Back Index Next

விடயம் 1180: தொழுது கொண்டிருக்கும் பள்ளி வாயல் நஜிஸா ( அழுக்கா) கியுள்ளதை அறிந்தால் , தொழுகையின் நேரம் குறைவாக இருந்தால் கட்டாயம் தொழுது முடிக்க வேண்டும் . ஆனால் தொழுகையின் நேரம் அதிகமாக இருந்து அதைச் சுத்தம் செய்யும் போது தொழுகையின் அமைப்பு மாறாது என்றிருந்தால் அதை தொழுது கொண்டிருக்கும் போதே சுத்தம் செய்ய வேண்டும் , பின்பு எஞ்சிய தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . ஆனால் தொழுகையின் அமைப்பு குலைந்து விடும் என்றிருந்தால் கட் ; டாயம் தொழுகையை முறித்து விட்டு பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும் . பின்பு தொழவேண்டும் .

விடயம் 1181: தொழுகையை முறிக்க வேண்டிய ஒருவர் அதை முறிக்காது தொழுது முடித்தால் பாவம் செய்வதராகும் ஆனால் அவரது தொழுகை சஹீஹாகும் . இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அதை திரும்பத் தொழவேண்டும் என்றிருந்தாலும் சரியே .

விடயம் 1182: ஒருவர் ருகூவுடைய அளவுக்கு குனிவதற்கு முதல் அவருக்கு அதான் , இகாமத்தை மறந்து விட்டார் என ஞாபகம் வந்தால் , அப்போது தொழுகையின் நேரம் அதிகமாகவும் இருந்தால் அதைச் சொல்வதற்காக வேண்டி தொழுகையை முறிப்பது முஸ்தஹப்பாகும் .

தொழுகையின் சந்தேகங்கள்

தொழுகையில் எற்படும் சந்தேகங்கள் இருபத்தி மூன்று வகையாகும் . அதில் எட்டு வகை தொழுகையை பாத்திலாக்கும் . அதன் ஆறு வகைச் சந்தேகத்தை கவனித்தில் கொள்ளப்பட மாட்டாது .  இன்னும் அதன் ஒன்பது வகைச் சந்தேகங்கள் சஹீஹாகும் .

பாத்திலாக்கும் சந்தேகங்கள்

விடயம் 1183: தொழுகையை பாத்திலாக்கும் சந்தேகங்கள் இவைகளாகும் :

முதலாவது : இரண்டு ரகஅத்து தொழுகைகளின் ரகஅத்துக்களின் எண்ணிக்கைகையில் சந்தேகப்படுதல் . உதாரணமாக சுபஹ் தொழுகை , பிரயாணத் தொழுகையைப் போல . ஆனால் இரண்டு ரகஅத்துடைய முஸ்தஹப்பான தொழுகைகளின் ரகஅத்துக்களில் சந்தேகப்படுதல் இன்னும் சில இஹ்தியாதுடைய தொழுகைகளின் ரகஅத்துக்களில் சந்தேகப்படுதல் தொழுகையைப் பாத்திலாக்காது .

இரண்டாவது : மூன்று ரகஅத்துடைய தொழுகையின் ரகஅத்துக்களின் எண்ணிக்கையில் சந்தேகப்படுதல் .

மூன்றாவது : நான்கு ரகஅத்துடைய தொழுகையில் ஒரு ரகஅத்து தொழுதேனா அல்லது அதை விட அதிகமாக தொழுதேனா என சந்தேகப்படுதல் .

நான்காது : நான்கு ரகஅத்துடைய தொழுகையில் இரண்டாவது ஸஜதா செய்து முடிப்பதற்கு முதல் இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது அதை விட அதிகமாக தொழுதேனா என சந்தேகப்படுதல் . ( இது பற்றி விரிவாக அறிந்து கொள்ள சஹீஹான சந்தேகத்தின் நான்காவது விதத்தைப் பார்க்கவும் .)

ஐந்தாவது : இரண்டிற்கும் ஐந்துக்குமிடையில் சந்தேகப்படுதல் அல்லது இரண்டிற்கும் ஐந்து அல்லது அதை விட அதிகமாக ரகஅத்துக்குமிடையில் சந்தேகப்படுதல் .

