Back Index Next

இரண்டாவது: அவரது உடல் அல்லது உடை திர்ஹத்தையும் விட சிறியதாக இரத்தம் மூலம் அழுக்காகிருத்தல் பின்னர் விடயம் 861 இல் கூறப்படும் இரத்தங்களைத் தவிர. (சுமார் 25 சத்துடைய அளவைப்போல்)

மூன்றாவது: நஜிஸான உடல் அல்லது உடையுடனே தொழவேண்டும் என்ற நிர்பந்தநிலைக்குல்லாகுதல்.

இரண்டு இடங்களில் தொழுபவரின் உடை நஜிஸாக இருந்தால் மட்டுமே அவரது தொழுகை சஹீஹாகும்.

முதலாவது: அவரது கால்மோசை அல்லது கையுறை போன்ற சிறிய உடைகள் நஜிஸாக இருத்தல்.

இரண்டாவது: சிறுபிள்ளையைப் பராமரிக்கின்ற பெண்ணுடைய ஆடை நஜிஸாக இருத்தல்.

இவை ஐந்துடைய சட்டங்களும் பின்வரும் விடயங்களில் விரிவாக கூறப்படும்.

விடயம் 861: தொழுபவரின ஆடையில் அல்லது மேனியில் காயம் அல்லது பொக்குலத்துடைய இரத்தம் பட்டிருந்தால் , அதை கழுவுவது அநேகமான மக்களுக்கு அல்லது அவருக்கு கஸ்டமாக , சங்கடமாக இருந்தால் , அது சுகமடைகின்ற வரைக்கும் அதே நிலையில் தொழமுடியும். இரத்தத்துடன்  சீழ் வந்தால் அல்லது காயத்தின் மேல் வைத்துள்ள மருந்து நஜிஸாகி உடல் அல்லது உடையில் பட்டாலும் அதேபோல் தான்.

விடயம் 862: முறிவு மூலம் அல்லது கெதியில் சுமாகும் காயத்தில் இருந்து இரத்தம் பட்டு அதைக் கழுவுவதும் இலேசாக இருந்து , அது ஒரு திர்ஹத்துடைய அளவுக்கு இருந்தாலோ அல்லது அதை விட பெரிதாக இருந்தாலோ அவை தொழுபவரின் உடல் அல்லது உடையில் இருக்கின்ற போது தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும்.

விடயம் 863: உடல் அல்லது உடம்பின் ஒரு பகுதி காயத்திற்கு தூரமாக இருந்து காயத்தின் ஈரம் பட்டு நஜிஸாகிருந்தால் அதைக் கொண்டு தொழுவது ஆகாது. ஆனால் பொதுவாக உடல் அல்லது உடயில் ஒரு பகுதியில் காயத்துடைய ஈரம் பட்டு அது நஜிஸாகும் என்றிருந்தால் அதைக் கொண்டு தொழுவதில் பிரச்சிணையில்லை.

விடயம் 864: காயமில்லாது வாய் இன்னும் மூக்கிலிருந்து வரும் இரத்தம் , உடல் அல்லது உடையில் பட்டு அதன் மூலம் அவை நஜிஸானால் அதைக் கொண்டு தொழமுடியாது. ஆனால் அது ஒரு திர்ஹத்தை விட சிறியதாக இருந்தாலே தவிர அந்நிலையில் தொழமுடியும். ஆனால் மூலவியாதியுள்ளவர்களுடைய இரத்ததிற்கு காயத்துடைய இரத்தத்தின் சட்டமேயாகும். அதன் மூலம் தொழுவதில் பிரச்சிணையில்லை.

விடயம் 865: உடம்பு காயமாக இருக்கின்ற ஒருவர் தனது இரத்தம் இருப்பதைக் காணுகின்றார் , அது அவரது காயத்தில் இருந்து பட்டதா அல்லது வேறு இரத்தமா என அவருக்கு தெரியாது போனால் அதைக் கொண்டு தொழுவதில் பிரச்சினையில்லை.

