Back Index Next

3- ஓடத் தண்ணீர்

விடயம் 33: ஓரிடத்தில் தேங்கி நிற்காது ஓடிக் கொண்டிருக்கும் நீருக்கு ஓடத்தண்ணீர் என்று சொல்லப் படும். உதாரணம் ஊற்றுத் தண்ணீர் , கால் வாய் , நதி

விடயம் 34:ஓடத்தண்ணீர் கொர்ரான தண்ணீரின் அளவை விட குறைவாக இருந்து , நஜிஸ் அதில் விழுந்து நிறம் , மணம் , சுவை மாற்றம் அடைகின்ற வரைக்கும் அது நஜிஸாக மாட்டாது. சுத்தமானதேயாகும்.

விடயம் 35:ஓடத்தண்ணீரில் நஜிஸ் விழுந்து அதன் மூலம் அதில் ஒரு பகுதியில் நிறம் , மணம் , சுவை மாற்றம் பெற்றால் அது நஜிஸாகும்.ஊற்றுடன் இணைந்திருக்கும் அடுத்த பக்கம் கொர்ரான அளவை விட குறைவக இருந்தாலும் அது சுத்தமாகும்.

விடயம் 36:ஓடாத ஊற்றுத் தண்ணீர் , அதிலிலுந்து தண்ணீர் எடுக்கன்ற போதெல்லாம் மீண்டும் அது ஊறக் கூடியதாக இருக்கின்றது. அப்படியிருந்தால் அதில் நஜிஸ் விழுந்து நிறம் , மணம் , சுவை மாறாத காலமெல்லாம் அது சுத்தமானதாகும்.

விடயம் 37:ஆற்று ஓரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் ஓடக் கூடிய நீருடன் இணைந்திருக்கின்றது. அதில் நஜிஸ் விழுந்து நிறம் , மணம் , சுவை மாற்றம் அடையாமல் இருந்தால் அது சுத்தமாகும்.

விடயம் 38:மாரி காலத்தில் மாத்திரம் ஊற்றெடுத்து கோடை காலத்தில் ஊறாது இருக்கும் ஊற்று , அது ஊறிக் கொண்டிருக்கம் காலத்தில் மட்டும் அதில் நஜிஸ்கள் விழுவதினால் நிறம் , மணம் , சுவை மாறவில்லை என்றால் அது சுத்தமானதாகும்.

விடயம் 39:பாத்ரூமில் இணைக்கப் பட்டிருக்கும் பைப்புகள் கொர்ரான நீருடன் இணைந்திருந்தால் அதுவும் ஓடத் தண்ணீர் போன்றேயாகும். அதே போல் கட்டங்களில் இணைக்கப் பட்டிருக்கும் பைப் லைன்கள் கொர்ரான நீருடன் இணைக்கப் பட்டிருந்து அதில் நஜிஸ் விழுந்தால் நிறம் , மணம் , சுவை மாறால் இருக்கும் காலமெல்லாம் அது சுத்தமாகும்.

விடயம் 40:பூமியிலிருந்து ஊற்றெடுக்காத ஓடத்தண்ணீர் கொரடரான அளவை விட குறைவாக இருந்தால் இதில் நஜிஸ் விழுவது கொண்டு நஜிஸாகி விடும். ஆனால் தண்ணீர் மேலிருந்து கீழ் நோக்கி விழுந்தால் , நஜிஸ் அதன் கீழ் பகுதியில் பட்டால்  அதன் மேல் பகுதி நஜிஸாக மாட்டாது.

4- மழைநீர்  

விடயம்  41: அய்ன நஜிஸ் இல்லாத ஒரு நஜிஸான பொருளின் மீது ஒரு தடவை மழை பொழிந்தால் அது சுத்தமாகி விடும். விரிப்பு , ஆடை போன்ற வற்றை முறுக்குதல் அவசியமில்லை. ஆனால் இரண்டு , மூன்று துளி பேய்தல் போதுமாகாது மாறாக பார்ப்பவர்கள் மழை பெய்கின்றது எள்று சொல்லு மளவிற்கு மழை பெய்ய வேண்டும்.

