Index Next

ஷரீஅத் சட்டக் கோவை

பின்பற்றுவதுடைய சட்டங்கள்

விடயம் 1: மார்க்கத்தின் அடிப்படை வியங்களில் ( உசூலுத்தீனில் ) மனிதன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் . இது எந்த வகையில் ஏற்பட்டாலும் அது போதுமாகும் . அதாவது தான் படித்து ஆராய்ச்சி செய்வதின் மூலமாக அல்லது பெற்றோர்கள் அல்லது தீன் பிரச்சாரர்கள் மூலம் அது ஏற்பட்டாலும் போதுமாகும் .

விடயம் 2:  மனிதர்கள் மார்க்கத்தின் அடிப்படையை ஒட்டிய பிரிவுகளில் தான் முஜ்தஹிதாக ( முப்தியாக) இருந்து தனது இஜ்திஹாதின் பிரகாரம் அமல் செய்ய வேண்டும் அல்லது வேறொரு முப்தியை இமாமைப் பின் பற்ற வேண்டும் . அதாவது அவர் சொல்வது போல் அமல் செய்ய வேண்டும் . அல்லது எவ்வாறு இஹ்தியாத் செய்தல் என்பதை அறிந்திருந்தால் இஹ்தியாத்தின் பிரகாரம் கடமையை சரிவர நிறைவேற்றினேன் என உறுதி கொண்டு அமல் செய்வான் . உதாரணமாக சில இமாம்கள் ஒரு செயலை ஹராம் என கருதுகிறார்கள் . இன்னும் சிலர் அதை ஹராம் இல்லை என கூறினால் அதை செய்யாதிருப்பான் . இன்னும் சிலர் ஒரு செயலை வாஜிப் என்றும் இன்னம் சிலர் அதை முஸ்தஹப் என்றும் கூறினால் அதை செய்வான் . அதேபோன்று இஹ்தியாத் எவ்வாறு செய்தல் என்பதில் கூட இஹ்தியாத் செய்வது வாஜிபாகும் . அதாவது இஹ்தியாத்தை செய்வது பல வழிகளில் முடியும் என்றிருந்தாலும் இஹ்தியாத்துடன் தொர்புடைய ஒரு வழியைத் தெரிவு செய்ய வேண்டும் .

விடயம் 3: முஜ்தஹித் அல்லாத பருவ வயதை அடைந்த ஒவ்வொருவரும் ஷரீஅத் விடயத்தில் ஒரு இமாமை பின் பற்றாது அமல் செய்தால் அவரது அமல்கள் எல்லாம் பாத்திலாகும் . அதாவது அவர் செய்த அமல்கள் போதுமாகும் என இருந்து விடக் கூடாது . கட்டாயமாக 13 வது விடத்தில் கூறப்பட்டிருப்பது போல் நடந்து கொள்ளவேண்டும் .

விடயம் 4: இஸ்லாமிய சட்டத்தில் பின் பற்றுதல் என்பது ஒரு இமாமுடைய கட்டளையின் பிரகாரம் அமல் செய்வதாகும் . பின் பற்றப் படும் இமாம் கீழ் வரும் நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும் . ஆணாக இருத்தல் , பருவ வயதை அடைந்திருத்தல் , புத்தி சாதுர்யமனவாக இருத்தல் , ஷீஆவாக இருத்தல் , நல்வழியில் பிறந்தவரக இருத்தல் , உயிரோடு இருத்தல் , நீதமானவராக இருத்தல் . நீதம் என்பது வாஜிபானவைகளை செய்து ஹராமானவைகளை செய்யாது விடுதற்கு சக்தி கொண்டிருத்தல் . இன்னும் பின்பற்றப் படும் இமாம் இஹ்தியாத் வாஜிபின் படி உலக ஆசை இல்லலதவராக இருத்தல் . அத்துடன் ஏனைய இமாம்களை விட அறிவில் உயர்ந்திருத்தல் அவசியமாகும் . அதாவது தனது காலத்தில் உள்ள ஏனைய முஜ்தஹிதீன்களை விட இறை சட்டத்தை விளங்குவதில் மற்ற முஜ்தஹிதீகளை விட அறிஞராக இருத்தல் .