ஆறாவது : மூன்றுக்கும் ஆறு ரகஅத்துமிடையில் சந்தேகப்படுதல் அல்லது மூன்றுக்கும் ஆறு ரகஅத்தை விட அதிகமானதற்குமிடையில் சந்தேகப்படுதல் .

ஏழாவது : எத்தனை ரகஅத்துக்கள் தொழுதேன் என அறியாத தொழுகையின் ரகஅத்துக்களின் சந்தேகித்தல் .

எட்டாவது : நான்குக்கும் ஆறு ரகஅத்துக்குமிடையில் சந்தேகப்படுதல் அல்லது நான்குக்கும் அதை ஆறு ரகஅத்தை விட அதிகமானதற்குமிடையில் சந்தேகப்படுதல் . இது இரண்டாவது ஸஜதா செய்வதற்கு முன்பு இருந்தாலும் சரி அல்லது அதற்குப் பின்னர் இருந்தலும் சரி . ஆனால் இரண்டாம் ஸஜதாவுக்குப் பிறகு நான்காம் ரகஅத்திற்கும் ஆறாம் ரகஅத்திற்கும் இடையில் அல்லது நான்கிற்கும் ஆறு ரகஅத்திற்கு அதிகமானதற்குமிடையில் அவனுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி நான்கு ரகஅத்து என வைத்துக் கொண்டு தொழுது முடிக்க வேண்டும் . அதன் பிறகு மறதிக்காக இரண்டு ரகஅத்துக்கள் தொழுது விட்டு பின் அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும் .

விடயம் 1184: தொழுது கொண்டிருப்பவருக்கு எப்போதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர் சற்று யோசிக்க வேண்டும் சில வேளை அவரது சந்தேகம் நீங்கி விடக் கூடும் . இதன்படி அவரது சந்தேகம் நீங்கி விட்டு ஒரு விடயத்தில் உறுதி ஏற்பட்டு விட்டால் அதிலிருந்து தொழ ஆரம்பித்து முடிக்க வேண்டும் . அவரது தொழுகையும் சஹீஹாகும் . ஆனால் சற்று யோசித்துப் பார்த்தும் அவரக்கு எதுவும் ஞாபகம் வர வில்லை என்றால் அச்சந்தேகத்தில் இருந்தால் சந்தேகித்தவருக்குறிய சட்டத்தின் படி செய்து கொள்ள வேண்டும் . அது தொழுகையை முறிக்கும் சந்தேகமாக இருந்தால் அதை முறிக்கவேண்டும் . இங்கே தொழுகையை முறிப்பது ஹராம் இல்லை .

கவனத்தில் எடுக்கப்படாத சந்தேகங்கள்

விடயம் 1185: கவனத்தில் எடுக்கப்படாத சந்தேகங்கள் இவைகளாகும் :

முதலாவது : செய்து முடிந்த ஒரு விடயத்தில் சந்தேகித்தல் .

இரண்டாவது : ஸலாம் கொடுத்த பிறகு சந்தேகித்தல் .

மூன்றாவது : தொழுகையின் நேரம் சென்ற பிறகு சந்தேகித்தல் .

நான்காவது : அதிகமாக சந்தேகிப்பவனின் சந்தேகம் .

ஐந்தாவது : இமாம் மஃமூமுடைய சந்தேகம் .

ஆறாவது : முஸ்தஹப்பான தொழுகைகளில் சந்தேகம் .

1. செய்து முடிந்த ஒரு விடயத்தில் சந்தேகித்தல்.

விடயம் 1186: தொழுது கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு வாஜிபான விடயத்தில் அதைச் செய்தாரா இல்லையா என சந்தேகித்தால் உதாரணமாக அல்ஹம்துவை ஓதினாரா இல்லையா என சந்தேகிப்பது போல . அப்போது அதன் பிறகு செய்ய வேண்டிய வாஜிபான அல்லது முஸ்தஹப்பான செயலைச் செய்ய வில்லை என்றிருந்தால் சந்தேகித்தவற்றை செய்யவேண்டும் . ஆனால் அதற்குப் பிறகு செய்யவேண்டிய வாஜிபான அல்லது முஸ்தஹப்பான விடயத்தை செய்ய ஆரம்பித்திருந்தல் அவர் இந்த சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது .

