Back Index Next

சுன்னத்தான தொழுகைகள்

விடயம் 763 : சுன்னத்தான தொழுகைகள் அதகிமாக இருக்கின்றன அவைகளை ' நாபிலா ' என சொல்லப்படும். அன்றாட கடமையான தொழுகைகளை நிறைவேற்றுவதுடன் இத்தகைய நாபிலான தொழுகைகளையும் தொழுமாறு மிகவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவைகள் வெள்ளிக் கிழமை தவிர்ந்த நாற்களில் முப்பத்தி நான்கு ரகஅத்துக்களாகும். அதில் ளுஹருடைய சுன்னத்து எட்டு ரகஅத் இன்னும் அஸருடைய சுன்னத்து எட்டு ரகஅத் , நான்கு ரகஅத்  மஃரிபுடைய சுன்னத்து இன்னும் இரண்டு ரகஅத்து இஷாவுடைய சுன்னத்தாகும். இரவுத் தொழுகை பதினொரு ரகஅத்துக்களாகும். இன்னும் இரண்டு ரகஅத் சுபஹுடைய சுன்னத்தாகும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி இஷாவுடைய இரண்டு ரகஅத் சுன்னத்தையையும் இருந்த நிலையில் தொழ வேண்டும். அப்போது அது ஒரு ரகஅத்தாக கணிக்கப்படும். ஆனால் வெள்ளிக் கிழமைகளில் ளுஹர் , அஸருடைய சுன்னத்துக்களான பதினாரு ரகஅத்துக்களில் மேலும் நான்கு ரகஅத்தைக் சேர்க்கப்படும்.

விடயம் 764: இரவுத் தொழுகைகளின் பதினொரு ரகஅத்துக்களில் எட்டு ரகஅத்துக்களை இரவுடைய சுன்னத்தென்றும் (தஹஜ்ஜுத்துடையதென்றும்) , இன்னும் இரண்டு ரகஅத்தை ஷப்ஃ ( شفع ) உடையதென்றும் , ஒரு ரகஅத்தை வித்ருடையதென்ற நிய்யத்தோடும் தொழப்படும். இது பற்றிய முழு விபரங்களும் துஆவுடைய நூற்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

விடயம் 765 : சுன்னதான தொழுகைகளை இருந்த நிலையிலும் தொழ முடியும். ஆனால் இருந்த நிலையில் தொழுத இரண்டு ரகஅத் சுன்னதான தொழுகையை ஒரு ரகஅத்தாக கணிப்பது சிறந்ததாகும். உதாரணமாக ளுஹருடைய எட்டு ரகஅத் சுன்னத்தை இருந்து கொண்டு தொழ விரும்பினால் அவர் பதினாரு ரகஅத்துக்கள் தொழுவது சிறந்ததாகும். இன்னும் வித்ருடைய தொழுகையை இருந்த நிலையில் தொழ விரும்பினால் அவர் ஒரு ரஅத்துடைய இரண்டு தொழுகையை இருந்த நிலையில் தொழ வேண்டும்.

விடயம் 766 : பிரயாணத்தின் போது ளுஹர் , அஸருடைய சுன்னத்துக்கள் விழுந்து விடும். அதைத் தொழக் கூடாது. ஆனால் இஷாவுடைய சுன்னத்தை அது விரும்பப்படும் என்ற நிய்யத்துடன் தொழ முடியும்.

நாளாந்த சுன்னத்தான தொழுகையின் நேரங்கள்

விடயம் 767 : ளுஹருடைய சுன்னத்தான தொழுகைகள் ளுஹருக்கு முதல் தொழப்படும். அதன் நேரம் ளுஹரின் ஆரம்ப நேரத்தில் இருந்து அதற்குப் பிறகு நேரம் காட்டியின் நிழலில் ஏழில் இரண்டு பங்கு தெறிகின்ற வரைக்குமாகும். உதாரணமாக நேரம் காட்டியின் உயரம் எழுபது சென்றி மீட்டராக இருந்தால் , ளுஹருக்குப் பின் தெரிபடம் நிழல் இருவது சென்றி மீட்டரை அடையும் போது சுன்னத்தான தொழுகையின் கடைசி நேரமாகும்.

