Back Index Next

விடயம் 162: கிடாரம் , பரல் போன்ற பெரிய பாத்திரங்கள் நஜிஸானால் மூன்று முறை குறைவான நீரைக் கொண்டாயினும் சரி நிரப்பி அதை ஊற்றி விட்டால் அது சுத்தமடைந்து விடும். அதே போன்று தான் மூன்று முறை மேலிருந்து அதில் படுமாறு நீரை ஊற்றினால் , ஊற்றப்படும் நீர் அதன் எல்லா இடத்திலும் பட்டால் , பின் அதன் அடிப்பாகத்தில் சேர்ந்திருக்கும் நீரை ஊற்றி விடவேண்டும் பின் அந்த இடத்தை திரும்பக் கழுவ வேண்டும் இப்படிச் செய்தால் அது சுத்தமடைந்து விடும்.

விடயம் 163: நஜிஸான ஒன்றை அதில் இருக்கும் அய்ன நஜிஸை நீக்கியதன் பின் அதை ஒரு தடைவ அதிகமான அல்லது ஓட்டத்தண்ணீரில் அமிழ்த்தி நீர் அதன் எல்லா இடங்களிலும் படுமானால் அது சுத்தமடையும். விரிப்பு , ஆடை போன்றவைகளை அதிலி இருக்கின்ற நீர் வெளியேறும் வகையில் முருக்குவது இஹ்தியாத் தே வாஜிபாகும்.

விடயம் 164: சிறு நீர் மூலம் நஜிஸான ஒன்றை குறைவான நீரினால் சுத்தம் செய்ய விரும்பினால் , ஒரு தடவை அதில் தண்ணீரை ஊற்றி சிறு நீர் அதில் இல்லை யென்றிருந்தால் மீண்டும் ஒரு தடவை அதன் மேல் தண்ணீரை ஊற்றினால் அது சுத்தமடையும். ஆனால் ஆடை , விரிப்பு போன்றவற்றின் மீது ஊற்றினால் ஒவ்வொரு தடவைக்குப் பிறகும் அதில் எஞ்சியிருக்கின்ற நீர் வெளிவரும் வகையில் அடை முறுக்க வேண்டும்.

விடயம் 165: ஒரு பொருள் இருண்டு வயது பூர்த்தி அடையாத தாய்ப் பாலை மாத்திரம் அருந்தும் ஆண் பிள்ளையின் சிறு நீர் மூலம் நஜிஸடைந்தால் , ஒரு தடவை தண்ணீர் அதன் எல்லா இடங்களிலும் படுமாறு ஊற்றனால் அது சுத்தமாகி விடும். ஆனால் இஹ்தியாத் முஸ்தஹப் மீண்டும் ஒரு முறை அதில் நீர் ஊற்ற வேண்டும். அத்தோடு ஆடை , விரிப்பு போன்றவற்றையும் முறுக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

விடயம் 166: ஏதாவதொன்று சிறு நீர் அல்லாத வேறொன்றின் மூலம் நஜிஸானால் நஜிஸை நீக்கியதன் பிறகு ஒரு தடவை தண்ணீரை ஊற்றிய பின் நஜிஸ் அதில் இல்லாது போனால் சுத்தமடைந்து விடும். அத்துடன் முதல் தடவையில் நீரை ஊற்றும் போது அதிலிருக்கின்ற நஜிஸ் நீங்கினால் அது சுத்தமடையும். என்றாலும் ஆடை போன்றவற்றை அதில் இருக்கின்ற நீர் வெளிவரும் வகையில் முறுக்க வேண்டும்.

விடயம் 167: இரப்பர் பாய்  நஜிஸானால் , அதை கூடுதலான அல்லது ஓட்டத் தண்ணீரில் அமிழ்த்தி அய்ன நஜிஸ் நீங்கினால் அது சுத்தமாகும்.

விடயம் 168: போதுமை , அரிசி , சவர்க்காரம் போன்றவற்றின் வெளிப் பகுதி நஜிஸானால் கூடுதலான அல்லது ஓட்டத்தண்ணீரில் அமிழ்த்துவதன் மூலம் சுத்தமடையும். ஆனால் அவைகளில் உற்ப்பகுதி நஜிஸானால் சுத்தமடைய மாட்டாது.

விடயம் 169: ஒருவர் தண்ணிடம் இருக்கும் சவர்க்காரத்தின் உற்ப்பகுதியில் நஜிஸான நீர் சென்றதா இல்லையா என சந்தேகம் கொண்டால் அது ( உற்பகுதி)  சுத்தமானதாகும்.

