Back Index Next

விடயம் 1062: நெற்றியை மண்ணில் வைத்த பிறகு அவருக்கு ருகூஃ செய்ய வில்லை என்ற ஞாபகம் வந்தால் இஹ்தியாது வாஜிபின்படி எழுந்து நின்று ருகூவை நிறைவேற்றி தொழுது முடித்து பின் மீண்டும் தொழுவார் . இன்னும் அவருக்கு இரண்டாவது ஸஜதாவில் ஞாபகம் வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆரம்பத்திலிருந்து தொழவேண்டும் .

விடயம் 1063: ருகூவுக்குச் செல்வதற்கு முதல் நிமிர்ந்து நிற்கும் போதே ருகூவுக்கும் செல்லும் தக்பீரைச் சொல்வதும் , ருகூவில் முழங்கால்களை நிமிர்த்தி வைப்பதும் , முதுகை நேராக வைப்பதும் , தலையை முதுக்கு சமமாக வைக்காது பணித்து வைப்பதும் , இரண்டு கால் பாதங்களுக்கிடையில் பார்ப்பதும் , திக்ருக்கு முன்பு அல்லது பின்பு ஸலவாத் சொல்வதும் , ருகூவில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று உடம்பு அசையாது நின்றதும் ஸமியல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வதும் முஸ்தஹப்பாகும் .

விடயம் 1064: ருகூவில் பெண்கள் கைகளை முழங்காலுக்கு மேலாக வைப்பதும் , முழங்கால்களை நேராக வைக்காதிருப்பதும் முஸ்தஹப்பாகும் .

சுஜுது

விடயம் 1065: தொழுபவர் ஒவ்வொரு வாஜிபான , முஸ்தஹப்பான தொழுகைகளின் ஒவ்வொரு ரகஅத்திலும் ருகூஃ செய்த பிறகு இரு ஸஜதாக்களைச் செய்ய வேண்டும் . ஸஜதா என்பது நெற்றி , இரு கைகளின் உள்ளங்கை , முழங்கால் மற்றும் இரு கால்களின் பெரு விரல்களை மண்ணின் மேல் வைப்பதாகும் .

விடயம் 1066: இரண்டு ஸஜதாக்களும் ஒரு ருக்னாகும் . எனவே ஒருவர் வாஜிபான தொழுகைகளில் வேண்டுமென்று அல்லது மறதியாக அதை செய்யாது விட்டாலோ அல்லது அதோடு மற்ற இரு ஸஜதாக்களை அதிகமாக செய்தாலோ அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1067: ஒருவர் ஒரு ஸஜதாவை வேண்டுமென்று செய்யாது விட்டால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் மறதியாக ஒரு ஸஜதாவை செய்யாது விட்டால் அதன் சட்டம் என்னவென்பதை பின்னர் கூறப்படும் .

விடயம் 1068: ஒருவர் நெற்றியை வேண்டுமென்று மண்ணில் வைக்காது விட்டால் அவர் ஸஜதா செய்யாதவரைப் போலாகும் . அவரது மற்றப்பகுதிகள் மண்ணில் இருந்தாலும் சரியே ! ஆனால் நெற்றியை ஒருவர் மண்ணில் வைத்து மற்ற உறுப்புக்களை மறதியாக மண்ணில் வைக்காது விட்டால் அல்லது மறதியாக திக்ர் சொல்லாது விட்டால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1069: ஸஜதாவில் எந்த திக்ரு சொன்னாலும் போதுமாகும் . ஆனால் அது மூன்று தடவை சுப்ஹானல்லாஹ் அல்லது ஒரு தடவை சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி என்று சொல்லும் அளவை விட குறைவாக இருக்க கூடாது . இன்னும் சுப்ஹான ரப்பியல் அஃலா வபிஹம்திஹி என்பதை மூன்று தடவை அல்லது ஐந்து அல்லது ஏழு தடவை சொல்வது முஸ்தஹப்பாகும் .

விடயம் 1070: சுஜுதில் வாஜிபான திக்ர் சொல்லும் அளவுக்கு உடம்பு அசையாது இருக்க வேண்டும் . முஸ்தஹப்பான திக்ருகளைச் சொல்லுகின்ற போதும் அதை சுஜுதில் சொல்லப் படவேண்டும் என கூறப்பட்டுள்ளவை என்ற நினைப்பில் சொன்னால் அப்போதும் உடம்பு அசையாது இருப்பது அவசியமாகும் .

