Back Index Next

விடயம் 738: இஷாத் தொழுகையின் கடைசி நேரம் இரவின் அரைவாசியாகும். மஃரிப் இஷாத் தொழுகை போன்றதற்காக வேண்டி இரவை சூரியன் மறைந்ததிலிருந்து சுபஹுடைய அதான் வரைக்கும் கணிக்க வேண்டும். இன்னும் தஹஜ்ஜுத் தொழுகை போன்றதற்காக இரவை சூரியன் உதிப்பதின் ஆரம்பம் வரைக்கும் கணிக்க வேண்டும் .

விடயம் 739: ஒரு காரணத்திற்காக , தடங்களுக்காக வேண்டி மஃரிப் , இஷாத் தொழுகையை இரவின் அரைவாசி வரைக்கும் தொழாது இருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி சுபஹுடைய அதானுக்கு முதல் அதா அல்லது கழா என்ற நிய்யத்தல்லாது தொழ வேண்டும்.

சுபஹ் தொழுகையி pன் நேரம்

விடயம் 740: சுபஹுடைய அதான் நெருங்குகின்ற போது கிழக்குப் பக்கம் இருந்து வெள்ளை நிறம் மேல் நோக்கி நகரும். அதை ' பஜ்ருல் அவ்வல் ' முதலாவது பஜ்ர் எனப்படும். கிழக்குப் பக்கம் அந்த வெள்ளை பரவுகின்ற போது அதை ' பஜ்ருஸ் ஸானி ' இரண்டாவது பஜர் எனப்படும். அதுதான் சுபஹ் தொழுகையின் ஆரம்ப நேரமாகும். சுபஹ் தொழுகையின் கடைசி நேரம் சூரியன் உதிப்பதாகும்.

தொழுகையின் நேரத்தின் சட்டங்கள்

விடயம் 741: ஒருவர் தொழுவதென்றால் அவர் அந்த தொழுகையின் நேரம் நுழைந்து விட்டதென உறுதி கொள்ள வேண்டும் அல்லது இரண்டு நீதமானவர்கள் தொழுகையின் நேரம் நுழைந்து விட்டதென கூறவேண்டும். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை இருக்கின்றது அதாவது 

விடயம் 742 : கண் பார்வை இல்லாதவர்கள் இன்னும் சிறையில் அடைபட்டு இருப்பவர்கள் இஹ்தியாத்து வாஜிபின் படி தொழுகையின் நேரம் நுழைந்து விட்டதென உறுதி கொள்கின்ற வரைக்கும் தொழ ஆரம்பிக்கக் கூடாது. ஆனால் ஒருவர் வானத்தில் நேரத்தை அறிய முடியாதவாறு தடைகள் இருந்தால் (உதாரணமாக கடும் மேகம் இன்னும் புழுதி சூழ்ந்த மேகம் இருப்பது போல்) எவருக்கும் தொழுகையின் நேரம் நுழைந்து விட்டதா என அறிந்து கொள்ள முடியாது இருந்தால் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் அதன் நேரம் நுழைந்து விட்டதென உறுதி கொண்டால் , அல்லது நுழைந்திருக்கும் என நுழைந்திருக்கும் சந்தேகம் கொண்டாலும் அந்த நேரத்தில் தொழ முடியும்.

விடயம் 743 : ஒருவர் தொழுகையின் நேரம் நுழைந்து விட்டதென உறுதி கொண்டால் அல்லது இரண்டு நீதமானவர்கள் உணர்வோடு நேரம் நுழைந்து விட்டதென சொல்லி அவர் தொழ ஆரம்பித்து தொழுது கொண்டிருக்கும் போது இன்னும் நேரம் நுழைய வில்லையென உணர்ந்தால் அவரது தொழுகை பாத்திலாகும். அதேபோல் தொழுது முடிந்த பிறகு இன்னும் நேரம் நுழைய வில்லையென அறிந்தால் நேரம் நுழைவதற்கு முதல் தொழுத அனைத்து தொழுகையும் பாத்திலாகும் , அதை திரும்பத் தொழவேண்டும். ஆனால் தொழுது கொண்டிருக்கும் போது நேரம் நுழைந்து விட்டதென உணர்ந்தால் அல்லது தொழுது முடிந்த பிறகு அவர் தொழுது கொண்டிருக்கும் போது நேரம் நுழைந்தது என உணர்ந்தால் அவரது தொழுகை சஹீஹாகும்.

