Back Index Next

ஹராமான முறையில் ஜுனுபானவனடைய வியர்வை

விடயம்  123: ஹராமான முறையில் முழுக்கு கடமையானவனுடைய வியர்வை நஜிஸ் இல்லை. ஆனால் பேணுதலுக்காக வேண்டி அதன் மூலம் அழுக்கடைந்த உடம்புடனோ அல்லது ஆடையுடனோ தொழக்கூடாது.

விடயம்  124: பெண்ணுடன் உடலுறவு கொள்வது ஆகாத , ஹராமான காலத்தில் ( உதாரணமாக ரமழான் மாதத்தில்) தனது மனைவியுடன் உடலுறவு கொண்டால் இஹ்தியாத் தே வாஜிபின் படி அவனுடைய வியர்வை பட்ட ஆடைகளை தொழுதற்காக பயன் படுத்தாது இருத்தல்.

விடயம்  125: ஆகாத முறையில் முழுக்குடையவனான ஒருவனுக்கு குளிக்க முடியாது போனால் அதற்கு பதிலாக தயம்மம் செய்வான். இஹ்தியாத் தே வாஜிபின் படி வியர்வையுடன் தொழுவதை தவிர்ந்து கொள்வான்.

விடயம்  126: ஒருவர் ஹராமான முறையில் முதலில் ஜுனுபாலியாகி (குளிப்பு கடமையானவனாக மாறி) பின் ஹலாலான பெண்ணுடன் உடலுறவு கொண்டால் இஹ்தியாத் தே வாஜிபின் படி வியர்வை பட்ட ஆடையுடன் தொழாது இருத்தல். ஆனால் முதலில் ஹலாலான பெண்ணுடன் உடலுறவு கொண்டு பின்னர் ஹராமான முறையில் சேர்ந்தால் அந்த ஆடையுடன் தொழ முடியும்.

நஜிஸ் உறுதியாகும் வழிகள்

விடயம்  127: ஒரு பொருள் நஜிஸாகியுள்ளது என்பது மூன்று வழிகளில் நிரூபனமாகும்.

01-       மனிதன் இது நஜிஸ் தான் என உறுதி கொள்ளுதல்.ஆனால் இது நஜிஸாகி இருக்கலாமென சந்தேகம் கொண்டால் அதைத் தவிர்ந்து கொள்வது அவசியமில்லை. ஆனால் இந்த சந்தேகம் பொதுமக்களிடத்தில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துமாயின் அதைத் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

02-       தனது கட்டுப்பாட்டில் இருக்கின்ற ஒருவர் கூறுதல். உதாரணமாக மனைவி , அல்லது அடிமை போன்றவர்கள் உம்மிடம் இருக்கின்ற பாத்திரம் அல்லது வேறு பொருட்கள் நஜிஸானவை என்று கூறினால் அது நஜிஸானதாகும்.

03-       நீதமான இரண்டு ஆண்கள் கூறுதல். நீதமான ஒருவராகிலும் இது நஜிஸ் என்று கூறினால் அதைத் தவிர்ந்து கொள்வது அவசியாகும்.

விடயம்  128: சட்டம் தெரியாததன் காரணத்தால் ஒரு பொருள் நஜிஸா அல்லது சுத்தமா என தெரியாது போனால் (உதாரணமாக ஹராமான வழியில் குளிப்பு கடமையானவனுடைய வியர்வை நஜிஸா அல்லது சுத்தமா என தெரியாதது போல் ) அவர் அந்த சட்டத்தை கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த சட்டம் தெரிந்திருந்து பின் ஒரு பொருளில் இது சுத்தமா அல்லது நஜிஸா என சந்தேகம் கொண்டால் ( உதாரணமாக இங்கு உள்ளது இரத்தமா இல்லையா ? அல்லது இங்குள்ள இரத்தம் நுளம்பினுயைடதா அல்லது மனிதனுடையதா ?) இந்நிலையில் அது சுத்தமானதாகும்.

விடயம்  129: நஜிஸான ஒரு பொருளில் ஒருவன் அது சுத்தமாகி விட்டதா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அது நஜிஸானதேயாகும். அதேபோல் முன்பு சுத்தமாக இருந்த ஒரு பொருளில் இது நஜிஸாகி விட்டதா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அது சுத்தமானதேயாகும்.