விடயம் 1187: ஒரு வசனத்தை ஓதிக் கொண்டிருக்கும் போது அதற்கு முதலுள்ள வசனத்தை ஓதினேனா இல்லையா ? என சந்தேகித்தால் அல்லது வசனத்தின் கடைசிப் பகுதியை ஓதும் போது அதன் முதல் பகுதியை ஓதினேனா இல்லை என சந்தேகித்தால் அச்சந்தேக்தை கவனத்தில் கொள்ளக் கூடாது .

விடயம் 1188: ருகூஃ அல்லது ஸஜதா செய்ய பிறகு அதில் திக்ர் ஓதுதல் , அதில் தரித்திருத்தல் போன்ற வாஜிபாக செய்ய வேண்டிய விடத்தை செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் அச்சந்தேகத்தை கவனத்தில் எடுக்கக் கூடாது .

விடயம் 1189: ஸஜதாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது ருகூஃ செய்தேனா இல்லையா ? என சந்தேகித்தால் அல்லது ருகூஃவுக்குப் பிறகு நின்றேனா இல்லையா ? என சந்தேகித்தால் அதைக் கவனத்தில் எடுக்க கூடாது .

விடயம் 1190: ஒருவர் எழும்பும் போது தஷஹ்ஹுதை நிறைவேற்றினாரா இல்லை என சந்தேகித்தால் அதை அவர் கவனத்தில் எடுக்க கூடாது . ஆனால் ஸஜதாவைச் செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் கட்டாயம் திரும்பச் சென்று அதைச் செய்ய வேண்டும் .

விடயம் 1191: இருந்து கொண்டு அல்லது தூங்கிய நிலையில் தொழும் ஒருவர் அல்ஹ்ம்துவை அல்லது தஸ்பீஹாத் துக்களை ஓதும் போது ஸஜதா அல்லது தஷஹ்ஹுதை நிறைவேற்றினேனா என சந்தேகம் கொண்டால் அதை அவர் கவனத்தில் எடுக்க கூடாது . ஆனால் அவர் அதை அல்ஹம்துவை அல்லது தஸ்பீஹாத்தை ஓத ஆரம்பிப்பதற்கு முதல் செய்தேனா இல்லையா ? என சந்தேகித்தால் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும் .