விடயம் 866: உடம்பில் பல காயங்கள் அருகருகில் இருந்து அவை அனைத்தும் ஒரு காயமே என கணிக்கப்பட்டால் அவை சுகமடைகின்ற வரைக்கும் அந்த நிலையில் தொழுவதில் பிரச்சினையில்லை. ஆனால் அவை தூரத் தூரத் இருந்து ஒவ்வொன்ரும் தனித்தனி காயமாக கணிக்கப்பட்டால அவை ஒவ்வொன்றும் சுகமான பிறகு தொழுகைக்காக உடல் , உடையை கழுவவேண்டும்.

விடயம் 867: ஊசியுடைய நுனி அளவுக்கு ஹைழுடைய இரத்தம் தொழுபவரின் உடல் அல்லது உடையில் இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகிவிடும். இஹ்யாது வாஜிபின் படி நிபாஸுடைய இரத்தம் , இஸ்திஹாழாவுடைய இரத்தமும் அவருடைய உடல் , உடையில் இருக்க கூடாது. ஹராமான விலங்குடைய இரத்தம் இருப்பதையும் தவிர்ந்து கொள்வது சிறந்ததாகும். ஆனால்  வேறு வகையான இரத்தங்கள் உதாரணமாக மனிதனது உடம்பு இரத்தம் அல்லது ஹலாலான விலங்குடைய இரத்தம் போன்றவை , உடம்பில் பல இடங்களில் இருந்து அவை அனைத்தும் ஒரு திர்ஹத்தின் அளவுக்கும் சிறியதாக இருந்தால் அதைக் கொண்டு தொழுவதில் பிரச்சிணையில்லை.

விடயம் 868: உற்புரம் இல்லாத ஆடையில் இரத்தம் பட்டு அது அதன் வெளிப் பக்கத்திற்கு வந்தால் அதை ஒரு இரத்தம் என்றே கருதப்படும். ஆனால் அதன் உற்புரம் வேறு வேறாக இருந்தால் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே கருத வேண்டும். எனவே ஆடையின் உற்பரமும் வெளிப்புரமும் இருக்கின்ற இரத்தம் ஒரு திர்ஹத்தை விட சிறியதாக இருந்தால் அதைக் கொண்டு தொழுதால் தொழுகை சஹீஹாகும். ஆனால் அதை விட பெரியதாக இருப்பின் தொழுகை பாத்திலாகி விடும்.

விடயம் 869: இரத்தம் உற்புரம் இருக்கின்ற ஆடையில் பட்டு அதன் உற்புரத்திற்கு போனால் , அல்லது உற்புரத்தில் பட்டு ஆடையின் மேல் இரத்தமானால் , கட்டாயம் அவை இரண்டையும் இரண்டு இரத்தம் என்றே கருத வேண்டும். எனவே ஆடையின் மேல் , உற்புரமாக இருக்கின்ற இரத்தம் ஒரு திர்ஹத்தை விட சிறியதாக இருப்பின் அதைக் கொண்டு தொழுதால் தொழுகை சஹீஹாகும். ஆனால் அதிகமாக இருப்பின் தொழுகை பாத்திலாகும்.

விடயம் 870: உடல் அல்லது உடம்பில் இருக்கின்ற இரத்தம் ஒரு திர்ஹத்தை விட குறைவானதாக இருந்து அதில் ஈரம் பட்டு அது ஒரு திர்ஹத்தின் அளவு அல்லது அதை விட பெரிதாகி அதன் ஓரங்களை அழுக்கடையச் செய்தால் அதைக் கொண்டு தொழுதால் தொழுகை பாத்திலாகும். மாறாக இரத்தமும் அதில் பட்ட ஈரமும் ஒரு திர்ஹத்தின் அளவு இல்லாதிருந்து இன்னும் ஓரங்களையும் அழுக்கடையச் செய்யவில்லை என்றிருந்தால் அதைக் கொண்டு தொழுதால் தொழுகை சஹீஹாகும். ஆனால் இரத்தம் மேல் பட்ட ஈரம் அதனுடன் கழந்து இல்லாது போனாலும் தொழுகை சஹீஹாகும்.

விடயம் 871: உடல் அல்லது உடையில் இரத்தம் இல்லை. ஆனால் அதில் இரத்தம் பட்டு நஜிஸானால் , அது ஒரு திர்ஹத்தின் அளவை விட சிறயதாக இருந்தாலும் அதைக் கொண்டு தொழ முடியாது. 