விடயம் 170: அரிசி , இறைச்சி போன்றவற்றின் வெளிப் பகுதி நஜிஸானால் , அதை ஒரு பாத்திரத்தில் வைத்து மூன்று முறை குறைவான தண்ணீரை ஊற்றி பின் அதை வெளியே ஊற்றி விட்டால் அது சுத்தமடையும். ஆனால் முறுக்குவது அவசியமான ஒன்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை ஊற்றினால் ஒவ்வொரு தடவைக்குப் பிறகும் அதில் எஞ்சி யிருக்கின்ற எல்லா நீரையும் வெயியே ஊற்றி விட வேண்டும்.

விடயம் 171:கலர் பூசப்பட்ட அல்லது சாயம் போகக் கூடிய நஜிஸான ஆடைகளை ஓட்ட அல்லது கூடுதலான தண்ணீரில் அமிழ்த்தி , நீர் அதன் எல்லா இடங்களிலும் சேர்ந்தால் அது சுத்தமாகும். அத்தோடு அதை முறுக்குகையில் அதிலிருந்து முழாபான , ( குறைவான) அல்லது வர்ணம் கழந்த நீர் வந்தாலும் சரியே!

விடயம் 172:ஒரு ஆடையை கூடுதலான அல்லது ஓட்டத் தண்ணீரில் கழுவினால் , பின் உதாரணமாக அதில் இருக்கின்ற பாசி போன்றவற்றைக் கண்டால் , அவை அவ்வாடையில் நீர் படுவதைத் தடுத்திருக்கும் என சந்தேகம் கொண்டாலும் அவ்வாடை சுத்தமாகும்.

விடயம் 173:ஒரு ஆடையை கழுவியதன் பின் அதில் களிமண் அல்லது வேறு ஏதாவதைக் கண்டால் , அவை நீர் அவ்வாடையில் படுவதற்கு தடையாக இருக்க வில்லையென அறிந்தால் அது சுத்தமாகும். ஆனால் நஜிஸான நீர் களிமண்ணின் அல்லது அது போன்றவற்றின் உற்பகுதிற்குல் சென்றிருந்தால் அதன் வெளிப் பகுதி சுத்தமாகும். உற்பகுதி நஜிஸாகும்.

விடயம் 174 : நஜிஸான எந்தப் பொருளும் அதில் இருக்கின்ற அய்ன நஜிஸ் நீங்குகின்றவரைக்கும் அது சுத்தமாகாது. ஆனால் அதன்  நிறம் , மணம் இருந்தால் பரவாயில்லை. எனவே ஆடையில் இருக்கின்ற இரத்தத்தை சுத்தம் செய்து தண்ணீரால் கழுவிய பின் அதன் நிறம் அதில் இருந்தால் அது சுத்தமானதாகும். ஆனால் அந்த நிறம் மணத்தின் மூலம் நஜிஸின் சிறு சிறு துண்டுகள் அதில் இருக்கின்றது என உறுதி கொண்டாலோ அல்லது சந்தேகம் கொண்டாலோ அது நஜிஸாகும்.

விடயம் 175: நஜிஸான மேனியை கூடுதலான அல்லது ஓட்டத்தண்ணீரால் சுத்தம் சுத்தம் செய்தால் அம்மேனி சுத்தமடையும். பின் வெளியில் வந்து மீண்டும் தண்ணீருக்குல் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை.

விடயம் 176: வாயினுல் அய்ன நஜிஸ் விழுவது கொண்டு அதனுல் இருக்கின்ற உணவு , செயற்கைப் பல் , மிஸ்வாக் , உமிழ் நீர் போன்றவை நஜிஸாக மாட்டாது. அய்ன நஜிஸ் நீங்குவது கொண்டு அவை அனைத்தும் சுத்தமடைந்து விடும். மேலும் அதை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அவசியமுமில்லை.

விடயம் 177: தலை முடி , முகத்தில் இருக்கின்ற முடிகளை குறைவான நீரினால் கழுவினால் அதில் எஞ்சி இருக்கின்ற நீர் வெளியாகும் படி குடைய வேண்டும். மேலும் அடர்த்தியான முடி இல்லாதிருந்தால் குடையாது விட்டாலும் அவை வெளி வந்து விடும் என உறுதி கொண்டால் குடைய வேண்டிய அவசிய மில்லை.