விடயம் 1192: ஒருவர் தொழுகையின் ருகுன்களில் ஒன்றைச் செய்தேனா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அவர் அதற்குப் பிறகுள்ளவற்றை செய்ய ஆரம்பிக்க வில்லை என்றிருந்தால் கட்டாயம் அதைச் செய்ய வேண்டும் . உதாரணமாக தஷஹ்ஹுதை ஓத ஆரம்பிக்கு முதல் இரண்டு ஸஜதாவையும் செய்தேனா இல்லையா என சந்தேகம் கொள்வது போல . ஆனால் பின்னர் அவருக்கு அதை செய்திருந்தேன் என ஞாபகம் வந்தால் - ருகுன் அதிகமான காரணத்தால் - அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1193: ஒருவர் தொழுகையின் ருகுன்களில் ஒன்றைச் செய்தேனா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அவர் அதற்குப் பிறகுள்ளதை செய்ய ஆரம்பித்து விட்டால் அப்போது அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது . உதாரணமாக தஷஹ்ஹுதை ஓத ஆரம்பித்த பிறகு இரண்டு ஸஜதாவையும் ; செய்தேனா இல்லையா என சந்தேகம் கொள்வது போல . ஆனால் அவருக்கு அந்த ருகுனை செய்ய வில்லை என ஞாபகம் வந்தால் , அவர் அதற்கு அடுத்ததாயுள்ள ருகுனை செய்ய ஆரம்பிக்க வில்லை என்றிருந்தால் கட்டாயம் மறந்தவற்றை நிறைவேற்ற வேண்டும் . ஆனால் அதற்கு அடுத்ததாயுள்ள ருகுனைச் செய்ய ஆரம்பித்து விட்டால் அவரது தொழுகை பாத்திலாகும் . உதாரணமாக அடுத்த ரகஅத்திள்ள ருகூஃவுக்கு முதல் இரண்டு ஸஜதாவையும் செய்ய வில்லை என ஞாபனம் வருவது போல் அப்போது அவர் அதைச் செய்ய வேண்டும் . ஆனால் ருகூஃவுக்குப் பிறகு ஞாபகம் வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1194: ருகுன் இல்லாத ஒன்றைச் செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் , அதற்குப் பிறகுள்ளவற்றை செய்ய ஆரம்பிக்க வில்லை என்றிருந்தால் கட்டாயம் அதைச் செய்யவேண்டும் . உதாரணமாக சூராவை ஓத முன் அல்ஹம்துவை ஓதினேனா இல்லையா என சந்தேகிப்பது போல . அப்போது கட்டாயம் அல்ஹம்து சூராவை ஓதவேண்டும் . அதை ஓதிய பிறகு அவருக்கு முன்பும் அதை ஓதினார் என ஞாபகம் வந்தாலும் தொழுகையின் ருகுன் அதிகரிக்க வில்லை அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1195: ருகுன் இல்லாத ஒன்றைச் செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் , அதற்குப் பிறகுள்ளவற்றை செய்ய ஆரம்பித்து விட்டால் அதைக் கவனத்தில் எடுக்ககூடாது . உதாரணமாக சூராவை ஓதிக் கொண்டிருக்கும் போது அல்ஹம்துவை ஓதினேனா இல்லையா என சந்தேகிப்பது போல . அப்போது அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது . பின்னர் அவருக்கு அதை செய்ய வில்லை என ஞாபகம் வந்தால் அப்போது அவர் அதற்கு அடுத்ததாக உள்ள ருகுனைச் செய்திருக்க வில்லை என்றால் கட்டாயம் அதைச் செய்ய வேண்டும் . ஆனால் அதற்குப் பிறகுள்ள ருகுனைச் செய்திருந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் . இதன்படி உதாரணமாக குனூத்தில் வைத்து அல்ஹம்து ஓத வில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் அதை ஓதவேண்டும் . ருகூஃவில் வைத்து ஞதபகமத் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் . ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பு படி ஓதாத அல்ஹம்துக்காக இரண்டு மறதிக்கான ஸஜதா செய்ய வேண்டும் . நிறைவேற்றப்படாத வாஜிபு தஷஹ்ஹுத் அல்லது ஸஜதாவாக இருந்தால் அதன் கழாவை நிறைவேற்றுவது வாஜிபாகும் . அதன் பிறகு மறதிக்காக இரண்டு ஸஜதா செய்ய வேண்டும் .

விடயம் 1196: ஒருவர் தொழுகையின் ஸலாத்தைச் சொன்னாரா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அல்லது அதை சரியாக சொன்னாரா இல்லையா என சந்தேகம் கொண்டால் , அவர் தொழுகைக்குப் பிறகுள்ளவற்றை அல்லது ஓத அல்லது அதற்குப் பறகு தொழ அல்லது தொழுபவரை அந்நிலையை விட்டும் வெளியாக்கும் ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்து விட்டால் அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது . ஆனால் இவைகளுக்கு முதல் சந்தேகம் கொண்டால் கட்டாயம் ஸலாம் சொல்ல வேண்டும் . இன்னும் இவைகளுக்கு முதல் ஸஜலாம் சரியான முறைப்படி சொன்னதில் சந்தேகம் கொண்டாலும் கூட இஹ்தியாது வாஜிபின் படி வேறொரு முறை ஸலாம் சொல்ல வேண்டும் .

2. ஸலாம் கொடுத்த பிறகு சந்தேகித்தல்.