விடயம் 872: உடை அல்லது உடலில் இருக்கின்ற இரத்தம் ஒரு திர்ஹத்தை விட சிறியதாக இருந்து அதில் வேறு நஜிஸ்கள் பட்டால் உதாரணமாக ஒரு துளி சிறுநீர் அதில் பட்டால் அதைக் கொண்டு தொழமுடியாது.

விடயம் 873: தொழுபவரின் சிறிய ஆடைகள் உதாரணமாக தொப்பி , கால்மோசை , கையுறை போன்ற அவ்ரத்தை மறைக்க முடியாதவை நஜிஸானால் , அவை இறந்த இன்னும் ஹராமான விலங்குகளில் இருந்து செய்யப்படாததாக இருப்பின் அதைக் கொண்டு தொழுதால் தொழுகை சஹீஹாகும். மேலும் நஜிஸான மோதிரம் , கண்ணாடியைக் கொண்டு தொழுவதிலும் பிரச்சிணையில்லை.

விடயம் 874: இஹ்தியாது வாஜிபின் படி தொழுவபருடைய அவ்ரத்தை மறைக்கக் கூடிய ஒன்று நஜிஸாகி தொழும் போது அது அவரிடம் இல்லாதிருக்க வேண்டும். ஆனால் நஜிஸான ஒன்றைக் கொண்டு அவரது அவ்ரத்தை மறைக்க முடியாததாக இருந்தால் உதாரணமாக சிறிய கைக்குட்டை , திறப்பு , கத்தி இன்னும் பணம் போன்றவை அவைகளைக் கொண்டு தொழுவதில் தடையில்லை.

விடயம் 875: பிள்ளையைப் பராமரிக்கின் பெண்ணிடம் , இஹ்தியாது வாஜிபின் படி அப்பிள்ளை பெண்ணாக இல்லாது ஆணாக இருக்க வேண்டும் , ஒரு ஆடையே இருந்தால் , அவளால் மற்றுமொரு ஆடை வாங்க அல்லது இரவலாக எடுக்க இயலாதிருந்தால் , ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தடைவ அதை கழுவும் போது மறுநாள் வரைக்கும் ஆண்பிள்ளையின் சிறுநீரைக் கொண்டு அது நஜிஸானாலும் சரி அதைக் கொண்டு தொழ முடியும். ஆனால் இஹ்தியாது வாஜிபின் படி ஒவ்வொரு நாளும் முதலாவது தொழுதற்கு முன் நஜிஸான அதை கழுவ வேண்டும். மேலும் ஒன்றுக்கு அதிகமான ஆடைகள் அவளிடம் இருந்தாள் , அவை அனைத்தையும் அணிய வேண்டும் என்ற நிலை அவளுக்கு இருந்தால் , சொல்லப்பட்ட பிரகாரம் ஒரு நாளைக்கு ஒரு தடவை அதை கழுவிக் கொண்டால் போதுமாகும். இன்னும் வேறு ஆடை வாங்க அல்லது இரவல் எடுக்க முடியுமாக இருந்தால் கட்டாயம் சுத்தமான ஆடைளுயுடனே தொழவேண்டும்.

தொழுபவரின் ஆடையில் உள்ள முஸ்தஹப்புக்கள்

விடயம் 876 : தலைப்பாகையை நாடிக்கு கீழ் தொங்க விடுதல் , இமாம் ஜமாஅத் நடத்துபவர் ' அபா ' அணிதல் , வென்மையான இன்னும் மிகவும் சுத்தமான ஆடையை அணிதல் , வாசனைத் திரவியங்கள் பாவித்தல் , அகீக் மூலம் செய்யப்பட்ட மோதிரம் அணிவது தொழுபவர்களுக்கு முஸ்தஹப்பாகும்.

தொழுபவரின் ஆடையில் உள்ள மக்ரூஹுகள்

விடயம் 877: கருத்த , மெல்லிய இலேசான , நெருக்கமக ஒடுங்கிய , குடிகாரனுடைய ஆடை , நஜிஸ்களிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவருடைய ஆடை , உருவப்படமுடைய ஆடை இன்னும் பொத்தான் திறந்த படி இருக்கின்ற ஆடைகளை அணிவதும் இன்னும் உருவமுள்ள மோதிரத்தை அணிவதும் தொழுபவருக்கு மக்ரூஹ் ஆகும்.