விடயம் 5: அவர் நீதமானவரா என்பதை அவரது வெளிரங்க நடப்பில் இருந்து அறிந்து கொள்ள முடியும் . அதாவது அவருடன் போக்கு வரத்தை வைத்துக் கொண்டு அவரை பல தரப் பட்ட நிலமைகளில் இஸ்லாமிய விடயங்ளை கடைப்பிடிக்கின்றாரா என காணவேண்டும் . அல்லது அயல் வீட்டார்கள் , அல்லது அறிஞர்கள் அவரை நல்லவர் என்று உறுதிப் படுத்த வேண்டும் .

விடயம் 6: இரண்டு இமாம்கள் அறிவில் சமமாக இருந்தால் இஹ்தியாத் வாஜிபின் படி அவர்களில் பயபக்தி பேணுதல் கூடியவரைப் பின்பற்ற வேண்டும் .

விடயம் 7: சிறந்த கூடிய அறிவுள்ள இமாமை மூன்று வழிகளில் அறிந்து கொள்ள முடியும் .

1)         மனிதன் இவர் சிறந்த அறிஞர் என உறுதி கொள்ள வேண்டும் . அதாவது அவன் அதை அறிந்து கொள்வதற்கு சக்தியும் திறமையும் உடையவனாக இருக்க வேண்டும் .

2)         அறிவில் உயர்ந்த முஜ்தஹித் யார் என பிரித்தரியும் திறமையுடைய நீதமான இரண்டு மனிதர்கள் ஒருவரை அறிமுகப் படுத்த வேண்டும் . அத்துடன் இவ்விரு நீதமான மனிதர்களின் கருத்துக்களை வேறு இரு நீதமானவர்கள் எதிர்க்காமல் இருப்பது நிபந்தனையாகும் .

3)         ஒருவர் அறிவில் உச்ச கட்டத்தில் இருக்கின்றார் என மற்ற மனிதர்களுக்கு உறுதி ஏற்படும் அளவிற்கு நாடு பூராகவும் பரவியிருத்தல்.

விடயம் 8:கூடிய அறிவுடைய இமாமை அறிந்து கொள்வது கஸ்டமாக இருந்தால் சிறந்த அறிவாளி என நினைக்கம் ஒருவரைப் பின் பற்ற வேண்டும். அத்துடன் ஒருவர் இவர்தான் சிறந்த அறிவாளியாக இருக்கலாம் என கூறி மற்றவர் எவரையும் இவரும் இருக்கலாம் என கூறா விட்டால் சந்தேகத்துடன் கூறப் பட்டரையே பின் பற்ற வேண்டும். இன்னும் இரண்டு நபர் சமமான அறிவுடையவர்களாக இருக்கின்றார்கள் அல்லது அவர்களில் ஒருவர் அவர் அவரை விட கூடுதலான அறிவுடையவராக இருக்கலாம் என சொல்லப் பட்டு மற்றவரை கூறாது விட்டால் கூறப்பட்டவரையே பின் பற்ற வேண்டும். இன்னும் பலர் அறிவில் சமமாக இருந்தால் அவர்களில் விரும்பிய ஒருவரை பின் பற்ற வேண்டும் .

விடயம் 9:ஒரு இமாமுடைய பத்வா i வை , மார்க்கத் தீர்ப்பை மூன்று வழிகளில் பெற முடியும் அவையாவன

1)         முஜ்தஹித் ( இமாம்) கூற கேட்டல்

2)         இமாமுடைய தீர்ப்பை மற்றவர்களுக்கு சொல்லக் கூடிய இரண்டு நீதமான மனிதர்கள் சொல்லுதல். ஓரு மனிதர் சொல்வதில் சிறு பிரச்சி p னை இருக்கின்றது. மாறாக அவர் சொல்வதில் நமக்கு சந்தேகம் ஏற்படாமல் உறுதி ஏற்பட்டால் பிரச்சினை இல்லை.

3)         மார்க்க சட்டக் கோவையில் இருந்து பெற்றுக் கொள்ளுதல் , மனிதர்கள் அதை பூரணமாக நம்புமிடத்து அதாவது இது அச்சிடப் படுவதற்கு முன் இதை இமாம் அல்லது அறிவில் சிறந்தவர்கள் பார்யிட்டார்கள் என அவருக்கு உறுதியாகுதல்.