விடயம்  42: மழை அய்ன நஜிஸ் மீது பெய்து வேறு இடங்களில் தெரித்தால் அய்ன நஜிஸ் அதில் இல்லை என்றிருந்தால் , இன்னும் நிறம் , மணம் , சுவை இல்லாதிருந்தால் அது சுத்தமாகும். அத்துடன் இரத்தத்தின் மீது மழை பெய்ந்து வேறு இடங்களில் தெரித்து , அதில் குருதியின் அணுகளவாவது இருந்தாலோ அல்லது குருதியின் நிறம் , மணம் , சுவை இருந்தாலோ அது நஜிஸாகும்.

விடயம்  43:  கட்டடத்தின் மேல் பகுதியில் அய்ன நஜிஸ் இருந்தால் மழை பொழிந்து கொண்டிருக்கின்ற போது நஜிஸில் பட்டு ஓட்டின் மூலமாக அல்லது மேற்பகுதியில வைக்கப் படும் குலாய்களின் மூலமாக வழிந்தால் அது சுத்தமாகும். மழை பெய்து முடிந்ததன் பிறகு வடியும் நீர் நஜிஸான பொருளை அடைந்தது என அறியப் பட்டால் அது நஜிஸாகும்.

விடயம்  44: நஜிஸான பூமியில் மழை பெய்வதின் மூலமாக அது சுத்தமடையும். இன்னும் மழை நீர் மண்ணில் ஓடி பந்தல் போன்று மறைக்கப் பட்டடிருக்கும் இடத்தில் நஜிஸ் இருந்து அங்கும் சென்றால் அதுவும் சுத்தமடையும்.

விடயம்  45: நஜிஸான மணல் மழை பெய்ததின் மூலம் களியாக மாறி தண்ணீர் அதை சூழ்ந்து கொண்டால் அது சுத்தமடையும்.

விடயம்  46: மழை நீர் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தால் , அது கொர்ரான அளவை விட குறைவாக இருந்தால் , மழை பெய்து கொண்டிருக்கின்ற போது அதில் நஜிஸான  ஒரு பொருளை கழுவினால் , நீரின் நிறம் , மணம் , சுவை மாற வில்லையென்றிருந்தால் அந்த நஜிஸான பொருள் சுத்தமடை யும்.

விடயம்  47: சுத்தமான விரிப்பு ஒன்று நஜிஸான மண்ணில் போடப்பட்டிருந்து மழை அதன் மேல் பெய்து நீர் ஓடினால் அந்த விரிப்பு நஜிஸாக மாட்டாது. மண்ணும் சுத்தமடையும் .

விடயம்  48: மழை நீர் அல்லது வேறு தண்ணீர் ஒரு பள்ளத்தில் ஒன்று சேர்ந்து அது கொர்ரான அளவை விட குறைவாக இருந்தால் , மழை முடிந்ததன் பிறகு அதில் நஜிஸ் பட்டால் அது நஜிஸாகி விடும்.

5- கிணற்று நீர்

விடயம் 49: மண்ணிலிருந்து ஊறும் கிணற்று நீர்  கொர்ரான அளவை விட குறைவாக இருந்தாலும் நஜிஸ் அதில் விழுந்து நிறம் ,மணம் ,சுவை மாற வில்லையென்றால் அது சுத்தமாகும்.

விடயம் 50: கிணற்றில் நஜிஸ் போடப் பட்டு அதன் நிறம் ,மணம் ,சுவை மாறினால் கிணற்றிலிருந்து தண்ணீர் ஊறும் நீர் அதனுடன் கலந்து நிறம் ,மணம் ,சுவையை மாற்றும் போது அது சுத்தமடையும்.

தண்ணீருடைய சட்டங்கள்

விடயம் 51: முளாபான நீர் எதையும் சுத்தப்படுத்த மாட்டாது. அதன் மூலம் வுழு செய்தாலோ அல்லது குளித்தாலோ அது பாத்திலாகும்.