விடயம் 744: ஒருவர் தொழுகையின் நேரம் நுழைந்த பிறகு தான் தொழுவேண்டும் என கவனிக்காது மறதியாக அல்லது பொடுபோக்காக இருந்து தொழுது , பின்னர் தொழுகை நேரம் நுழைந்த பிறகு தான் தொழுதார் என அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் தொழுகை அனைத்தும் அதன் நேரம் நுழைவதற்கு முதல் தொழப்பட்டது என அறிந்தால் அல்லது நேரம் நுழைவதற்கு முதல் தொழப்பட்டதா இல்லையா என அறியாது போனால் அவரது தொஐகை பாத்திலாகும். ஆனால் தொழுது முடிந்த பின் தொழுது கொண்டிருக்கும் போது அதன் நேரம் நுழைந்தது என அறிந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதை திரும்பத் தொழவேண்டும்.

விடயம் 745 : நேரம் நுழைந்து விட்டதென்ற உறுதியோடு தொழ ஆரம்பித்து , தொழுது கொண்டிருக்கும் போது நேரம் நுழைந்து விட்டதா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அவரது தொழுகை பாத்திலாகும். ஆனால் தொழுது கொண்டிருக்கும் போது நேரம் நுழைந்து விட்டதென உறுதி கொண்டிருந்து அது வரைக்கும் தொழுதவை நேரம் நுழைந்த பிறகு தொழப்பட்டவையா ? அல்லது அதற்கு முதல் தொழப்பட்டவையா என சந்தேகம் கொண்டால் அவரது தொழுகை சஹீஹாகும்.

விடயம் 746 : தொழுகையின் நேரம் மிகவும் குறைவாக இருந்து முஸ்தஹப்பான விடயங்களை செய்தால் அத்தொழுகையின் சில வாஜிபாத்துக்கள் அதன் நேரம் கடந்த பின் தொழப்படும் என்றிருந்தால் கட்டாயம் அந்த முஸ்தஹப்புக்களை செய்யாது விடவேண்டும். உதாரணமாக குனூத் ஓதுவதன் மூலமாக தொழுகையில் சிலவை அதன் நேரம் கழிந்த பிறகு தொழப்படும் என்றிருந்தால் குனூத்தை ஓதக் கூடாது. அவ்வாறு ஓதினால் பாவம் செய்து விட்டால். ஆனால் அவரது தொழுகை சஹீஹாகும்.

விடயம் 747 : ஒரு ரகஅத்துதான் தொழும் அளவுக்கு நேரம் இருக்கின்ற ஒருவர் அதை ' அதா ' வுடைய நிய்யத்துடனே தொழவேண்டும். ஆனால் வேண்டுமென இந்த நேரம் வரைக்கும் தொழுகையை பிற்படுத்தக்கூடாது.

விடயம் 748 : பிரயாணி இல்லாத ஒருவருக்கு சூரியன் மறைவதற்குல் ஐந்து ரகஅத்துக்கள் தான் தொழ முடியும் என்ற அளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் ளுஹரையும் அஸரையும் தொழவேண்டும். ஆனால் நேரம் குறைவாக இருந்தால் அஸர் தொழுகையை மட்டும் தொழுவார் பின்னர் ளுஹரைக் கழாச் செய்யவார். இன்னும் இரவின் அறைவாசி வரை நான்கு ரகஅத்துதான் தொழ முடியும் என்ற அளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் மஃரிபையும் இஷாவையும் தொழவேண்டும். ஆனால் நேரம் குறைவாக இருந்தால் முதலாவது இஷாவை ' அதா ' வுடைய நிய்யத்தை வைத்து தொழவேண்டும். பின்னர் மஃரிபை தொழவேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் படி மஃரிபை தொழும் போது ' அதா ' அல்லது ' கழா ' என நிய்யத்துச் செய்யாதிருத்தல்.