விடயம் 1197: ஸலாம் கொடுத்த பிறகு ஒருவர் சரியான முறையில் தொழுதாரா இல்லையா ? என சந்தேகித்தால் உதாரணமாக ருகூஃ அல்லது சுஜுது செய்தாரா இல்லையா என சந்தேகித்தால் , அல்லது நான்கு ரகஅத்துடைய தொழுகையின் ஸலாம் கொடுத்த பிறகு நான்கு ரகஅத்து தொழுதேனா அல்லது ஐந்து ரகஅத்து தொழுதேனா என்ற சந்தோகம் அவருக்கு ஏற்பட்டால் அதை கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது . ஆனால் இரு தரப்பிலும் அவரது சந்தேகம் பாத்திலாக இருந்தால் உதாரணமாக நான்கு ரகஅத்துடைய தொழுகையில் ஸலாம் கொடுத்த பிறகு அவர் மூன்று ரகஅத்து தொழுதேனா அல்லது ஐந்து ரகஅத்து தொழுதேனா என சந்தேகித்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

3. தொழுகையின் நேரம் சென்ற பிறகு சந்தேகித்தல்.

விடயம் 1198:  தொழுகையின் நேரம் சென்ற பிறகு அவர் தொழுதாரா இல்லையா என சந்தேகித்தால் அல்லது தொழ வில்லை என கற்பனை செய்தால் அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்ககூடாது . ஆனால் நேரம் செல்வதற்கு முதல் தொழுதாரா இல்லையா என சந்தேகித்தால் அல்லது தொழவில்லை என கற்பனை செய்தால் கட்டாயம் அந்த தொழுகையை தொழவேண்டும் . ஆனால் தொழுதார் என கற்பனை செய்தாலும் சரி கட்டாயம் அந்த தொழுகையைத் தொழவேண்டும் .

விடயம் 1199: தொழுகையின் நேரம் சென்ற பிறகு ஒருவர் தொழுத தொழுகையை சரியா தொழுதாரா இல்லையா என சந்தேகித்தால் கட்டாயம் அதை கவனத்தில் எடுக்கக் கூடாது .

விடயம் 1200: ளுஹர் அஸருடைய நேரம் சென்ற பிறகு , ஒருவருக்கு அவர் நான்கு ரகஅத்துக்கள் மட்டுமே தொழுதார் என அவருக்குத் தெரியும் ஆனால் அதை ளுஹருடைய நிய்யத்தைக் கொண்டு தொழுதாரா அல்லது அஸருடைய நிய்யத்தைக் கொண்டு தொழுதாரா என தெரியாது இந்நிலையில் அவர் கட்டாயம் கழாவாக நான்கு ரகஅத்து அவர் மீது வாஜிபான தொழுகையின் நிய்யத்தைக் கொண்டு தொழவேண்டும் .

விடயம் 1201: மஃரிப் இஷா நேரம் முடிவடைந்த பிறகு ஒருவர் ஒரு தொழுகையே தொழுதார் என அவருக்கு தெரியும் ஆனால் அது மூன்று ரகஅத்து தொழுதாரா அல்லது நான்கு ரகஅத்து தொழுதாரா என அறியாது போனால் இந்நிலையில் அவர் மஃரிப் , இஷாவுடைய கழாத் தொழுகையை தொழவேண்டும் .

4. அதிகமாக சந்தேகிப்பவனின் சந்தேகம்.

விடயம் 1202:  வழக்கத்திலே அதிகமாக சந்தேகிப்பவனை அறியும் முறையைக் கணிக்கப்படும் . ஒருவர் தொழுகையில் மூன்று முறை சந்தேகப்படுகிறான் . அல்லது தொடர்ச்சியாக மூன்று சந்தேகப்படுகிறான் . உதாரணமாக சுபஹ் , ளுஹர் , அஸர் தொழுகையில் சந்தேகப்படுவதைப் போல . இவன் அதிகமாக சந்தேகிப்பவன் ஆகும் . ஆனால் அவனது சந்தேகம் கோபம் , பயம் இன்னும் அழுத்தக்குறைவு மூலமாக இல்லாதிருந்தால் அந்நிலையில் அவரது கவனத்தில் எடுக்க கூடாது .