விடயம்  52: நஜிஸில் அணுகளவாயினும் முளாபான நீரில் விழுந்தால் அந்நீர் நஜிஸாகி விடும்.ஆனால் முளாபான நீர் மேலிருந்து கீழேயுள்ள நஜிஸில் விழுந்தால் நஜிஸில் பட்ட தண்ணீர் மட்டும் தான் நஜிஸாகும். மேற்பகுதியில் உள்ள நீர் நஜிஸாக மாட்டாது. உதாரணமாக பன்னீர் போத்தலிலிருந்து கொஞ்ச பன்னீரை நஜிஸான கையில் ஊற்றினால் கையில் ஊற்றப் பட்ட பன்னீர் மாத்திரமே நஜிஸாகும். போத்தலில் உள்ளவை நஜிஸாக மாட்டாது. அதேபோல் பூரியிலிருந்து மோட்டர் குழாய் மூலமாக மேல் நோக்கிச் செல்லும் நீர் மேலே உள்ள நஜிஸில் பட்டால் அதன் கீழ்ப் பகுதி நஜிஸாக மாட்டாது.

விடயம்  53: நஜிஸான முளாபான நீர் கொர்ரான அல்லது ஓடத்தண்ணீருடன் கலந்து , அதற்கு முளாபான நீர் என்று சொல்ல முடியாதவாறு இருந்தால் அது சுத்தமாகும்.

விடயம் 54: முத்ளகாக இருந்து பின்பு முளாபாகியதா இல்லையா என்று தெரியாத நீர் முத்ளகான தண்ணீரைப் போன்றாகும். அதாவது நஜிஸானவற்றை  சுத்தப்படுத்தும். அதன் மூலம் குளித்தாலோ அல்லது வுழு செய்தாலோ சஹீஹாகும். ஆரம்பத்தில் முயாபாக இருந்த நீர் பின்பு முத்லகாகி விட்டதா இல்லையா என தெரிய வில்லை என்றால் அது முளாபான நீரேயாகும். அதாவது நஜிஸானவைகளை சுத்தப் படுத்த மாட்டாது. அதன் மூலம் குளித்தாலோ அல்லது வுழு செய்தாலோ அவை பாத்திலாகும்.

விடயம் 55: முத்லகான தண்ணீரா முளாபானதா என்று தெரியாத , முன்பு அது முத்லகாக இருந்ததா அல்லது முளாபாக இருந்ததா என்று தெரியாத தண்ணீர் நஜிஸ்களை சுத்தப் படுத்த மாட்டாது. அதன் மூலம் குளித்தாலோ அல்லது வுழு செய்தாலோ அவை பாத்திலாகும்.  ஆனால் அது கொர்ரான அளவாக அல்லது அதை விட கூடுதலாக இருந்து அதில் நஜிஸ் விழுந்தால் அதற்கு நஜிஸானது என்று சட்டமில்லை.

விடயம்  56: சிறு நிர் , இரத்தம் போன்ற அய்ன நஜிஸ் தண்ணீரில் விழுந்து தண்ணீரின் நிறம் ,மணம் ,சுவை மாற்றம் அடைந்தால் அத்தண்ணீர் கொர்ரான அல்லது ஓடத்தண்ணீராக இருந்தாலும் சரி அது நஜிஸாகி விடும். ஆனால் வெளியில் இருக்கும் நஜிஸின் மூலமாக தண்ணீரின் நிறம் ,மணம் சுவை மாற்றம் அடைந்தால் அத் தண்ணீர் நஜிஸாக மாட்டாது.

விடயம் 57: சிறுநீர் , இரத்தம் போன்ற அய்ன நஜிஸ்கள் தண்ணீரில் விழுந்து அதன் நிறம் ,மணம் ,சுவை மாற்றம் அடைந்த நீர் , கொர்ரான அல்லது ஓட்டத்தண்ணீருடன் சேர்ந்தாலோ அல்லது அதன் மீது மழை பெய்தாலோ அல்லது காற்றும் மழையும் சேர்ந்து அதில் வீசினாலோ மழை பெய்து கொண்டிருக்கின்ற போது மழை நீர் குழாய் மூலமாக அதன் மீது விழுந்து ஓடினாலோ ,அதில் இருந்த மாற்றம் இல்லாது போனால் அது சுத்தமாகும். ஆனால் இஹ்தியாத் தே வாஜிபின் படி அத்தண்ணீர் கொர்ரான அல்லது ஓடத்தண்ணீருடன் கலக்க வேண்டும்.