விடயம் 749 : பிரயாணியான ஒருவருக்கு சூரியன் மறைவதற்குல் மூன்று ரகஅத்துக்கள் தான் தொழ முடியும் என்ற அளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் ளுஹரையும் அஸரையும் தொழவேண்டும். ஆனால் நேரம் குறைவாக இருந்தால் அஸர் தொழுகையை மட்டும் தொழுவார் பின்னர் ளுஹரைக் கழாச் செய்யவார். இன்னும் இரவின் அறைவாசி வரை நான்கு ரகஅத்துதான் தொழ முடியும் என்ற அளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் மஃரிபையும் இஷாவையும் தொழவேண்டும். ஆனால் நேரம் குறைவாக இருந்தால் முதலாவது இஷாவை தொழவேண்டும். பின்னர் மஃரிபை தொழவேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் படி மஃரிபை தொழும் போது ' அதா ' அல்லது ' கழா ' என நிய்யத்துச் செய்யாதிருத்தல். இன்னும் இஷாத் தொழுகையை தொழுது முடிந்ததும் இரவின் அறைவாசி நேரத்தை அடைவதற்குல் மேலும் ஒரு ரகஅத் அல்லது அதை விட கூடுதலாக தொழ முடியும் என்றிருந்தால் உடனடியாக மஃரிபை ' அதா " வுடைய நிய்யத்துடன் தொழவேண்டும்.

விடயம் 750 : ஒவ்வொரு மனிதனும் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது முஸ்தஹப்பாகும். இது பற்றிய நிறைய சிபார்சு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதான் முதல் நேரத்தில் தொழாது அதை ஜமாத்தாக தொழுவதற்காக காத்திருப்பதைத் தவிர. அப்போது அதன் ஆரம்ப நேரத்தில் தொழாது பிற்படுத்தலாம்.

விடயம் 751 :ஒரு தடங்கு , காரணம் இருக்கின்ற ஒருவர் தொழுகையின் முதல் நேரத்தில் தொழ விரும்பி தயம்மும் செய்து கொண்டே தொழவேண்டும் என இருந்தால் அநத் காரணம் தொழுகையின் கடைசி நேரம் வரை இருக்கும் என நச்தேகம் கொண்டால் தயம்மும் செய்து தொழ முடியும். ஆனால் உதாரணமாக அவரது ஆடை நஜிஸாக இருந்து அல்லது வேறு காரணம் இருந்து அவை தொழுகையின் நேரம் செல்வதற்கு முதல் நீங்கி விடும் என சந்தேகம் இருந்தால் இஹ்தியாது வரிழபின் படி அந்த காரணம் நீங்குகின்ற வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு அவை நீங்க வில்லை என்றிருந்தால் தொழுகையின் கடைசி நேரத்தில் தொழவேண்டும். ஆனால் கடைசி நேரம் வரை காத்திருந்து அதில் தொழுகையின் வாஜிபுகளை மாத்திரம் தான் தொழ முடியும் என்ற அளவுக்கு பொறுமையாக அதாவது காத்திருக்க கூடாது. மாறாக அதான் , இகாமத் , குனூத் போன்ற தொழுகையின் முஸ்தஹப்புகளும் செய்ய நேரம் இருந்தால் அப்போதும் நஜிஸான ஆடையுன் அந்த முஸ்தஹப்புக்களைச் செய்து தொழமுடியும்.

விடயம் 752 : தொழுகையின் விடயங்கள் இன்னும் அததில் ஏற்படும் சந்தேகங்கள் , மறதிகளின் சட்டங்கள் தெரியாத ஒருவர் , மேற்கூறியவைகளில் ஒன்று தொழுகையில் அவருக்கு ஏற்படும் என சந்தேகம் கொண்டால் இஹ்தியாது வாஜிபின் படி அந்த சட்டங்களை அறிந்து கொள்ள , படித்துக் கொள்ள தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் இருந்து பிற்படுத்த வேண்டும். ஆனால் தொழுகையை சரியான முறைப்படி தொழுவார் என உறுதி கொண்டிருந்தால் அதை அதன் ஆரம்ப நேரத்தில் தொழமுடியும். ஆனால் தொழுது கொண்டிருக்கும் போது சட்டம் தெரியாத விடயம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகப் படுகின்ற இரண்டு விதங்களில் ஒன்றின் படி நடந்து , ( அதாவது இரண்டு ரகஅத் கொழுதேனா அல்லது மூன்று ரகஅத் தொழுதேனா ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டால் அதில் ஒன்றைக் கடைப்பிடித்து) தொழுது முடிப்பார். பின்னர் அது பற்றிய சட்டத்தைக் கேட்பார். அப்போது அவரது தொழுகை பாத்திவாக இருந்திருப்பின் அதை திரும்பத் தொழுவார்.