தொழுபவரின் இடம்

தொழும் இடத்திற்கு சில நிபந்தனை இருக்கின்றது

முதலாவது : முபாஹாக இருக்க வேண்டும் .

விடயம் 878: அபகரிக்கப்பட்ட இடத்தில் தொழும் ஒருவர் , விரிப்பு அல்லது கட்டில் போன்றதில் தொழுதாலும் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் அபகரிக்கப் பட்டதின் இடத்தின் நிழலில் அல்லது அபகரிக்கப்பட்ட கூடாரத்தில் தொழுவதில் தடையில்லை .

விடயம் 879: மற்றவர்களின் இடத்தில் அது அவருக்குறியதாக இல்லதிருப்பினும் அவரது அனுமதியில்லாது தொழுதால் தொழுகை பாத்திலாகும் . உதாரணமாக வாடகை வீட்டில் அந்த வீட்டுக்குறியவர் அல்லது வேறு ஒருவர் தொழ விரும்பினால் அப்போது அவ்வீட்டில் வாடகைக்கு இருப்பவரது அனுமதியில்லாது தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும் . அதேபோல் தான் இருக்கும் ஒரு சொத்தில் மற்றவருக்கும் அதில் பங்கிருந்தால் அவ்விடத்தில் தொழுவதும் பாத்திலாகும் .

உதாரணமாக ஒருவர் தனது சொத்தின் மூன்றில் ஒரு பங்கை இன்னதைச் செய்வதற்கு கொடுங்கள் என வசிய்யத் செய்திருந்தால் அதை பிரித்துக் கொடுக்கின்ற வரைக்கும் அந்த இடத்தில் தொழ முடியாது அப்படி தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 880: பள்ளிவாயிலில் அமர்ந்திருக்கும் ஒருவர் , மற்றொருவர் அவரது இடத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தில் தொழுதால் இஹ்தியாது வாஜிபின் படி அந்த தொழுகையை வேறொரு இடத்தில் திரும்பத் தொழவேண்டும் . 

விடயம் 881: அபகரிக்கப் பட்ட இடஅமன அறியாத இடத்தில் தொழுதால் , தொழுது முடிந்த பின்னர் அது அபகரிக்கப் பட்ட இடமென அறிந்தால் , அல்லது அபகரிக்கப்பட்டதென்பதை மறந்து அந்த இடத்தில் தொழுது , அதன் பின் அவருக்கு தொழுத இடம் அபகரிக்கப்பட்ட இடமென ஞாபகம் வந்தால் , அந்த இடத்தை அவர் அபகரித்திருக்க வில்லை என்றிருந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் . ஆனால் அவர் அபகரித்ததாக இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 882: ஒருவர் இது அபகரிக்கப்பட்ட இடம் என அறிந்திருந்து , ஆனால் அபகரிக்கப்பட்ட இடத்தில் தொழுதால் தொழுகை பாத்திலாகும் என்று அறியாது அந்த இடத்தில் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 883: சுன்னத்தான தொழுகையை பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போதும் தொழமுடியும் . அதேபோல் வாஜிபான தொழுகையையும் சங்கடமான நேரத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போது தொழமுடியும் . இந்நிலையில் குதிரைக்கு அல்லது வாகன , புகைவண்டி , விமானத்தின் கதிரைக்கு கீழ் இருப்பவை அபகரிக்கப் பட்டதாக இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 884: அபகரிக்கப் பட்டு தற்போது அதன் சொந்தக் காரர் யார் என்று தெரியாத இடத்தை எடுப்பது ஆகுமாகாது . இன்னும் தொழுவதும் பாத்திலாகும் . அதன் சட்டன் என்ன என்பதை அறிந்து கொள்ள தகுதியான முஜ்தஹிதை ( அறிஞரை) அனுக வேண்டும் . அதேபோல் ஒரு நிலமையில் கட்டப்பட்டு இப்போது அதன் சொந்தக்காரர் யாரென்று தெரியாத ஒரு கட்டிடத்தில் குடிபோவதற்கும் அபகரிப்பதுடைய சட்டமேயாகும் . ஆனால் அதில் தொழுவது , அது ஆகுமான இடத்தில் கட்டப்பட்டிருந்தால் ஜாயிஸ் இல்லை . ஆனால் அவை விரிப்பு இடப்பட்டிருக்க கூடாது .