விடயம்178: உடம்பின் அல்லது ஆடையின் ஒரு பகுதியை குறைவான நீரினால் சுத்தம் செய்தால் , அதற்கு அருகாமையில் இருக்கின்ற இடங்கள் பொதுவாக சுத்தம் செய்யும் போது நீர் அங்கு ஓடுவதனால் நஜிஸாகின்றன. என்றாலும் அந்த நஜிஸான இடங்கள் சுத்தமடையும் போது இவைகளும் சுத்தமடையும். அதே போன்று தான் சுத்தமான ஒன்று நஜிஸானதற்கு அருகில் இருந்தால் , சுத்தம் செய்வதற்காக அவ்விரண்டுக்கு ( சுத்தம் , நஜிஸ்) மேலும் நீரை ஊற்றப் பட்டால் , உதாரணமாக நஜிஸான ஒரு விரலைச் சுத்தம் செய்வதற்காக எல்லா விரலிலும் நீரை ஊற்றுகின்றனர். நஜிஸான நீர் எல்லா விரலிலும் படுகின்றது. இந்நிலையில் நஜிஸான அந்த விரல் சுத்தமடைந்தவுடன் மற்றைய எல்லா விரல்களும் சுத்தமடைந்து விடும்.

விடயம் 179: நஜிஸான இறைச்சி , இன்னும் கட்டிக் கொழுப்புக்களையும் ஏனையவைகளைப் போன்று கழுவப் படும். மேலும் உடம்பிலோ அல்லது ஆடையிலோ சிறிதளவு எண்ணெய் இருந்து அது அவைகளில் தண்ணீர் படுவதைத் தடுக்கக் கூடியதாக இல்லை என்றிருந்தால் நீரை ஊற்றுவதன் மூலம் சுத்தமடையும்.

விடயம் 180: பாத்திரமோ அல்லது உடம்போ நஜிஸானால் , பின் நீர் அதில் சேருவதைத் தடுக்கும் வகையில் எண்ணெய் அல்லது கொழுப்பு காணப்பட்டால் , தண்ணீரால் அதை சுத்தம் செய்வதற்கு முன் அவைகளை நீக்க வேண்டும் அப்போது தான் அது சுத்தமடையும்.

விடயம் 181 : அய்ன நஜிஸ் இல்லாத நஜிஸான ஒன்றை , கூடுதலான நீருடன் சேர்ந்துள்ள நீர் குழாயின் கீழ் வைத்து ஒரு தடவை கழுவினால் அது சுத்தமாகி விடும். மேலும் அய்ன நஜிஸ் அதில் இருந்தால் , அதை நீர்க் குழாய் மூலமாகவோ அல்லது வேறு பொருளாலோ நீக்கப்பட்டால் , அதைச் சுத்தம் செய்யப் பட்டு விழுகின்ற நீரில் நஜிஸின் நிறம் , மனம் , சுவை இல்லையென்றிருந்தால் அது சுத்தமாகும். மாறாக விழுகின்ற நீரில் அவை இருந்தால் , நஜிஸின் நிறம் , மனம் , சுவை இல்லாது நீர் விழுகின்ற வரைக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

விடயம் 182: ஒரு பொருளை கழுவி அது சுத்தமாகி விட்டது என்று உறுதி கொண்டு பின் அதில் இருந்த அய்ன நஜிஸை நீக்கினேனா இல்லையா வென சந்தேகம் கொண்டால் , அது காணப்பட்ட இடத்திற்கு நீர் சென்றுள்ளதென அறிந்தால் அப் பொருள் சுத்தமானதாகும்.

விடயம் 183: நீர் ஊற்றப்பட்டால் உறுஞ்சக் கூடிய கிரவல் பூமி நஜிஸானால் அதில் குறைவான நீரை ஊற்றினால் அதன் மேற்ப் பகுதி சுத்தமாகி விடும். ஆனால் அதன் கீழ்ப் பகுதி நஜிஸாகும்.

விடயம் 184 : கருங்கல் , வரண்ட கட்டியான கல்லில் நீர் ஊற்றப் பட்டால் உறுஞ்சாத பூமி நஜிஸானால் , குறைவான நீர் மூலமும் அதை சுத்தமாக்க முடியும். அதாவது தண்ணீர் ஓடுகின்ற அளவிற்கு அதில் ஊற்ற வேண்டும். அதில் ஊற்றப்பட்ட நீர் சிறு ஓட்டையின் மூலமாக வெளில் சென்றால் எல்லா இடமும் சுத்தமாகி விடும். ஆனால் அவ்வாறு ஓடாவிட்டால் பிடவை போன்றவற்றால் ஒத்தி எடுத்தால் , இஹ்தியாத் தின் படி இரண்டு தடவைகள் முன்பு செய்தது போல் நீரை ஊற்ற வேண்டும். அப்போது அது சுத்தமடையும்.