விடயம் 753 : தொழுகையின் நேரமும் கூடுதமலாக இருந்து , கடன் காரரும் அவரது கடனைக் கேட்டால் முடியுமாக இருந்தால் முதலில் கடனைக் கொடுத்து விட்டு பின்னர் தொழவேண்டும். அதேபோல் தான் உடனடியாக செய்ய வேண்டிய வஜிபான வேலையும் இருந்தால் முதலில் அதைச் செய்ய வேண்டும் பின்னரே தொழவேண்டும். உதாரணமாக பள்ளி வாயலில் நஜிஸ் இருப்பதைக் கண்டால் முதலில் அதைச் சுத்தம் செய்து விட்டு பின்னரே தொழவேண்டும். அவ்வாறு செய்யா விட்டு தொழுதால் பாவம் செய்து விட்டார். ஆனால் அவரது தொழுகை சஹீஹாகும்.

ஒழுங்கு முறைப்படி தொழவேண்டிய தொழுகைகள்

விடயம் 754 : ஒவ்வொருவரும் அஸருடைய தொழுகையை ளுஹருடைய தொழுகைக்குப் பிறகும் இஷாவுடைய தொழுகையை மஃரிபுக்குப் பிறகும் தொழவேண்டும். ஆனால் ஒருவர் வேண்டுமென அஸருடைய தொழுகையை ளுஹருக்கு முன்பும் இஷாவுடைய தொழுகையை மஃரிபுக்கு முன்பும் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும்.

விடயம் 755 : ளுஹருடைய நிய்யத்தோடு தொழ ஆரம்பித்து தொழுது கொண்டிருக்கும் போது ளுஹரை தொழுது விட்டார் என்ற ஞாபகம் அவருக்கு ஏற்பட்டால் அந்த நிய்யத்தை அஸராக மாற்றி வைக்க முடியாது. தொழுகையை முறித்து அஸரைத் தொழவேண்டும். அதே போல் தான் மஃரிபு இஷாத் தொழுகையிலும்.

விடயம் 756 : அஸரைத் தொழுது கொண்டிருக்கும் போது ளுஹரைத் தொழ வில்லை என அவருக்கு உறுதி ஏற்பட்டால் அந்த தொழுகையின் நிய்யத்தை ளுஹராக மாற்றி அதைத் தொழுவார் இன்னும் தொழு கொண்டிருக்கையில் ளுஹரை தொழுதார் என அவருக்கு உறுதி ஏற்பட்டால் அந்த நிய்யத்தை அஸராக மீட்டி வைப்பார். ஆனால் ளுஹருடைய நிய்யத்துடன் தொழப்பட்ட தொழுகையில் ருகுன் இருந்திருந்தால் கட்டாயம் அதை பூரணமாக தொழுது விட்டு மீண்டும் அஸருடைய தொழுகையை தொழவேண்டும். ஆனால் அதில் ருகுன் இல்லையென்றிருந்தால் அப்பகுதியை மாத்திரம் அஸருடைய நிய்யத்துடன் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அதை திரும்பத் தொழவேண்டும் என்றிருந்தாலும் சரியே.

விடயம் 757 : அஸருடைய தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது ளுஹரைத் தொழுதேனா இல்லையா என சந்தேகம் அவருக்கு ஏற்பட்டால் , அதன் நிய்யத்தை ளுஹராக மாற்ற வேண்டும். ஆனால் அது தொழுது முடிந்ததும் மஃரிபாகி விடும் என்ற அளவுக்கு நேரம் மிகவும் குறைவாக இருந்தால் அதை அஸருடைய நிய்யத்துடன் தொழுது முடிக்க வேண்டும். பின் இஹ்தியாத்தின் படி ளுஹரை கழாச் செய்ய வேண்டும்.