விடயம் 768 : அஸருடைய சுன்னதான தொழுகையும் அஸருக்கு முதல் தொழப்படும். அதன் நேரம் ளுஹருக்குப் பின் நேரம் காட்டியில் இருந்து வெளியாகும் நிழல் ஏழின் நான்கு பகுதியை அடையும் போதாகும். ஆனால் ஒரவர் ளுஹருடைய அல்லது அஸருடைய சுன்னத்தான தொழுகையை அதன் நேரம் சென்ற பிறகு தொழ விரும்பினால் , இஹ்தியாது வாஜிபின் படி ளுஹருடைய சுன்னத்தை ளுஹருக்குப் பிறகும் அஸருடைய சுன்னத்தை அஸருக்குப் பிறகும் தொழவேண்டும். அப்போது அதா அல்லது கழா என்ற நிய்யத்து வைக்க கூடாது.

விடயம் 769 : மஃரிபுடைய சுன்னத்து அது தொழுது முடிந்ததில் இருந்து சூரியன் மறைந்த பிறகு மேற்கு பக்க வானத்தில் தெரியும் செம்மேகம் இல்லாது போகின்ற வரைக்கும் தொழவேண்டும்.

விடயம் 770: இஷாத் தொழுகையுடைய சுன்னத் அது தொழுது முடிந்து இரவின் அறைவாசி வருகின்ற வரைக்கும் தொழவேண்டும். இஷாத் தொழுது முடிந்தவுடன் உடனடியாக தொழுவது சிறந்ததாகும்.

விடயம் 771 : சுபஹுடைய சுன்னத் சுபஹை தொழுவதற்கு முதல் தொழப்படும். அதன் நேரம் இரவின் அறைவாசி சென்றதில் இருந்து பதினொரு ரகஅத் தொழுகின்ற வரைக்குமாகும். ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி பஜ்ருல் அவ்வலுக்கு முதல் தொழக் கூடாது.

விடயம் 772 : இரவுத் தொழுகையின் நேரம் இரவின் அரைவாசியிலிருந்து சுபஹுடைய அதான் வரைக்குமாகும். சுபஹுடைய அதானுக்கு சற்று முன்னர் தொழுவது சிறந்ததாகும்.

விடயம் 773 : பிரயாணி இன்னும் இரவுத் தொழுகையை இரவின் அரைவாசிக்குப் பிறகு தொழுவது கஸ்டமான ஒருவர் அல்லது அந்த நேரத்தில் தூக்கத்திலிருந்து எழும்பமாட்டார் என்ற அச்சம் இருக்கும் ஒருவர் அதை இரவின் ஆரம்பப் பகுதியிலும் தொழமுடியும்.

குபைலாவுடைய தொழுகை

விடயம் 774: சுன்னத்தான தொழுகைகளில் குபைலாவுடைய தொழுகையும் ஒன்றாகும். இது மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் தொழப்படும். அதன் நேரம் மஃரிபு தொழுகைக்குப் பிறகு மேற்குப் பக்க வானத்தில் இருந்த செம்மேகம் இல்லாது போகின்ற வரைக்குமாகும். அது இரண்டு ரஅகத்தாகும். அதன் முதல் ரகஅத்தில் அல்ஹம்து சூராவை ஓதிய பிறகு மற்றொரு சூரா ஓதுகின்ற இடத்தில் இந்த அல்குர்ஆன் வசனத்தை ஓதவேண்டும்:

«وَذَاالنُّونِ اِذْ ذَهَبَ مُغاضِباً فَظَنَّ اَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِى الظُّلُماتِ اَنْ لا اِلهَ اِلاّ اَنْتَ سُبْحانَكَ اِنّى كُنتُ مِنَ الظّالِمينَ فَاسْتَجَبْنا لَهُ وَنَجَّيْناهُ مِنَ الغَمِّوَكَذلِكَ نُنْجِى الْمُؤمِنينَ ».

இரண்டாவது ரகஅத்தில் அல்ஹம்து சூராவுக்குப் பிறகு வேறு சூரா ஓதுகின்ற இடத்தில் இந்த வசனத்தை ஒதவேண்டும்:

وَعِنْدَهُ مَفاتِحُ الْغَيْبِ لا يَعلَمُها اِلاّ هُوَ وَيَعْلَمُ ما فِى البَرِّ وَالْبَحْرِ وَما تَسْقُطُ مِنْ وَرَقة اِلاّ يَعْلَمُها وَلا حَبَّة فىِ ظُلُماتِ الاَرْضِ وَلا رَطْب وَلا يابس اِلاّ فِي كتاب مُبين .