விடயம் 1071: ஒருவர் நெற்றியை மண்ணில் வைப்பதற்கு முதல் , உடம்பு அசையாது இருப்பதற்கு முதல் வேண்டுமென்று திக்ரைச் சொன்னால் அல்லது திக்ரு சொல்லி முடிவதற்கு முதல் வேண்டுமென்று நெற்றியை ஸஜதாவில் உயர்த்தினால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1072: ஒருவர் நெற்றியை மண்ணில் வைப்பதற்கு முதல் , உடம்பு அசையாது இருப்பதற்கு முதல் மறதியாக திக்ரைச் சொன்னால் அதை நெற்றியை ஸஜதாவில் உயர்த்துவதற்கு முதல் தவறாக செய்து விட்டார் என அவர் உணர்ந்தால் மீண்டும் இரண்டாவது தட iவாய உடம்பு அசையாது இருக்கும் போது அந்த திக்ரைச் சொல்ல வேண்டும் .

விடயம் 1073: தலையை ஸஜதாவில் இருந்து உயர்த்திய பிறகு உடம்பு அசையாது இருப்பதற்கு முதல் திக்ர் சொன்னேன் அல்லது திக்ரு சொல்லி முடிவதற்குல் நெற்றியை உயர்த்தி விட்டேன் என அவர் அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1074: ஸஜதாவுடைய திக்ரைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஸஜதாவுடைய ஏழு உறுப்புக்களில் ஒன்றை வேண்டுமென்று பூமியை விட்டும் தூக்கினால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் திக்ரைச் சொல்லாத நேரத்தில் நெற்றி தவிர்ந்த வேறு உறுப்புக்களை பூமியை விட்டும் தூக்கி பின் அதை மீண்டும் இரண்டாவது தடவையாக மண்ணில் வைத்தால் அதில் பிரச்சினையில்லை .

விடயம் 1075: ஸஜதாவுடைய திக்ரு சொல்லி முடிவதற்குல் மறதியாக நெற்றியை மண்ணை விட்டும் உயர்த்தினால் அதை மீண்டும் இரண்டாவது தடவையாக மண்ணில் வைக்க முடியாது கட்டாயம் அதை ஒரு ஸஜதாவாக கணிக்க வேண்டும் . ஆனால் மற்ற உறுப்புக்களை மறதியாக உயர்த்தினால் அதை இரண்டு தடைவ மண்ணில் வைக்க வேண்டும் இன்னும் திக்ரைச் சொல்ல வேண்டும் .

விடயம் 1076: முதவலாது ஸஜதா முடிந்ததும் உடம்பு அசையாது இருக்கின்ற வரை இருக்க வேண்டும் . பின் மீண்டும் ஸஜதாவுக்குச் செல்ல வேண்டும் .

விடயம் 1077: தொழுபவருடைய நெற்றி , முழங்கால் இன்னும் விரல்களை வைக்கும் இடத்தை விட பணிவாகவோ இன்னும் நான்கு ஒட்டிய விரல்களை விட உயராமாக இருக்க கூடாது .

விடயம் 1078: மேடு பள்ளமாக இருந்து அதன் மேடு பள்ளம் ஒழுங்காக அறியமுடியாத பூமியில் தொழும்போது இஹ்தியாத்துக்காக தொழுபவரின் நெற்றி அவரது கால் விரல்கள் மற்றும் முழங்கால்களை வைக்கும் இடத்தை விட நாங்கு ஒட்டிய விரல்களை விட உயரமாக இருக்ககூடாது . இந்த இஹ்தியாத்தை விடுவது உகந்ததல்ல .