விடயம்  130: ஒரே மாதிரியுள்ள இரண்டு பாத்திரங்கள் அல்லது இரண்டு ஆடைகளில் ஒன்று நஜிஸாகியுள்ளது என தெரிந்திருந்து அது எதுவென்று தெரியாது போனால் அந்த இரண்டு பாத்திரங்கள் அல்லது ஆடைகளை பாவிப்பதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். ஆனால் அவருடைய ஆடை நஜிஸாகியதா அல்லது அவர் பாவிக்ககாத மற்றவருடைய ஆடை நஜிஸாகியதா என தெரியாது போனாலும் பேணுதலுக்காக வேண்டி தவிர்ந்து கொள்ள வேண்டும்.

சுத்தமான ஒரு பொருள் நஜிஸாகும் விதம்

விடயம்  131: நஜிஸான ஒன்று சுத்தமான ஒரு பொருளில் பட்டால் , இன்னும் அவ்விரண்டில் ஒன்று ஈரமாக இருந்து அதன் ஈரம் மற்றதில் படுமானால் சுத்தமான அந்த பொருள் நஜிஸாகி விடும். மாறாக நஜிஸான பொருள் ஈரமாக இருக்கின்றது அந்த மற்றதில் படக் கூடிய அளவிற்கு இல்லை என்றிருந்தால் சுத்தமான அந்தப் பொருள் நஜிஸாக மாட்டாது.

விடயம்  132: சுத்தமான பொருள் நஜிஸானதில் விழுந்தால் , மனிதன் அந்த இரண்டும் அல்லது அதில் ஒன்று ஈரமாக இருந்ததா இல்லையாவென சந்தேம் கொண்டால் , அந்த சுத்தமான பொருள் நஜிஸாகி விடும்.

விடயம்  133: ஒரு இடத்தில் இரண்டு பொருட்கள் இருக்கின்றன அதில் எது சுத்தமானது எது நஜிஸானது என ஒருவருக்கு தெரியாது போனால் , பின் சுத்தமான ஒரு பொருளின் ஈரம் அதில் பட்டால் அந்த சுத்தமான பொருள் நஜிஸாக மாட்டாது.

விடயம்  134: பூமி ஆடை போன்ற பொருட்கள் ஈரமானதாக இருந்து அதன் எப்பகுதியிலாவது நஜிஸ் பட்டால் அந்த இடம் நஜிஸாகிவிடும். ஏனைய பகுதிகள் சுத்தமானதாகும்.

விடயம்  135: எண்ணெய் போன்ற திரவமான பொருட்களில் நஜிஸ் விழுந்தால் அவை அனைத்தும் நஜிஸாகி விடும். மாறாக தின்மமான ஒன்றில் நஜிஸ் விழுந்தால் அது விழுந்த இடம் மாத்திரமே நஜிஸாகும். ஏனைய இடம் சுத்தமாகும்.

விடயம்  136: ஈ அல்லது அது போன்றவை நஜிஸான ஒன்றின் மீது அமர்ந்து பின் சுத்தமான ஈரமான ஒரு பொருளில் அமர்ந்தால் , அந்த ஈயுடன் அல்லது அது போன்றதுடன் நஜிஸ் சென்றது என மனிதனுக்கு தெரிந்தால் அந்த சுத்தமான பொருளும் நஜிஸாகும். இல்லையேல் அது சுத்தமானதாகும்.

விடயம்  137: உடம்பில் வியர்ரை இருக்கின்ற பகுதி நஜிஸானால் , அதன் ஈரம் வேறு இடங்களுக்கு சென்றால் , அந்த ஈரம் பட்ட இடம் எல்லாம் நஜிஸாகும். மாறாக அந்த ஈரம் உடம்பின் வேறு இடங்களுக்கு செல்ல வில்லை என்றால் அதன் ஏனைய இடங்கள் சுத்தமானதாகும்.

விடயம்  138: மூக்கு அல்லது தொண்டையிலிருந்து வரும் சலியில் இரத்தம் இருந்தால் , இரத்தம் இருக்கின்ற இடம் மட்டும் நஜிஸாகும் ஏனைய இடங்கள் சுத்தமாகும். மேலும் வாய் அல்லது மூக்கின் வெளிப் பகுதியில் பட்டால் , மனிதனுக்கு இதில் தான் நஜிஸான சலி பட்டது என உறுதியிருக்கும் இடம் மட்டும் நஜிஸாகும். இதில் பட்டதா இல்லையாவென சந்தேகம் இருக்கும் இடம் எல்லாம் சுத்தமானதாகும்.