விடயம் 10:பின்பற்றறுதல் வாஜிபுகளிலும் ஹராம்களிலும் தான் கடமையாகும். சுன்னத்தான விடயங்களில் பின் பற்றுவது வாஜிபாக மாட்டாது. சில வேலைளில் கடமையாக இருக்கலாம் என இடம்பாடுள்ள முஸ்தஹப்புஹலில் பின் பற்றுவது கடமையாகும்.

விடயம் 11:மனிதனுக்கு சட்டக் கோவையில் இருக்கின்ற பத்வாக்கள் , மார்க்கத் தீர்ப்புகள் மாற்றம் பெற வில்லை னெ உறுதி இருக்கின்ற வரைக்கும் அதன் அடிப்படிடையில் அமல் செய்வான்.

விடயம் 12:ஒருவர் ஒரு இமாமை பின் பற்றிக் கொண்டிருக்கும் போது அவ் இமாம் மரணித்து விட்டால் இம் மனிதர் அவரையே பின் பற்ற முடியும். என்றாலும் மரணித்த இமாமும் உயிருடன் இருக்கின்ற இமாமும் அறிவில் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் அவர்களில் கூடிய அறிவுடையவரை பின்பற்ற வேண்டும்.

விடயம் 13:பல இமாம்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது அவர்கள் அனைவரும் சமமான அறிவுடைய வர்களாக இருந்தால் அவர்களில் ஒருவரைப் பின்பற்றிக் கொண்டிருந்த ஒருவர் அவரை விட்டு விட்டு மற்றவரைப் பின் பற்ற முடியும். ஆனால் அவர்களில் ஒருவர் மாத்திரம் கூடுதலான அறிவுடையவராக இருந்தால் அவரைப் பின்பற்றுவதே வாஜிபாகும்.

விடயம் 14:பின் பற்றும் இமாமுடைய பத்வா , மார்க்கத் தீர்ப்பு மாற்றம் பெற்று விட்டால் அதைப் பின்பற்றுவது கடமையல்ல.

விடயம் 15:பருவ வயதை அடைந்த ஒருவர் சிறு காலம் எவரையும் பின் பற்றாது அமல்களை செய்து அதன் எண்ணிக்கை எவ்வளவு என்றும் தெரியாது போனால் , அவர் செய்த அமல்கள் யாவும் அவர் பின்பற்றியிருக்க வேண்டிய இமாமின் பத்வாக்களுக்கு அமைய செய்யப் பட்டிருந்தால் அவை அனைத்தும் சஹீஹாகும். இல்லையென் றிருந்தால் எவ்வளவு ஞாபகம் இருக்கின்றதோ அவ்வளவை கழா செய்வது வாஜிபாகும்.

விடயம் 16:பருவ வயதை அடைந்த ஒவ்வொருவருக்கும் தனது சகல விடயங்களிலும் மார்க்க அறிவு கூடுதலாக உள்ள ஒரு இமாமைப் பின்பற்றுவது வாஜிபாகும்.

விடயம்  17: ஒரு இமாம் வணக்க வழிபாடுகள் சம்பந்தப் பட்ட விடயத்திலும் இன்னொரு இமாம் கொடுக்கல் , வாங்கல் , வியாபாரம் கம்பந்தப்பட்ட விடத்திலும் கூடுதலான அறிவுடையவர்களாக இருந்தால் , பருவ வயதை அடைந்தவர் பின்பற்றுதலை இரண்டாக பிரித்து  வணக்கம் சம்பந்தப் பட்ட விடயங்களில் முதலாமவரையும் , கொடுக்கல் , வாங்கல் , வியாபாரம் சம்பந்தமான விடயங்களில் இரண்டாமவரையும் பின்பற்ற வேண்டும்.

விடயம் 18:ஒருவர் அறிவில் கூடிய இமாம் யாரென தெரியாது அறிவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிற காலங்களில் இஹ்தியாத் தின் பிரகாரம் அமல் செய்வது வாஜிபாகும்.