விடயம் 185: உப்புக் கல் போன்றவற்றின் வெளிப் பகுதி நஜிஸானால் குர் அளவான நீரை விடவும் குறைவான நீராலும் சுத்தம் செய்ய முடியும்.

விடயம் 186: நஜிஸான தூள் சீனியால் கட்டிச் சீனி ( சீனிக் கட்டி) செய்தால் , அதை கூடுதலான அல்லது ஓட்டத்தண்ணீரில் வைத்தாலும் அது சுத்தமடைய மாட்டாது.

2 பூமி

விடயம் 187: பூமி இந்த ஐந்து நிபந்தனைக் கொண்டு குதீ , பாதனியின் கிழ்ப் பாதத்தைச் சுத்தம் செய்யும். அவைகள்

முதலாவது: பூமி சுத்தமாக இருத்தல்

இரண்டாவது: பூமி காய்ந்ததாக இருத்தல்

மூன்றாவது: மலம் , சலம் மற்றும் கலி போன்ற நஜிஸாக்கப் பட்டவை பாதத்தின் கீழ் அல்லது பாதணியின் கீழ் இருந்தால் நடப்பதின்   மூலமாக அல்லது அதை மண்ணில் தேய்ப்பதின் மூலமாக நீங்கக் கூடியதாக இருத்தல்.

 நான்காவது: பூமி கல்லு , மண்ணாக இருக்க வேண்டும். இதனால் விரிப்பு , பாய் , புற்கள் போன்றவற்றின் மேல் நடப்பதால் கால்ப் பாதம் அல்லது பாதணியின் கீழ்ப்பகுதி சுத்தமடைய மாட்டாது.

 ஐந்தாவது: நடந்ததின் மூலமாக நஜிஸானதாக இருத்தல். அப்படியில்லாது நஜிஸானதாக இருந்தால் நடப்பதால் சுத்தமடையும் என்பதில் பிரச்சிணை உள்ளது.

விடயம் 188: கால்ப் பாதம் அல்லது பாதணியின் கீழ்ப் பகுதி , தாறு அல்லது பலகைகளால் போடப்பட்ட வீதிகளில் நடப்பதன் மூலமாக சுத்தமடைய மாட்டாது.

விடயம் 189: பாதம் மற்றும் பாதணியின் கீழ்ப் பகுதி சுத்தமடைவதற்கு பதினைந்து எட்டுக்களை விட கூடுதலாக நடக்க வேண்டும். அதை விட குறைவாக நடப்பதன் மூலமாகவும் இருக்கும் நஜிஸ் நீங்கி விடும் என்றிருந்தாலும் சரியே!

விடயம் 190: பாத்தில் அல்லது பாதணியில் இருக்கும் நஜிஸ் ஈரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது காய்ந்ததாக இருந்தாலும் நடப்பதன் மூலமாக சுத்தமடைந்து விடும்.

விடயம் 191 : நடப்பதின் மூலமாக நஜிஸான பாதம் அல்லது பாதணி சுத்தமடைந்ததன் பிறகு , பொதுவாக (நடக்கும் போது ) கலி மண்ணினால் அழுக்காகும் அதன் ஓரப்பகுதிகளும் சுத்தமானதாகும்.

விடயம் 192: முலங்காலினால் அல்லது கையினால் நடக்கும் ஒருவரது உள்ளங்கையோ அல்லது முலங்காலோ நஜிஸானால் நடப்பதின் மூலமாக அவை சுத்தமாக மாட்டாது. அதே போன்று தான் அசாவின் நுனிப் பகுதி , செயற்கைக் காலின் பாதம் , விலங்குகளில் லாடம் (விலங்குகளின் குதியில் பொருத்தப் படுபவை) , வாகனங்களின் டயறு , மற்றும் இது போன்றவை.

விடயம் 193: நடந்ததன் பின் பாதத்தில் அல்லது பாதணியின் கீழ் நஜிஸின் தெரியாத சிறு சிறு துண்டுகள் அதில் இருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதை நீக்க வேண்டும். ஆனால் நிறம் , மனம் அதில் இருப்பதில் பிரச்சினையில்லை.