விடயம்  139: கீழ்ப் பகுதியில் சிறு துவாரம் உள்ள ஒரு பாத்திரத்தை நஜிஸான இடத்தில் வைத்து பூமியிலிருந்து தண்ணீர் அதனுல் சென்றிருந்தால் அப்பாத்திரத்தில் உள்ள நீரும் நஜிஸாகும். மாறாக அப் பாத்திரத்தின் அடிப்பகுதி மண்ணில் படவில்லை என்றிருந்தால் அது சுத்தமானதாகும்.

விடயம்  140: ஏதாவது ஒன்று உடலுக்குல் சென்று நஜிஸில் பட்டால் , அது வெளியில் வரும் போது அதில் நஜிஸ் இல்லாது விட்டால் அது சுத்தமானதாகும். சுத்தப்படுத்தும் ஒரு கருவியை பின் துவாரத்தினுல் நுழைக்கப் பட்டால் , அல்லது ஊசி அல்லது கத்தி போன்றவை உடலுக்குள் சென்றால் , அது வெளியே வந்ததன் பிறகு அதில் நஜிஸ் பட்டிருக்க வில்லைனெறால் அது நஜிஸ் இல்லை. அதேபோன்றுதான் உமிழ் நீர் அல்லது மூக்கு சலி இரத்தத்தில் பட்டால் பின் வெளியே எடுத்துப் பார்க்கையில் அது இரத்தம் இல்லை என்றிருந்தால் இது நஜிஸ் இல்லை.

நஜிஸ்களுடைய சட்டங்கள்

விடயம் 141: குர்ஆனுடைய எழுத்தை அல்லது அதன் பேப்பரை நஜிஸாக்குவது ஹராமாகும். மேலும் நஜிஸானால் உடனடியாக அதை கழுவுவ வேண்டும்.

விடயம் 142: குர்ஆனுடைய மட்டை நஜிஸானால் அதை கட்டாயமாக கழுவ வேண்டும்.

விடயம் 143: இரத்தம் , செத்தவை போன்ற காய்ந்த அய்ன நஜிஸ் மீது குர்ஆனை வைப்பது உலக வலக்கில் அதன் சங்கையை அவமதிப்பதாக இருந்தால் ஹராமாகும். அதிலிருந்து குர்ஆனை எடுப்பது கட்டாகக் கடமை (வாஜிப்) ஆகும்.

விடயம் 144: நஜிஸான மையினால் குர்ஆனை எழுதுவது ஹராமாகும். அது ஒரு எழுத்தாக இருந்தாலும் சரியே! அது எழுதப்பட்டு விட்டால் கட்டாயமாக அதைக் கழுவ வேண்டும். அல்லது அது இல்லாது அழிந்து விடும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும்.

விடயம் 145: குர்ஆனை காபிர்களுக்கு கொடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். காபிருடைய கையில் குர்ஆன் இருந்தால் , முடியுமாக இருந்தால் அதை எடுக்க வேண்டும். ஆனால் குர்ஆன் கொடுப்பதன் நோக்கம் , அல்லது அவன் வைத்திருப்பதன் நோக்கம் அதைப் படித்து தீன் சம்பந்தமான ஆராய்சிகளை மேற்கொள்ள இருந்தால் பரவாயில்லை. மேலும் நஜீஸ் என கூறப்பட்ட காபிர் ஈரக்கையுடன் குர்ஆனை தொட மாட்டான் என மனிதனுக்கு கொடுப்பதில் பரவாயில்லை.

விடயம் 146: குர்ஆனுடைய தாள் அல்லது கண்ணியப்படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய ஒவ்வொரு பொருளு ம் ( இறை நாமம் அல்லது தூதருடைய பெயர் அல்லது இமாம்களுடைய பெயர் எழுதப் பட்ட கடதாசி போன்றவை) மலசல கூடத்தில் விழுந்தால் அதை எடுப்பது கஸ்டமாக இருந்தாலும் சரி எடுத்து தண்ணீரால் கழுவுவது வாஜிபாகும். இன்னும் அதை எடுக்கவே முடியாது என்றிருந்தால் இஹ்தியாத் தே வாஜிபின் படி அது இறந்து உக்கிப் போய் விட்டது என உறுதி வரும் வரைக்கும் அந்த மலசல கூடத்தைப் பாவிக்காது இருக்க வேண்டும்.