விடயம் 1079: ஒருவர் மறதியாக தனது நெற்றியை கால்விரல் மற்றும் முழங்கால்களை வைக்கும் இடத்தை விட நாங்கு ஒட்டிய விரல்களை விட உயரமான இடத்தில் வைத்தால் , அந்த இடம் ஸஜதாவில் இருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு உயரமாக இருந்தால் நெற்றியை அதிலிருந்து உயர்த்தி உயரத்தால் நான்கு ஒட்டிய விரல்களின் உயரத்தை விட குறைவான இடத்தில் வைக்க முடியும் . அல்லது அதை நான்கு விரல்களின் அளவுள்ள இடத்திலும் வைக்க முடியும் . ஆனால் அந்த உயரமான இடத்தில் ஸஜதாவில் இருக்கின்ற போது அவர் ஸஜதா செய்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அதன் உயரமிருந்தால் இஹ்தியாது வாஜிபின்படி நெற்றியை அங்கிருந்து நான்கு விரல்களின் அளவுள்ள அல்லது அதை விட உயரத்தால் குறைவான இடத்தை நோக்கி நெற்றியை இழுக்க வேண்டும் . நெற்றியை இழுக்க முடியாது போனால் இஹ்தியாது வாஜிபின்படி தொழுகை பூரணமாக தொழுது விட்டு மீண்டும் அதை தொழ வேண்டும் .

விடயம் 1080: நெற்றிக்கும் ஸஜதா செய்வதற்கும் இடையில் ஒன்றும் இருக்கக் கூடாது . எனவே ஸஜதாவுக்காக பயன் படுத்தப்படும் மொஹரில் நெற்றிய அதில் படாத அளவுக்கு எண்ணெய் இருந்தால் ஸஜதா பாத்திலாகும் . ஆனால் மொஹருடைய நிறம் மாறியிருந்தால் அதில் ஸஜதா செய்வதில் பிரச்சினையில்லை .

விடயம் 1081: ஸஜதாவின் போது உள்ளங்கை பூமியில் வைக்கப்படவேண்டும் . ஆனால் சங்கடமான நேரத்தில் புறங்கையும் பிரச்சினையில்லை . புறங்கையையும் வைக்க முடியாது விட்டால் மணிக்கட்டுக் கையை வைக்க வேண்டும் . அதற்கும் முடியாது போனால் முழங்கை வரையுமுள்ள இடத்திலிருந்து முடிந்ததை வைக்க வேண்டும் . அதற்கும் முடியாது போனால் குடங்கையை வைப்பது போதுமாகும் .

விடயம் 1082: ஸதாவின் போது கால் விரல்களின் இரு பெருவிரல்களையும் கட்டாயம் மண்ணில் வைக்க வேண்டும் . இஹ்தியாது வாஜிபு அதாவது இரு பெருவிரல்களின் நுனிப்பகுதியை மண்ணில் வைப்பதாகும் . மற்ற விரல்களை அல்லது காலின் மேற்பகுதியை மண்ணில் வைத்தால் , அல்லது நகம் பெரிதாக இருக்கின்ற காரணத்தால் பெருவிரலின் நுனி மண்ணில் பட வில்லை என்றால் அவரது தொழுகை பாத்திலாகும் . பெரு விரலுடன் மற்ற விரல்களையும் மண்ணில் வைப்பதில் தடையில்லை .

விடயம் 1083: பெருவிரலின் அரைவாசி துண்டிக்கப் பட்ட ஒருவர் கட்டாயம் அதன் மற்றப் பகுதியை மண்ணில் வைக்க வேண்டும் . அதில் ஏதும் எஞ்சியிருக்க வில்லை என்றால் அல்லது எஞ்சியுள்ளது மிகவும் சிறியதாக இருந்தால் கட்டாயம் மற்ற விரல்களை வைக்க வேண்டும் . எந்த விரலும் அவருக்கு இல்லை என்றிருந்தால் காலின் மிஞ்சியுள்ளதை மண்ணில் வைக்க வேண்டும் .

விடயம் 1084: ஒருவர் வழமைக்கு மாற்றமாக ஸஜதா செய்தால் உதாரணமாக நெஞ்சி , வயிறை மண்ணில் வைத்தல் அல்லது கால்களை நீட்டுதல் போன்றவை அதில் கூறப்பட்ட ஏழு உறுப்புக்களும் மண்ணில் பட்டாலும் சரியே ! இந்நிலையில் இஹ்தியாது வாஜிபின் படி அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும் .