விடயம் 19:ஒரு இமாம் ஒரு விடயத்தில் பத்வா , மார்க்கத் தீர்ப்பு கொடுத்தால் அவரைப் பின்பற்றுபவர்கள் அவ் விடத்தில் வேறொரு இமாமைப் பின்பற்ற முடியாது. மாறாக பத்வா கொடுக்காது இஹ்தியாத் வாஜிப் என்று சொன்னால் அவர்கள் இஹ்தியாத் தின் பிரகாரம் அமல் செய்வார்கள் அல்லது அவ்விடயத்தில் அவருடைய அறிவுக்கு சமமான அல்லது குறைந்த இமாமுடைய பத்வாவின் படி அமல் செய்வார்கள்.

சுத்தத்துடைய சட்டங்கள்
முத்லக்கான முளாபான தண்ணீர்

விடயம் 20:தண்ணீர் இரண்டு வகைப் படும். முத்லக் , முளாப் ஆகும்.  முளாபான நீர் :ஒரு பொருளிலிருந்து எடுக்கப் படும். உதாரணம் இள நீர் , அல்லது வேறொன்றுடன் கலக்கப்பட்டு அதற்கு தண்ணீர் என்று கூற முடியாத நீர் உதாரணம் தேனீர் , பன்னீர் , சர்பத்     இவை அல்லாத நீர் அனைத்தும் முத்லகான நீராகும். இது ஐந்து வகைப படும் 1- கூடுதலான நீர் (கொர்) 2- குறைந்த நீர் (கலீல்) 3- ஓடத்தண்ணீர் 4- மழை நீர் 5-கிணற்று நீர்

1- கூடுதலான(கொர்ரான) நீர்

விடயம் 21:ஒவ்வொரு பகுதியும் 3.5 (மூன்றரை) சாண் இருக்கின்ற பெரிய அகலமான நீளமான பாத்திரத்தில் அல்லது இடத்தில் ஊற்றுகின்ற போது அது நிரம்பினால் அதுவே கொர்ரான தண்ணீரின் அளவாகும். அது ஏறக்குறைய 377 கிலோ கிராம் ஆகும். (சுமார் 380 லீட்டர்)

விடயம் 22:கூடுதலான தண்ணீரில் சிறுநீர் , இரத்தம் போன்ற அய்ன நஜிஸிகள் விழுந்தால் அதன் மூலம் தண்ணீரின் நிறம் , மணம் , சுவை மாற்றம் பெற வில்லையென்றால் அது நஜிஸாக மாட்டாது. மாற்றம் அடைந்தால் நஜிஸாகி விடும்.

விடயம் 23:கூடுதலான நீரில் நஜிஸ் அல்லாதவைகள் விழுந்து அது மாற்றம் அடைந்தால் அந்நீர் நஜிஸாக மாட்டாது.

விடயம் 24: இரத்தம் போன்ற அய்ன நஜிஸ் கொர்ரான அளவை விட அதிகமாகவுள்ள நீரில் விழுந்து அந்நிரின் ஒரு பகுதியின் நிறம் , மணம் , சுவையை மாற்றினால் , நிறம் , மணம் , சுவை மாறாத மற்றப் பகுதியில் உள்ள நீர் கொர்ரான அளவை விட குறைவாக இருப்பின் சகல நீரும் நஜிஸாகி விடும். மாறாக எஞ்சிய நீர் கொர்ரான நீரின் அளவைக் கொண்டிருந்தாலோ , அல்லது அதை விடக் கூடுதலாக இருந்தாலோ நிறம் , மணம் , சுவை மாற்றம் அடைந்த பகுதி மாத்திரமே நஜிஸாகும்.

விடயம் 25:கூடுதலான நீரிலிருந்து குலாய் மூலம் மேலே நோக்கிச் செல்லும் நீர் துளி துளியாக மாறுவதற்கு முன் நஜிஸான நீருடன் சேர்தால் இஹ்தியாத் வாஜிபின் படி அதனுடன் கலந்தால் அது நஜிஸான நீரை   சுத்தப் படுத்தும். ஆனால் துளிதுளியானதின் பிறகு நஜிஸான நீருடன் சேர்ந்தால் அதை சுத்தப் படுத்த மாட்டாது.

விடயம் 26:கூடுதலான (கொர்ரான) நீருடன் இணைந்துள்ள ஒரு நீர்ப் பைப்பின் கீழ் நஜிஸான ஒரு பொருளை கழுவி அதிலிருந்து விழும் நீர் கொர்ரான நீழுடன் சேர்ந்து அதன் நிறம் , மணம். சுவை மாற்றம்பெற வில்லையெனில் அது சுத்தமாகும்.