விடயம் 147: நஜிஸான ஒன்றை உண்பதோ அல்லது குடிப்பதோ ஹராமாகும். அதே போல் அய்ன நஜிஸை சிறுவர்களுக்கு ஊட்டுதலும் ஹராமாகும். ஆனால் சிறு பிள்ளை தானாகவே நஜிஸான உணவை உண்டாலோ அல்லது நஜிஸான கையால் உணவை நஜிஸாக்கி பின் அதை உண்டாலோ அதைத் தடுப்பது அவசியமில்லை.

விடயம் 148: நஜிஸான ஒன்றை விற்பதோ அல்லது வாடகைக்கு கொடுப்பதோ அது சுத்தமாக இருக்க வேண்டும் என நிபந்தனையிடப் பட வில்லையென்றால் தடையில்லை. இந்நிலையில் அது நஜிஸ் தான் என வாங்குபவருக்கு சொல்ல வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் அது சுத்தமாக இருக்க வேண்டும் என நிபந்தனையிடப் பட்டிருந்தால் வாங்குபவருக்கு சொல்ல வேண்டும்.

விடயம் 149: ஒருவர் நஜிஸான ஒன்றை உண்பதைக் கண்டாலோ அல்லது அவர் நஜிஸான ஆடையுடன் தொழு வதைக் கண்டாலோ அதை அவருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 150: ஒருவருடைய வீட்டின் ஒரு பகுதி அல்லது விரிப்பின் ஒரு பகுதி நஜிஸானால் , எவரெல்லாம் அந்த வீட்டில் நுழைகின்றார்களோ அவர்களது ஆடை அல்லது வேறு பகுதிகளில் நஜிஸ்களுடைய ஈரம் படுகின்றது என கண்டால் அதை அவருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 151: வீட்டுச் சொந்தக் காரர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உணவு நஜிஸாகியுள்ளதென அறிந்தால் கட்டாயமாக விருந்தாளிகளுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் விருந்தாளிகளில் ஒருவர் அறிந்தால் அதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 152: வாடகைக்கு கொடுத்த பொருள் நஜிஸானால் அல்லது நஜிஸான ஒன்றை வாடகைக்கு கொடுப்பதாக இருந்தால் , அப்பொருளை எடுப்பவர் அதை உண்பதற்கு , குடிப்பதற்கு பாவிப்பார் என தெரிந்தால் அவருக்கு அது நஜிஸானது என்று சொல்வது வாஜிபாகும்.

விடயம் 153: நல்லது கெட்டதை பிரித்தறியக் கூடிய பிள்ளை , கையில் இருப்பது நஜிஸ் என கூறினாலோ அல்லது அதை கவுவினேன் எனக் கூறினாலோ அது ஏற்றுக் கொள்ள கூடியதாகும்.

சுத்தம் செய்யக் கூடியவை

விடயம் 154 : நஜிஸ்களை சுத்தம் செய்யவதற்கு பதினொரு பொருட்கள் இருக்கின்றன. அவைகளை முதஹ்ஹிராத் எனப் படும்.

முதலாவது: தண்ணீர் , இரண்டாவது: மண் , மூன்றாவது: சூரியன் , நான்காவது: இஸ்திஹாலா , ஐந்தாவது: திராட்சைச் சாறு வினாக்கிரியாக மாறுதல் , ஆறாவது: இன்திகால் , ஏழாவது: இஸ்லாம் , எட்டாவது: தபயிய்யத் , ஒன்பதாவது: அய்ன நஜிஸ் இல்லாது போகுதல் , பத்தாவது: நஜிஸ் உண்ட மிருகத்தை துப்பரவு செய்தல் , பதினோராவது: முஸ்லிம் தலை மறைவாகுதல். இது ஒவ்வொன்றுடைய சட்டங்களும் இதன் பின் மிகவும் விரிவாக கூறப்படும் இன்ஷா அல்லாஹ்.

முதலாவது தண்ணீர்

விடயம் 155: கொர்ரான (கூடுதலான) நீர் நாங்கு நிபந்தனைக் கொண்டிருப்பின் நஜிஸான பொருட்களைக் சுத்தம் செய்யும்.