விடயம் 1085: மொஹர் மற்றும் எதன் மீது ஸஜதா செய்கிறோமோ அது கட்டாயம் சுத்தமாக இருக்க வேண்டும் . ஆனால் மொஹரை நஜிஸான விரிப்பின் மேல் வைத்தால் அல்லது மொஹரின் ஒரு பக்கம் நஜிஸாக இருந்து நெற்றியை அதன் சுத்தமாக பக்கம் வைத்தால் அதில் பிரச்சினையில்லை . அதாவது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1086: நெற்றியில் பொக்குலம் போன்றவை இருந்தால் , நெற்றியில் சுகமான பகுதியைக் கொண்டு ஸஜதா செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலம் ஸஜதா செய்யவேண்டும் . அதற்கு முடியாவிட்டால் மண்ணை சற்றுத் தோன்றி பொக்குலத்தை தோன்றிய பகுதிக்குல் வைத்து பொக்குலம் இல்லாத ஸஜதா செய்வதற்கு போதுமான பகுதியை மண்ணில் மேல் வைக்க வேண்டும் .

விடயம் 1087: நெற்றி முழுவதிலும் காயம் அல்லது பொக்குலம் இருந்தால் நெற்றியின் இருபகுதியின் ஒன்றைக் கொண்டு ஸஜதா செய்ய வேண்டும் . அதற்கு முடியவில்லை என்றால் தாடையால் ஸஜதா செய்ய வேண்டும் . அதற்கும் முடிய வில்லையென்றால் இஹ்தியாது வாஜிபின் படி கட்டாயம் முகத்தின் முடிந்த இடத்தைக் கொண்டு ஸஜதா செய்ய வேண்டும் . முகத்தில் எந்தவொரு பகுதியைக் கொண்டு ஸஜதா செய்ய முடியாது போனால் தலையின் முன் பகுதியைக் கொண்டு ஸஜதா செய்ய வேண்டும் .

விடயம் 1088: நெற்றியை குனிந்து மண்ணில் வைக்க முடியாது ஒருவர் மொஹர் போன்ற ஸஜதா செய்வது ஆகுமான ஒன்றை உயரமான ஒன்றில் வைத்து அதில் ஸஜதா செய்ய வேண்டும் . அந்த உயரமானதில் ஸஜதா செய்யும் போது இவர் ஸஜதா தான் செய்கிறார் என்று சொல்லுமளவுக்கு அது இருக்க வேண்டும் . ஆனால் மொஹரை மேலே உயர்த்தி நெற்றியை அதில் வைத்தால் அவரது தொழுகை கூடாது . ஆனால் எந்நிலையிலும் உள்ளங்கை , முழங்கால் , கால் விரல்கள் வழமை போன்று மண்ணில் தான் இருக்க வேண்டும் .

விடயம் 1089: ஒரு வகையிலும் ஸஜதா செய்ய குனிய முடியாத ஒருவர் கட் ;டாயம் இருந்து தலை மூலம் சைக்கினை செய்ய வேண்டும் . முடியாது போனால் கண்கள் மூலம் சைக்கினை செய்ய வேண்டும் . இந்த இரண்டு நிலைகளிலும் இதுவே இஹ்தியாத்தாகும் . அதாவது மொஹ்ரை உயர்த்த முடிந்தால் உயர்த்தி அதில் நெற்றியை வைக்க வேண்டும் . இன்னும் தலை , கண்கள் மூலமும் சைக்கின செய்ய முடியாது போனால் கட்டாயம் உள்ளத்தமில் ஸஜதாவுடைய நிய்யத்தை வைக்க வேண்டும் . இன்னும் இஹ்தியாது வாஜிபின்படி கை இன்னும் அது போன்றவைகளினாலும் ஸஜதாவுக்காக சைக்கினை செய்யவேண்டும் .

விடயம் 1090: இருக்க முடியாத ஒருவர் கட்டாயம் நின்று கொண்டு ஸஜதாவுடைய நிய்யத்தை வைக்க வேண்டும் . முடிந்தால் ஸஜதாவுக்காக தலை மூலம் சைக்கினை செய்வார் . முடியா விட்டால் கண்கள் மூலம் சைக்கினை செய்வார் . ( அதாவது அதை ஸஜதாவுடைய நிய்யத்துடன் மூடி ஸஜதவிலிருந்து தலை தூக்குகின்ற நிய்யத்துடன் அதைத் திறக்க வேண்டும்) இதற்கும் முடியாது போனால் உள்ளத்தில் ஸஜதாவுடைய நிய்யத்தை வைக்க வேண்டும் . இஹ்தியாது வாஜிபின்படி கை இன்னும் அது போன்றவைகளாலும் ஸஜதாவுக்காக சைக்கினை செய்ய வேண்டும் .