விடயம் 27:கொர் அளவான நீரில் அறைவாசியை பணிக்கட்டி மறைத்து ஐஸ் கட்டியானால் எஞ்சியுள்ள நீர் கொர்ரான அளவை குறைவாக இருந்தால் அதில் நிஜஸ் விழுந்தால் அது நஜிஸாகி விடும். இன்னும் ஐஸ் கட்டியிலிருந்து தண்ணீராக மாறுபவையும் நஜிஸாகும்.

விடயம் 28:முன்பு கொர்ராக இருந்த தண்ணீரில் பின்பு அது குறைந்து விட்டதா ? இல்லையா ? என சந்தேகம் ஏற்பட்டால் அது கொர்ரான நீராகும். அதாவது நஜிஸ்களை சுத்தப்படுத்தம். அதில் நஜிஸ் விழுவது கொண்டு நஜிஸாக மாட்டாது. இன்னும் முன்பு குறைவாக இருந்த நீரில் கொர்ரான அளவை அதைந்திருக்கமா ? இல்லையா ? என சந்தேகம் ஏற்பட்டால் அது கொர்ரான அளவை விட குறைந்த நீரே ஆகும்.

விடயம் 29:கூடுமதான நீர் இரண்டு வழிகளில் உறுதிப் படுத்தப் படும். அவையாவன ,

1-         மனிதனுக்கு இது கொர்ரான நீர் தான் என உறுதி ஏற்பட வேண்டும்.

2-         நீதமான இரண்டு மனிதர்கள் சொல்ல வேண்டும். நீதமான ஒருவர் சொல்வதில் சிறு பிரசடசினை உள்ளது.

2- குறைவான (கலீலான) நீர்

விடயம் 30:மழை நீர் , கிணற்று நீர் , ஓட நீர் , கொர்ரான நீர் அல்லாதவைகளுக்கு குறைவான (கலீலான)நீர் என கூறப்படும்.

விடயம் 31:குறைவான நீரை நஜிஸான ஒரு பொருளின் மீது ஊற்றினாலோ அல்லது   நஜிஸான பொருள் அதை சேருகின்ற போது நஜிஸாகி விடும். மேலிருந்து நஜிஸ் மீது ஊற்றப் படும் நீரின் முன் பகுதி நஜிஸாகி விடும். ஆனால் இன்னும் நஜிஸை சேராத பகுதியை சுத்தமாவே கருதப் படும். இன்னும் குறைவான தண்ணீர்  கீழிருந்து வேகமாக மேல் நோக்கிச் சென்று அதன் மேற்பகுதி நஜிஸில் பட்டால் கீழ் பகுதி நஜிஸாகாது. ஆனால் கீழ் பகுதியில் நஜிஸ் பட்டால் அதன் மேற்பகுதி கூட நஜிஸாகி விடும்.

விடயம் 32:அய்ன நஜிஸை நீக்குவதற்காக நஜிஸடைந்த பொருளின் மீது ஊற்றப்படும் குறைவான தண்ணீர் அதிலிருந்து வடியும் போது அது நஜிஸாகும். எனவே அய்ன நஜிஸ் நீங்கியதன் பின் அப்பொருளை சுத்தப்படுத்து வதற்காக ஊற்றப்பட்ட பின் அதிலிருந்து வடியும் தண்ணிரிலிருந்தும் தம்மைத்  தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் மலம் , சலம் வெளியாகுமிடத்தை கழுகும் தண்ணீர் ஐந்து நிபந்தனைகளைக் கொண்டு சுத்தமாகும்.

1-         அது நஜிஸினுடைய நிறம் , மணம் , சுவையை கொண்டிருக்கக் கூடாது

2-         வெளியிலிருந்து அதில் நஜிஸ் ஏதும் பட்டிருக்கக் கூடாது

3-         இரத்தம் போன்ற வேறு நஜிஸ்கள் மலம் , சலத்துடன் வெளிவராது இருத்தல்

4-         தண்ணீரில் மலத்திலிருந்து அணுவளவாவது இல்லாதிருத்தல்

5-         நஜிஸ் குறிபிடப் பட்ட பொதுவான அளவை விட கூடுதலாக அதன் ஓரங்களில் படாதிருத்தல்