விடயம் 194: பாதத்தின் அல்லது பாதணியின் மண்ணில் படாத பகுதி நடப்பதின் மூலமாக சுத்தமடைய மாட்டாது. அத்துடன் நடப்பதன் மூலம் கால் மோசையின் கீழ்ப் பகுதியும் சுத்தமடைய மாட்டாது. ஆனால் கால் மோசையின் கீல்ப் பகுதி தோலினால் செய்யப் பட்டிருந்தால் நடப்பதன் மூலமாக சுத்தமடையும்.

3 சூரிய ஓளி

விடயம் 195: சூரிய ஒளி பூமி , கட்டிடம் மற்றும் அதில் பொருத்தப் பட்டுள்ள கதவு , யன்னல் இன்னும் சுவருகளில் அடிக்கப் பட்டுள்ள ஆணி , அதை கட்டிடத்தில் ஒன்ராக கணிக்கப் படும் , போன்றவற்றை ஆறு சிபந்தனைகளைக் கொண்டு சுத்தம் செய்யும்.

முதலாவது: நஜிஸான பொருள் ஈரமாக இருக்க வேண்டும். காய்ந்ததாக இருந்தால் அதை ஏதாவதொன்றால் ஈரமாக்க வேண்டும் அப்போது தான் சுரிய ஒளி அதைச் சுத்தம் செய்யும்.

இரண்டாவது: அய்ன நஜிஸ் அதில் இருந்தால் சுரிய ஒளி அதில் படுவதற்கு முன் அதை நீக்கி விட வேண்டும்.

மூன்றாவது: வேறெதுவும் அதில் சூரிய ஒளி படுவதைத் தடுக்காது இருத்தல். எனவே திரை அல்லது மேகம் போன்றதற்கு பின்னாலிருந்து சூரிய ஒளி பட்டால் அப் பொருள் சுத்தமாக மாட்டாது. ஆனால் திரை அல்லது மேகம் மிகவும் மெல்லியதாக இருந்து சூரிய ஒளி படுவதை தடுக்க வில்லை என்றிருந்தால் அதில் பிரச்சினை இல்லை.

நான்காவது: சூரிய ஒளி மட்டுமே நஜிஸை காய வைக்க வேண்டும். எனவே உதாரணமாக நஜிஸ் காற்றுடன் கலந்த சூரிய ஒளியின் மூலமாக காய்நதால் அது சுத்தமடையாது. ஆனால் காற்று வீசுகின்றது என்று சொல்ல முடியாத அளவுக்கு அது இருந்து அப் பொருள் காய்ந்திருந்தால்  அதில் பிரச்சினையில்லை. அதாவது அதன் மூலம் அப் பொருள் சுத்தமடையும்.

ஐந்தாவது: நஜிஸ் உள்  சென்றிருக்கும் கட்டிடத்தினுல் சூரிய ஒளி  பட்டு அதன் மேல் பகுதியைக்  காயவைத்தால் அதன் மேல் பகுதி மாத்திரமே சுத்மடையும் அதன் உற்ப்பகுதி சுத்தமடைய மாட்டாது.

ஆறாவது: பூமிக்கும் சூரிய ஒளி படும் கட்டிடத்தும் இடையில் காற்று அல்லது வேறு எந்தவொரு தடையும் இல்லாது இருக்க வேண்டும்.

விடயம் 196: சூரிய ஒளி நஜிஸான பாயையும் சுத்தப் படுத்தும். அதே போன்று தான் மரம் , விதைகளையும் சுத்தம் செய்யும்.

விடயம் 197: சூரிய ஒளி பூமியில் பட்டால் , பின் ஒருவன் அது படும் போது அப்பூமி ஈரமாக இருந்ததா ? அல்லது இருந்த ஈரத்தன்மை சூரிய ஒளியின் மூலம் காய்ந்ததா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அப்பூமி நஜிஸாகும். அதே போன்று சூரிய ஒளி அங்கு படுவதற்கு முன்னர் அதிலிருந்த அய்ன நஜிஸ் நீக்கப் பட்டதா ? இல்லையா ? என்றோ அல்லது சூரிய ஒளி படுவதைத் தடுக்கக் மூடிய ஒன்று அங்கு இருந்ததா ? இல்லையாவென சந்தேகம் கொண்டாலும் அப்பூமி நஜிஸானதாகும்.