அதில் ஓதுகின்ற குனூத்தில் இதை ஓதவேண்டும்:

اَللّهُمَّ اِنّى اَسأَلُكَ بِمَفاتِحِ الغَيْبِ الَّتى لا يَعْلَمُها اِلاّ اَنْتَ اَنْ تُصَلِىّ عَلى مُحَمَّد وَآلِ مُحَمَّد وَاَنْ تَفْعَلَ بى كذا وكذا .

கதா கதா என்று வந்துள்ள இடத்தில் தங்களது தேவைகயைக் கேட்க வேண்டும். அதன் பின் இதை சொல்ல வேண்டும்:

اَللّهُمَّ اَنْتَ وَلِىُّ نِعْمَتى وَالْقادِرُ عَلى طَلِبَتى تَعْلَمُ حاجَتى فَأساَلُكَ بِحَقِّ مُحَمَّد وَآلِ مُحَمَّد عَلَيْهِ وَعَلَيْهِمُ السَّلامُ لَمَّا قَضَيْتَها لى .

கிப்லாவுடைய சட்டங்கள்

விடயம் 775: மக்காவில் இருக்கின்ற கஃபா எனப்படும் இறையில்லமே கிப்லாவாகும். கட்டாயம் அதை முன்னோக்கியே தொழவேண்டும். அதற்கும் தூரமாக இருப்பவர்கள் அதை முன்னோக்கி தொழுகின்றார் என்று சொல்கின்ற அளவு நின்று தொழுதால் போதுமாகும். அதேபோன்று மற்ற செயல் பாடுகளையும் கிப்லாவை முன்னோக்கியே செய்ய வேண்டும். உதாரணமாக விலங்குகளை அருத்தல். இந்நிலையில் கட்டாயம் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

விடயம் 776: நின்ற நிலையில் தொழ வேண்டிய ஒருவர் அவர் கிப்லாவை நோக்கி நிற்கின்றார் என்று பார்ப்வர்கள் கூறும் அளவுக்கு நிற்க வேண்டும். ஆனால் அவரது முழங்கால் இன்னும் கால் விரல்களின் முன்பக்கம் கிப்லாவை நோக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

விடயம் 777: இருந்த நிலையில் தொழ வேண்டிய ஒருவர் வழமை போல் இருக்க முடியாது போனால் இருக்கின்ற போது கால் பாதங்களை மண்ணிர் வைத்து இருக்க வேண்டும் ஆனால் தொழுகின்ற போது நெஞ்சும் வயிறும் கஃபாவை முன்னோக்கி இருக்க வேண்டும். ஆனால் கரண்டைக் கால் பகுதியியும் கிப்லாவை முன்னோக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

விடயம் 778: இருந்த நிலையில் தொழ முடியாத ஒருவர் தொழும் நேரத்தில் வலப்பக்கமாக உம்பின் முன் பக்கம் கிப்லாவை முன்னோக்குகின்ற அளவுக்கு ஒருக்கணைத்து தூங்கவேண்டும். அதற்கு முடியாது போனால் இடப்பக்கமாக உடம்பின் முன்பகுதி கிப்லாவை முன்னோக்கின்ற அளவுக்கு ஒருக்கணைத்துக் தூங்கவேண்டும். அதற்கும் முடியாது போனால் அவரது கால் பாதம் கிப்லாவை முன்னோக்குகின்ற அளவுக்கு மல்லாந்து தூங்க வேண்டும்.

விடயம் 779: இஹ்தியாதுடைய தொழுகை , மறந்து பின் நிறைவேற்றப்படும் ஸஜதா , தஷஹ்ஹுத் நிலையிலும் கட்டாயம் கிப்லாவை முன்னோக்க வேண்டும். இஹ்தியாதின் படி மறதிக்காக செய்யப்படும் ஸஜதா (ஸஹ்வி) லும் கிப்லாவை முன்னோக்க வேண்டும்.

விடயம் 780: சுன்னத்தன தொழுகைகளை நடந்து கொண்டும் , ( வாகனம் , புகை வண்டி , விமானம் , கப்பல் போன்றதில்) பிரயாணம் செய்து கொண்டிருக்கும் போதும் தொழ முடியும். ஒருவர் இந்த இரண்டு நிலையிலும் சுன்னத்தான தொழுகைகளை தொழ விரும்பினால் அப்போது கிப்லாவை முன்னோக்க வேண்டிய அவசியமில்லை.