வியடம் 58: முறுக்குதல் அவசியமில்லாத ஒரு நஜிஸான பொருளை கொர்ரான அல்லது ஓடத்தண்ணீரில் கழுவிய பின் அதிலிருந்து வடியும் நீர் சுத்தமாகும். ஆனால் ஆடை ,விரிப்பு போன்ற நஜிஸானவைகளை கழுவி முறுக்குவது அவசியமான பொருட்களை மெசினிலோ அல்லது வேறு பாத்திரத்திலோ வைத்து கழுவினால் இஹ்தியாத் தே வாஜிபின் பிரகாரம் அவை நஜிஸாகும்.

விடயம் 59: ஆரம்பத்தில் சுத்தமாக இருந்த நீர் பின்பு நஜிஸாகி விட்டதா இல்லையா என தெரியாது போனால் அது  சுத்தமாகும். இன்னும் ஆரம்பத்தில் நஜிஸாக இருந்து பின்பு சுத்தமானதா இல்லையாவென தெரியாது போனால் அது நஜிஸாகும்.

விடயம்  60: நாய் , பன்றி ,காபிர்கள் சாப்பிட்டு மிஞ்சியது நஜிஸாகும். அதை தின்பது ஹராமாகும். உண்பது ஹராமான மிருகங்கள் சாப்பிட்டு மிஞ்சியவைகளை தின்பது மக்ரூஹாகும்.

மலம் சலம் கழிப்பதின் சட்டம்

விடயம் 61: ஒவ்வொரு மனிதனும் மலம் சலம் கழிக்கின்ற போதும் ஏனைய நேரங்களிலும் தனது மர்மஸ்தானத்தை பருவ வயதடைந்த மற்றவர் களின் பார்வையயிலிருந்து மறைத்துக் கொள்வது கட்டாய கடமையாகும்.   மஹ்ரமான தனது சகோதரி ,தாய் ,சகோதரர் போன்றவர்காள இருந்தாலும் சரியே! அதே போன்று நல்லவை கெட்டவைகளை பிரித்தறியக் கூடிய பைத்திய காரன் ,சிறு பிள்ளைகளுடைய பார்வையிலிருந்தும் மறைக்க வேண்டும்.  ஆனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் தங்களது மர்மஸ்தானங்களை மறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

விடயம் 62: குறிப்பான ஒரு பொருளினால் தான் அதை மறைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கையால் மறைத்துக் கொண்டாலும் போதுமாகும்.

விடயம் 63: மலம் சலம் கழிக்கின்ற போது வயிறு நெஞ்சி போன்ற உடம்பின் முன் பகுதி கிப்லாவை முன்நோக்கியோ அல்லது பின் நோக்கியோ இருக்கக் கூடாது .

விடயம் 64: மலம் சலம் கழிக்கின்ற போது உடம்பின் முன் பகுதி கிப்லாவை முன்நோக்கியோ அல்லது பின் நோக்கியோ இருந்து  அவ்ரத்தை அதை விட்டும் திருப்பி வைத்தால் அது போதுமாகாது.  உடம்பின் முன் பகுதி கிப்லாவை முன்நோக்கியோ அல்லது பின் நோக்கியோ இருக்கக் கூடாது என்றால் , இஹ்தியாத் தே வாஜிப் ,அவ்ரத்தை கிப்லாவை முன் நோக்கியோ அல்லது பின் நோக்கியோ வைக்காதிருப்பதாகும்.

விடயம் 65: மலம் சலம் வெயிகாகும் இடத்தை சுத்தம் செய்யும் போதோ அல்லது இஸ்திப்ரா செய்யும் போதோ கிப்லாவை முன் நோக்கி நிற்பதில் பிரச்சிணை இல்லை.  இஹ்தியாத் தே முஸ்தஹப்பின் படி இந் விலையிலும் கூட  கிப்லாவை முன்னோக்காமல் பின்னோக்காது இருத்தல்.

விடயம் 66: மஹ்ரமல்லாதவர்கள் அவரது அவ்ரத்தை காணாதிருப்பதென்றால் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமர வேண்டுமென்ற நிர்பந்தா நிலை ஏற்பட்டால் ,கட்டாகமாக அதை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ இருக்க வேண்டும். அத்துடன் வேறு காரணங்களுக்காக கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ வேண்டுமென்ற நிர்பந்தா நிலை ஏற்பட்டால் அதிலும் தடையில்லை.

