்றதை இஸ்திஹாழாவுடையதாக கருதுவாள்.

விடயம் 494 :  முப்ததியாவான பெண்ணுக்கு பத்து நாட்களை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்து அதில் சில நாட்களில் வெளியானவை ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் இன்னும் சில நாட்கள் வெளியானவை இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , ஹைழுடைய அடையாளங்களை ; க கொண்டிருந்த இரத்தம் மூன்று நாட்களுக்கு குறைவாக அல்லது பத்து நாட்களுக்கு அதிகமாக இருந்தால்  இஹ்தியாத்து வாஜிபின்படி ஹைழுடைய அடையாளங்களைக் கொண்ட முதலாவது இரத்தத்தை ஹைழு h கருத வேண்டும். இன்னும் நாள் கணக்கில் தன் உறவினர்களைக் கவனித்து மற்றதை இ ; ஸதிஹாவுடையதாக கருத வேண்டும்.

6.நாஸியா

விடயம் 495 : நாஸியா என்பது தனது ஹைழை மறந்த பெண்ணாகும். இப்பெண்ணுக்கு பத்து நாட்களை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்தால் , பத்து நாள் வரை வெளியாகும் இரத்தத்தில் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருப்பவைகளை ஹைழாக கருத வேண்டும். மற்றதை இஸ்திஹாழாவாக கருதவேண்டும். ஹைழை அதன் அடையாளங்களை வைத்து அறிய முடியாது போனால் இஹ்தியாத்து வாஜிபின் படி முதல் ஏழு நாளை ஹைழு என்றும் மற்றதை இஸ்திஹா ih என்றும் கருத வேண்டும். 

ஹைழு பற்றிய வேறு விடயங்கள் 

விடயம் 496 : முப்ததியா , முழ்தரிபா , நாஸியா உள்ள பெண்ணும் ஆதது அததிய்யா இருக்கின்ற பெண்ணுக்கு இரத்தம் வெளிப்பட்டு அது ஹைழுடைய அடையாளங்க ளைக் கொண்டிருந்தால் அல்லது மூன்று நாள் தொடரும் என்று உறுதி கொண்டால் அவள் வணக்க வழிபாடுகளை விட வேண்டும். அதற்கு பின்னர் அவள் அது ஹைழு அல்ல என்று அறிந்தால் செய்யாது விடப்பட்ட வணக்கங்களை எல்லாம் கழா செய்ய வேண்டும். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வெளிப்படும் என்று உறுதி கொள்ள வில்லை என்றால் , இன்னும் அது ஹைழுடைய அடையாள ங்களையும் கொண்டிருக்க வில்லை என்றால் , இஹ்தியாத்து வாஜிபின் படி மூன்று நாட்கள் இஸ்திஹாழாவான பெண் செய்வதைப் பொல் செய்து கொள்ளவேண்டும். ஹைழுடையவள் மீது ஹராமானவைகளைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். அது மூன்று நாட்களுக்கு முதல் இரத்தப் போக்கு சுத்தமாக வில்லை என்றால் கட்டாயம் அதை ஹைழு என்று கருதவேண்டும்.

விடயம் 497 : மாதாந்த ருது உள்ள பெண் , அது ஹைழு ஏற்படும் நேரத்தில் இருந்தாலும் சரி , அல்லது ஹைழுடைய எண்ணிக்கையில் சரியாக இருந்தாலும் சரி , அல்லது அதன் நேரமும் காலமும் ஒன்றாக இருந்தாலும் சரி , மாதாந்தம் ருது ஏற்படுவதற்கு மாற்றமாக இரண்டு மாதங்கள் இரத்தம் போக்கு ஏற்பட்டால் அதன் காலமும் நாளும் கணக்கும் ஒன்றாக இருந்தால் இரண்டு மாதங்களும் வெளியானவை ஹைழு ஆகும். உதாரணமாக மாதத்தின் முதலாவது நாளில் இருந்து ஏழாவது நாள் வரைக்கும் இரத்தப் போக்கு இருந்து சுத்தமடைந்தால் இன்னும் இரண்டு மாதங்கள் பத்தாம் நாளிலிருந்து பதினேழாம் நாள் வரை இரத்தப் போக்கு இருந்து சுத்தமடைந்தால் பத்தாம் நாளிலிருந்து பதினேழாம் நாள் வரை ஹைழுடைய காலமாகும்.

விடயம் 498 : ஒரு மாதம் என்பதன் நோக்கம் , இரத்தம் வெளியாகும் முதலாவது நாளிலிருந்து முப்பதாம் நாள் வரைக்குமுள்ள நாட்களுக்கு இடைப்பட்டவைகளில் இரத்தப் போக்கு இருப்பதாகும். மாறாக மாதத்தின் முதலாம் நாளிலிருந்து அதன் கடைசி வரைக்கும் இரத்தப் போக்கு இருப்பது என்பதல்ல.

விடயம் 499 : பொதுவாக ஒரு மாதம் ஒரு முறை இரத்தப் போக்கு ஏற்படும் பெண்ணுக்கு ஒரு மாத்தில் இரண்டு தடவை இரத்தப் போக்கு ஏற்பட்டால் அந்த இரத்தம் ஹைழுடைய நிபந்தனைகளைக் கொண்டிருந்தால் அதாவது ஹைழுடைய இரத்தத்தின் அடையாளங்களைக் கொண்டிருந்தால் , அந்த இரண்டு இரத்தப் போக்குக்கும் இடையில் சுத்தமாக இருந்த நாட்கள் பத்து நாட்களுக்கு குறைவில்லாது இருந்தால் கட்டாயமாக இவ்விரண்டு இரத்தப் போக்கையும் ஹைழு h க கருத வேண்டும்.

விடயம் 500 : மூன்று அல்லது அதை விட அதிகமான நாட்கள் இரத்தப் போக்கு இருந்து அவை ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , பின்னர் பத்து அல்லது அதை விட அதிகமான நாட்கள் இரத்தம் போக்கு இருந்து அது இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , இன்னும் மீண்டும் மூன்று நாட்கள் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டவாறு இரத்தப் போக்கு ஏற்பட்டால் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்த முதலாவதும் கடைசி இரத்தப் போக்குகளை ஹைழாக கருத வேண்டும்.

விடயம் 501 : ஒரு பெண் பத்து நாட்களுக்கு முதல் சுத்தமடைந்து உள்ளரங்கத்திலும் இரத்தம் இல்லை என அறிந்தால் கட்டாயமாக வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற குளிக்க வேண்டும். அவள் பத்து நாட்கள் முடிவதற்குல் மீண்டும் இரத்தம் வெளியாகும் என சந்தேகம் கொண்டிருந்தாலும் சரியே. ஆனால் பத்து நாட்கள் செல்வதற்கு முதல் இரத்தப் போக்கு ஏற்படும் என உறுதி கொண்டிருந்தால் குளிக்க கூடாது. இன்னும் தொழவும் முடியாது. கட்டாயம் ஹைழுடையவளுக்குறிய சட்டத்தின் பிரகாரம் நடந்து கொள்ள வேண்டும்.