விடயம் 1091: நெற்றி வேண்டுமென்றில்லாது ( உணர்வின்றி) ஸஜதாவுடைய இடத்தை விட்டும் உயர்ந்தால் முந்தால் அதை மீண்டும் வைத்து திரும்பவும் ஸஜதாவுக்குச் செல்லக் கூடாது . இது ஒரு ஸஜதாவாக கணிக்கப் படும் . அதில் அவர் ஸஜதாவுடைய சொல்லியிருந்தாலும் சரி சொல்ல வில்லை என்றாலும் சரி . இன்னும் ( உயர்ந்த) தலை வைத்திருக்க முடியவில்லை என்றால் உணர்வின்றி ( வேண்டுமென்றில்லாது) ஸஜதாவுக்குச் சென்றால் அவை ஒரு ஸஜதாவாகவே கணிக்கப்படும் . அதில் அவர் ஸஜதாவுடைய திக்ரைச் சொல்ல வில்லை என்றால் கட்டயாம் அங்கே சொல்லவேண்டும் .

விடயம் 1092: தகிய்யா செய்வது ஆகுமான இடங்களில் ஒருவர் விரிப்பிலோ அது போன்றதிலோ ஸஜதா செய்ய முடியும் . தொழுகைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமுமில்லை . ஆனால் அந்த இடத்தில் பாய்களோ அல்லது கற்களோ அல்லது ஸஜதா செய்வது சஹீஹான பொருட்கள் இருந்தால் அதில் ஸஜதா செய்ய வேண்டும் .

விடயம் 1093:  உடம்பு அசையாது இருக்க முடியாத ஒன்றின் மேல் ஸஜதா செய்தால் அவரது ஸஜதா பாத்திலாகும் . ஆனால் மெத்தை போன்ற அதாவது தலை வைத்ததும் சற்று பனிந்த பின் உடம்பு அசையாது இருக்கின்ற ஒன்றில் ஸஜதா செய்வதில் பிரச்சினையில்லை .

விடயம் 1094: ஒருவருக்கு களி மண்ணில் தான் ஸஜதா செய்ய வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால் , அதில் தொழுகின்ற போது உடம்பு மற்றும் உடை அழுக்கடைவதை தாங்கிக் கொள்ள முடியும் என்றிருந்தால் , பிரச்சினையில்லை என்றிருந்தால் கட்டாயம் ஸஜதா , தஷஹ்ஹுதை வழமை போன்று நிறைவேற்ற வேண்டும் . கஷ்டம் என்றிருந்தால் நின்ற நிலையில் தொழமுடியும் ஸஜதாவை தலை மூலம் சைக்கினை செய்தும் தஷஹ்ஹுதை நின்று கொண்டும் நிறைவேற்ற முடியும் . ஸஜதா மற்றும் தஷஹ்ஹுதை வழமை போன்று செய்தாலும் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1095: இரண்டாவது ஸஜதாவுக்குப் பிறகு தஷஹ்ஹுத் வாஜிபில்லாத இடத்தில் உதாணரமாக ளுஹர் , அஸர் , இஷாத் தொழுகைகளின் மூன்றாவது ரகஅத்து , அந்நிலையில் சற்று அமர்ந்திருந்து பின் அடுத்துள்ள ரகஅத்துக்காக எழும்ப வேண்டும் . இச்செயலை ஓய்வுக்குறிய அமர்வு என்று சொல்லப்படும் .

ஸஜதா செய்வது சஹீஹான பொருட்கள்

விடயம் 1096: ஸஜதா கட்டாயம் மண்ணில் அல்லது அதில் முளைத்து உண்ணப்படாத ஒன்றில் தான் செய்ய வேண்டும் உதாரணமாக பலகை , இலை போன்றவை . இன்னும் உண்ணப்படும் அல்லது அணியப்படுபவற்றின் மீது ஸஜதா செய்யவது சஹீஹ் இல்லை . அத்துடன் சுரங்கப் பொருட்கள் உதாரணமாக உலோகங்கள் , தங்கம் , வெள்ளி , அகீக் , பீரூஸ் கல்லு இவைகளின் மீது ஸஜதா செய்வதும் பாத்திலாகும் . ஆனால் சலவைக் கல் , கருங்கற்களில் ஸஜதா செய்வதில் பிரச்சினையில்லை .