விடயம் 67: இஹ்தியாத் தே வாஜிபின் படி பிள்ளைகள் மலம் சலம் கழிக்கும் போது அவர்கள் கிப்லாவை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ அமர்த்தாதிருத்தல். ஆனால் பிள்ளை தானாகவே அமர்ந்தால் அதை தடுப்பது கடமையல்லை.

விடயம் 68: நான்கு இடங்களில் மலம் சலம் கழிப்பது ஹராமாகும்.

1-உரிமையாளர் அனுமதி கொடுக்காத ஒரு பக்க வழியுள்ள ஒழுங்கை கழித்தல்

2-மலம் சலம் கழிக்க அனுமதி கொடுக்காத ஒருவருக்கு சொந்தமான இடம் கழித்தல்

3-குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் வக்பு செய்யப் பட்டிருக்கும் இடத்தில் கழித்தல் உதாரணமாக சில மத்ரசாக்கள்.

4-முஃமினானவர்களின் கப்ரின் மீது ,அவர்களை  கேவலப் படுத்தும் நோக்கத்தில் கழித்தல்

விடயம் 69:  சிறு நீர் வெளியாகும் இடம் நீரைக் கொண்டேயல்லாது சுத்தமாக மாட்டாது.சிறு நீர் கழித்து முடிந்ததும் ஒரு முறை கழுவினால் போதுமாகும். இரண்டு முறை கழுவுவது முஸ்தஹப்பாகும். இயற்கையான இடத்தின் மூலம் சிறு நீர் வெளியாகாதவர்கள் கட்டாயமாக இரண்டு முறை கழுவ வேண்டும்.

விடயம் 70: மலம் வெளியாகும் இடத்தை தண்ணீரின் மூலம் கழுவினனால் அதில் எதுவும் இருக்க கூடாது. ஆனால் அதன் நிறம் ,மணம் இருப்பதில் பிரச்சிணையில்லை. இன்னும் முதல் தரம் கழுவும் போதே நன்றாக சுத்தமாகி மலத்தின் ஏதும் அதன் வட்டத்தில் இல்லையென்றிருந்தால் இரண்டாவது தடவை கழுவுவது அவசியல்ல.

விடயம் 71: கல்லு போன்றவைகளால் மலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்து அவ்விடம் நன்றாக சுத்தமாகி இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டாலும் சரி அந்நிலையில் தொழுவது பிரச்சினையில்லை.

விடயம் 72: மூன்று கல்லால் அல்லது மூன்று புடவைத்துண்டால் மலம் வெளியாகும் இடத்தை சுத்தப் படுத்த வேண்டுமென்பது அவசியமில்லை. என்றாலும் ஒரு கல்லு அல்லது ஒரு புடவையின் ஓரங்களாலும் சரி சுத்தம் செய்ய முடியும். ஆனால் மூன்று தடவைக்கு குறைவாக இருக்க கூடாது. ஆனால் வெளியாகும் இடத்தை மிருக எழும்பாலோ அல்லது மிருக மலத்தாலோ அல்லது கண்ணியப் படுத்தி பாதுகாத்து வைக்கக் கூடிய அல்லாஹ் போன்ற பெயர் எழுதப் பட்ட தாளினாலோ சுத்தம் செய்தால் அந்நிலையில் அவர் தொழ முடியாது.

விடயம் 73: மூன்று சந்தர்ப்பங்களில் மலம் வெளியாகும் இடம் தண்ணீரினால் மட்டுமே சுத்தமடையும்.

01-மலத்துடன் இரத்தம் போன்ற வேறு நஜிஸ்கள் வெளியாகுதல்

02-வெளியிலிருந்து நஜிஸ் மலம் வெளியாகுமிடத்தில் படுதல்

03-மலம் அதன் இடத்திலிருந்து வழமைக்கு மாற்றமாக ,கூடுதலாக ஓரங்களில் படுதல்

 இவை அல்லாத சந்தர்ப்பங்களில் மலம் வெளியாகும் இடத்தை தண்ணீராலும் கல்லு ,புடவை போன்றவைகளாலும் சுத்தம் செய்ய முடியும்

விடயம் 74: மலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்தேனா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் ,அவர் இதற்கு முதல்  மலம் சலம் கழித்ததன் பின் உடனடியாக சுத்தம் செய்பவராக இருந்தால் இஹ்தியாத் தே வாஜிபின் படி அதை சுத்தம் செய்வார்.