விடயம் 758 :இஷா தொழுகையின் போது நான்காவது ரகஅத்தின் ருகூவுக்கு முதல் மஃரிப் தொழுதாரா இல்லையான என சந்தேகம் ஏற்பட்டால் , தொழுது முடிந்ததும் நேரம் இரவின் அறைவாசியாகி விடும் என்ற அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தால் கட்டாயம் இஷாவுடைய நிய்யத்தைக் கொண்டு அத்தொழுகையை முடிக்க வேண்டும். ஆனால் நேரம் அதிகமாக இருந்தால் நிய்யத்தை மஃரிபாக மாற்றி அதை மூன்று ரகஅத்தோடு முடித்துக் கொண்டு பின் இஷாத் தொழுகையை தொழவேண்டும்.

விடயம் 759 : இஷாத் தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது அதன் நான்காவது ரகஅத்தின் ருகூவுக்கு சென்ற பிறகு மஃரிப் தொழுதாரா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் முதலில் இஷாவைத் தொழுது முடித்து விட்டு பின்னர் மஃரிபை கழாச் செய்ய வேண்டும். ஆனால் இந்த சந்தேகம் இஷாவுக்கு குறிப்பான நேரத்தில் இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி மஃரிபை கழாச் செய்ய வேண்டும்.

விடயம் 760 : ஒருவர் மனிதர் தொழுத தொழுகைகளை (இஹ்தியாத்துக்காக) பேணுதலுக்காக திரும்பத் தொழுது கொண்டிருக்கும் போது அதற்கு முதல் தொழ வேண்டிய தொழுகையை தொழ வில்லை என அவருக்கு ஞாபம் ஏற்பட்டால் , இந்த தொழுகைக்காக வைத்த நிய்யத்தை அந்த தொழுகைக்காக மாற்ற முடியாது. உதாரணமாக அஸர்த் தொழுகையை பேணுதலுக்காக (இஹ்தியாத்துக்காக) தொழுது கொண்டிருக்கும் போது ளுஹர் தொழுகையை தொழ வில்லை என ஞாபகம் ஏற்பட்டால் அப்போது அஸர் தொழுகைக்காக வைத்த நிய்யத்தை ளுஹர் தொழுகைக்கு மாற்றி வைக்க முடியாது.

விடயம் 761 : கழாவான தொழுகைக்கு வைத்த நிய்யத்தை அதாவான தொழுகைக்கும் அதேபோல் சுன்னத்தான தொழுகைக்கு வைத்த நிய்யத்தை வாஜிபான தொழுக்கும் மாற்றி வைப்பது ஆகாது.

விடயம் 762 : இஹ்தியாது வாஜிபின் படி ஒரு தொழுகை கழாவானால் அத்தொழுகையை அடுத்து வரும் அதாவான தொழுகையை தொழுவதற்கு முதல் கழாச் செய்ய வேண்டும். ஒருவர் அதாவான தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது அன்றைய தினம் ஒரு தொழுகை அவருக்கு கழாவானது என ஞாபகம் வந்தால் இஹ்தியாது வாஜிபின் படி நிய்யத்தை கழாவான தொழுகையை நிறைவேற்றுகிறேன் என மாற்றி வைப்பார். இன்னும் ஒருவர் அதாவான தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது பல தினங்களுக்கு முதல் கழாவான ஒரு தொழுகை இருக்கின்றது என அவருக்கு ஞாபகம் வந்தால் அப்போது நிய்யத்தை கழாவான தொழுகையாக மாற்றுவது இஹ்தியாது முஸ்தஹப்பாகும். முந்திய இரண்டு நிலையில் (அதாவது 1. கழாவான தொழுகையை அன்றைய தினமே கழாச் செய்ய வேண்டும். 2. தொழுது கொண்டிருக்கும் போது ஞாபகம் வந்தால் கழாவானது அத்தினத்துக்குறியதாக இருந்தால் , நிய்யத்தை கழாவான தொழுகைக்குறியதாக மாற்றவேண்டும்.) நேரம் குறிகியதாக இருந்தால் அல்லது இடத்தை விட்டும் சென்றிருந்தால் உதாரணமாக இன்றைய சுபஹ் தொழுகை கழாவாகியுள்ளது அது ளுஹர் தொழுகையின் மூன்றாம் ரகஅத்தின் ருகூஃவுக்கு சென்ற பின் ஞாபகம் வருவது போல். இந்நிலையில் அவர் நிய்யத்தை மாற்றிவைக்க முடியாது.