விடயம் 781: தொழ விரும்பும் ஒருவர் கிப்லா எப்பக்கம் இருக்கின்றது என அறிந்து உறுதி கொள்வதற்காக முயற்சி செய்ய வேண்டும். இந்நிலையில் அவர் இரண்டு நீதமானவர்கள் தங்களது உணர்வை சான்றாக வைத்துச் சொல்வதைக் கேட்டும் , இன்னும் ஒருவர் தனது அறிவை ஆதாரமாக வைத்துச் சொல்வதைக் கேட்டு அதில் அவருக்கு உறுதி ஏற்பட்டால் அதை வைத்து அமல் செய்ய முடியும். இவைகளுக்கு  முடியாது போய் விட்டால் முஸ்லிம்களின் பள்ளி வாயல்களின் மிஹ்ராபுகள் , அல்லது அவர்களது கப்ருகளை மையமாக வைத்து திசை அறிந்து அமல் செய்ய வேண்டும். இன்னும் பாவியான அல்லது காபிரான ஒருவர் அறிவு ரீதியான சட்டத்தின் பிரகாரம் கிப்லாவின் திசை காட்டினால் இவர் கிப்லாவின் திசை என்ற நினைப்போடு தொழுதால் போதுமாகும்.

விடயம் 782: ஒருவர் கிப்லா இத்திசையில் தான் என நினைக்கின்றார் , அவர் அதை விட வேறு விதமாக முறையில் கிப்லாவின் திசையை அறிவதை பெற்றுக் கொண்டால் அவரது நினைப்பின் படி அமல் செய்ய முடியாது. உதாரணமாக ஒரு விருந்தாளி வீட்டுக்கு சொந்தக்காரரின் சொல்லைக் கேட்டு கிப்லா இந்த பக்கம் தான் கிப்லா என நினைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் கிப்லாவை வேறு வழிகளில் அறியும் ' கிப்லா காட்டி ' போன்றதை வைத்து கிப்லாவின் திசையை அறிந்தால் அப்போது  வீட்டுக்குச் சொந்தக் காரரின் சொல்லுக்கமைய அமல் செய்யக் கூடாது.

விடயம் 783: சாதாரணமான கிப்லா காட்டிகள் அவை பழுதில்லாது இருக்கின்ற போதே கிப்லாவை அறிவதற்கு சிறந்த கருவியாகும். மாறாக அது பழுதாக இருப்பின் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாது. அது சரியா இருக்கும் போது கிப்லாவை அறிவதற்கு அதுவே சிறந்த கருவியாகும்.

விடயம் 784: கிப்லாவுடைய திசையை அறியாத ஒருவர் , முஸ்லிம்களின் பள்ளி வாயல்களின் மிஹ்ராபுகள் , அவர்களின் அடக்கஸ்தளங்களை கவனித்து கிப்லாவின் திசையை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவர் தான் முயற்சி செய்து அல்லது சிறந்த கருவிகளைப் பயன் படுத்தி கிப்லாவின் திசையை அறிந்து கொண்ட போது பள்ளிவாயல்களிக் மிஹ்ராபு , முஸ்லிம்களின் அடக்கஸ்தளங்களை கிப்லாவை அறிவதற்கு ஒரு காரணமாக வைக்க முடியாது. ஆனால் இந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் பள்ளிவாயல் கட்டுகின்ற போதும் , மையித்துக்களை அடக்கம் செய்கின்ற போது கிப்லாவை திசையில் பெறிது கவணம் செலுத்த வில்லை என்ற சந்தேகம் அவருக்கு இருந்தால் அவர் தனக்கு இப்பகுதியில் தான் கிப்லா இருக்கன்றது என தனக்கு உறுதி இருக்கின்ற திசையை நோக்கி தொழுவார்.

விடயம் 785: கிப்லாவை அறிந்து கொள்ள எந்த கருவியும் இல்லாதிருந்தால் அல்லது முயற்சி செய்தால் அவரது முயற்சி பிரயோசணம் கொடுக்க வில்லை என்றிருந்தால்  இருந்தால் , நேரமும் அதிகமாக இருந்தால் கட்டாயம் நாங்கு பக்கமும் முன் நோக்கி தொழவேண்டும். நான்கு தொழுகைகள் தொழும் அளவுக்கு நேரம் இல்லை என்றிருந்தால் நேரம் இருக்கின்ற அளவுக்கு தொழவேண்டும். உதாரணமாக ஒரு தொழுகை மட்டும் தான் தொழும் அளவுக்கு நேரம் இருந்தால் ஒரு தொழுகையை அவர் விரும்பிய திசையை முன்னோக்கி தொழவேண்டும். மேலும் அவர் தொழும் திசையில் ஒரு பக்கத்தில் கிப்லா இருக்கின்ற என்ற உறுதியோடு தொழவேண்டும்.