விடயம் 885: ஒருவர் ஒரு சொத்தில் வேறு ஒருவருடன் கூட்டாக இருந்தால் , அவரது பங்கு வேறாக இல்லாதிருந்தால் ஒருவர் அதன் கூட்டான மற்றவருடைய அனுமதியில்லாது அதில் குடியமரவோ அல்லது தொழவோ முடியாது .

விடயம் 886: ஒருவர் குமஸ் , ஸகாத் கொடுக்காத பணத்தைக் கொண்டு பூமி வாங்கினால் , அதில் குடியமர்வது ஹராம் . இன்னும் அதில் தொழுவது பாத்தில் அதாவது தொழுதால் அத்தொழுகை பாத்திலாகும் .

விடயம் 887: ஒரு இடத்திற்கு சொந்தக்காரர் வாயினால் அதில் தொழுவதற்கு அனுமதி கொடுத்தால் , ஆனால் அவர் மனதால் இங்கு தொழுவதற்கு விரும்ப வில்லை என அறிந்து கொண்டு அதில் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் அவர் அதில் தொழுவதற்கு அனுமதி கொடுக்க வில்லை ஆனால் அவர் அதில் தொழுவதை உள்ளத்தாலும் விரும்புகிறார் என் உறுதி இருந்தால் , அதில் தொழுவது சஹீஹாகும் .

விடயம் 888: கடனாளியாக இருக்கும் ஒருவர் மரணித்தால் , அவரது கடன் அவர் விட்டுச் சென்றதை விட அதிகமாக இருந்தால் , அதை அனந்தரமாகப் பெறுபவர்கள் அப்பொருள்களை எடுப்பதோ அல்லது அவரது இடத்தில் குடியமர்வதோ ஹராமாகும். இன்னும் கடன் கொடுத்தவர்களின் அனுமதியில்லாது , விருப்பமில்லாது அதில் தொழுதாலும் அத்தொழுகை பாத்திலாகும். ஆனால் அவரது கடன் அவர் விட்டுச் சென்றதை விட குறைவாக இருந்தால் அதை அனந்தரமாகப் பெறுபவர்கள் அப்பொருள்களை எடுப்பதோ அல்லது அவரது இடத்தில் குடியமர்வதோ அதில் தொழுவதோ இரண்டு நிபந்தனைகளைக் கொண்டு சஹீஹாகும். ஒன்று: கடன் காரர்கள் அதைப் பொருந்திக் கொள்கின்றனர் என அறிய வேண்டும். இரண்டாவது: அவரது கடனை தாமதிக்காது கொடுப்பதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

விடயம் 889: கடனாளியாக மரணித்தவருடைய இடத்தில் குடியமர்வது ஹராம் அதில் தொழுவது பாத்திலாகும். இச்சட்டம் அவரது கடன் அவர் விட்டுச் சென்றதை விட அதிகமாக இருக்கின்ற போதேயாகும்.

ஆனால் அவரது கடன் அவர் விட்டுச் சென்றதை விட குறைவாக இருந்தால் கடன்காரர்கள் அதைப் பொருந்திக் கொள்கின்றனர். அவரது கடனை தாமதிக்காது கொடுப்பதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற சந்தர்ப்பத்தில் அதில் குடியமர இன்னும் தொழ முடியும். இந்நிலையில் இஹ்தியாது வாஜிபின் படி மையித்துடைய சொந்தக்காரர் இடத்திலும் அனுமதி எடுக்க வேண்டும்.

விடயம் 890: மையித்துக்கு கடன் இல்லை ஆனால் அதன் அனந்தரக் காரர் சிறுவராக அல்லது மையித்தியகாரராக அல்லது மறைமுகமாக இருந்தால் , அதை கபன் செய்து அடக்காது விட்டால் அது அப்படியே பூமியில் இருந்து விடும் என்றிருந்தால் அதன் சொத்துக்களை எடுத்து அதைச் செய்ய முடியும். ஆனால் இது தவிர்ந்தவைகளுக்காக அதை எடுப்பது ஹராமாகும். இன்னும் அந்த இடத்தில் தொழுவதும் பாத்திலாகும். ஆனால் அதைப் பாதுகாப்பவர் சரியென்று கருகின்ற சந்தர்ப்பதைத் தவிர.