1 . முத்லகாக இருத்தல். இதன் படி பன்னீர் , தேனீர் போன்ற முளாபான நீர் நஜிஸ்களைச் சுத்தம் செய்ய மாட்டாது

2. சுத்தமானதாக இருத்தல்.

3. நஜிஸான ஒன்றைக் கழுவும் போது அந்நீரில் நஜிஸுடைய நிறம் , மணம் , சுவை இருக்கக் கூடாது.

4 . நஜிஸானதைக் கழுவியதன் பின்னால் அய்ன நஜிஸ் அதில் இல்லாதிருத்தல். மேலும் அத்தண்ணீர் குறைவானதாக இருந்தால் இந்த நாங்கு நிபந்தனைகளுடன் மேலும் பல நிபந்தனைகள் இருக்கின்றது அவை பின்னர் கூறப்படும்.

விடயம் 156: நஜிஸான ஒரு பாத்திரத்தை குறைவான தண்ணீரால் மூன்று தடவை கழுவ வேண்டும். ஆனால் கொர்ரான (கூடுதலான) நீரிலோ அல்லது ஓட்டத் தண்ணீரிலோ ஒரு தடவை கழுவினால் போதுமாகும். நாய் நக்கிய அல்லது நீர் குடித்த பாத்திரத்தை முதலாவது சுத்தமான மண்ணினால் கழுவவேண்டும். பின்னர் இரண்டு தடவை குறைவான நீரினால் கழுவ வேண்டும். அது கூடுதலான அல்லது ஓட்டத் தண்ணீரால் கழுவப் பட்டாலும் இரண்டு தடவை கழுவுவது இஹ்தியாத் தே வாஜிபாகும். ஆனால் மழை நீரினால் ஒரு தடவை கழுவினால் போதுமாகும். அதே போன்று தான் நாயுடைய வீனி விழுந்த பாத்திரத்தையும் முதலாவதாக கழுவுவதற்கு முன் மண் மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

விடயம் 157: நாய் வாய் போட்ட பாத்திரத்தின் வாய் சிறியதாக இருந்து , எவ்வகையிலும் அதை மண் மூலம் சுத்தம் செய்ய முடியாது இருந்தால் இந்நிலையில் அந்தப் பாத்திரம் சுத்தமாகும் தகுதியற்றதாகும்.

விடயம் 158: பன்றி உண்ட பாத்திரத்தை குறைவான நீரினால் ஏழு தடவை கழுவ வேண்டும். இஹ்தியாத் தே வாஜிபின் படி கூடுதலான அல்லது ஓட்டத்தண்ணீரிலும் எழு தடவை கழுவ வேண்டும். அதை மண் மூலம் கழுவுவது கடமையல்ல. ஆனால் மண் மூலம் சுத்தம் செய்வது இஹ்தியாத் தே முஸ்தஹப்பாகும்.

விடயம் 159: மதுபானத்தின் மூலம் நஜிஸான பாத்திரத்தை குறைவான நீரினால் கழுவுவதாக இருந்தால் அதை மூன்று முறை கழுவ வேண்டும். ஏழு முறை கழுவுவது சிறந்தது.

விடயம் 160: நஜிஸான களி மண்ணினால் அல்லது நஜிஸான நீரினால் செய்யப் பட்ட கூஸாவை கூடுதலான அல்லத ஓட்டத் தண்ணீரில் வைத்தால் , அத்தண்ணீர் படும் இடமெல்லாம் சுத்தமாகும். மேலும் அதன் உற்பகுதியை யும் சுத்தம் செய்ய வேண்டுமாயின் அந்நீரில் அதை முழுமையாக தாழ்த்த வேண்டும். வெறுமுனே ஈரத்தன்மை செல்லுதல் போதுமாகாது.

விடயம் 161: நஜிஸான பாத்திரத்தை குறைவான நீரினால் இரண்டு முறையில் சுத்தம் செய்ய முடியும். முதலாவது  மூன்று முறை அதை நிரப்பி பின் அந்த நீரை ஊற்றி விடுதல். இரண்டாவது மூன்று முறை கொஞ்ச நீரை அதனுல் ஊற்றுதல். ஓவ்வொரு முறையும் ஊற்றிய நீரை நஜிஸான எல்லா இடங்களிலும் படுமாறு நங்கு குளுக்குதல் வேண்டும். பின் அதை ஊற்றி விடுதல்.