விடயம் 786: கிப்லா இந்த இரண்டு திசையில் தான் இருக்கின்றது என ஒருவருக்கு உறுதி அல்லது சந்தேகம் இருந்தால் , கட்டாயம் அவர் அந்த இரு பக்கமும் தொழவேண்டும். ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி சந்தேகம் இருக்கின்ற போது நான்கு பக்கமும் தொழவேண்டும்.

விடயம் 787: கட்டாயம் பல பக்கம் தொழவேண்டிய ஒருவர் , ளுஹர் அஸர் அல்லது மஃரிபு இஷாவைத் தொழவிரும்பினால் முதலாவது தொழுகையை வாஜிபாக பல திசைகளில் தொழவேண்டியதை தொழுது முடித்து விட்டு பின்னர் இரண்டாவது தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.

விடயம் 788: கிப்லாவுடைய பக்கம் இது தான் என உறுதியில்லாத ஒருவர் , தொழுகை அல்லாத கிப்லாவை முன்னோக்கி செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய விரும்பினால் , உதாரணமாக விலங்கை அறுப்பதுர் போல் , அவர் கிப்லா என நினைத்த பக்கத்தை முன்னோக்கி அமல் செய்வார். அதற்கு முடியாது போனால் அவர் எத்திசையை முன்னோக்கி செய்தாலும் அது சஹீஹாகும்.

விடயம் 789: ஒரு திசையை இது தான் கிப்லாவுடைய திசை என நினைத்து ஒருவர் தொழுதால் , அவர் தொழுது கொண்டிருக்கும் போது அவரது நினைப்பு வேறொரு திசையை நாடினால் அவர் தொழுகையின் எஞ்சியிருப்பதை இரண்டாவது திசையை முன்னோக்கியே தொழவேண்டும். ஆனால் அவர் தொழுதவை கிப்லாவின் வலப்பக்கம் அல்லது இடது பக்கம் அல்லது பின்னோக்கி இருந்திருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி தொழுகையை புதிய திசையை நோக்கி திரும்பத் தொழவேண்டும்.

விடயம் 790: ஒருவர் கிப்லாவை அறிவதில் முயற்சி செய்யாது பொடுபோக்காக இருந்து தொழுது , அதன் பின் அவர் தொழுத திசையில் தான் கிப்லாவும் இருந்தது என்றிருந்தால் , அவரது தொழுகை அல்லாஹுக்காக வேண்டிருந்தால் அது சஹீஹாகும். ஆனால் தொழுது முடிந்ததும் கிப்லாவுடைய திசை அது இல்லை என அறிந்தால் அவரது தொழுகை பாத்திலாகும். அதை மீண்டும் தொழவேண்டும்.

விடயம் 791: ஆட்டு மந்தையை அல்லது ஒட்டகத்தை வேண்டுமென கிப்லாவுடைய திசைக்கு மாற்றமாக வைத்து அறுத்தால் அல்லது குர்பானி செய்தால் அந்த ஆட்டு மந்தை , ஒட்டகத்துடைய இறைச்சியை உண்ணுவது ஹராமாகும். ஆனால் கிப்லாவுடைய திசையை அறியாது போய் அல்லது அதை மறந்து அல்லது ஜாஹிலாக இருந்து கிப்லாவுடைய திசைக்கு மாற்றமாக வைத்து அதை அறுத்து அல்லது குர்பானி செய்யதால் அதன் இறைச்சியை உண்ணுவது ஹலால் ஆகும்.

தொழுகையில் உடம்பை மறைத்தல்

விடயம் 792: தொழுகையின் போது ஒரு ஆண் (அவரை எவறும் பார்க்காது இருந்தாலும் சரியே) தனது இரு அவ்ரத்துக்களையும் மறைக்க வேண்டும். தொப்புலிலிருந்து முழங்கால் வரைக்கும் மறைப்பது மிகவும் சிறந்தது.